இதயங்கனிந்த நன்றி தமிழ் கம்பூயூட்டருக்கு
கணினியில் இயங்குதளத்தினை அடிக்கடி நிறுவும் போது வன்தட்டின் ஆயுள் காலம் குறைந்து விடும். மேலும் தேவையில்லாமல் கணினியில் அப்ளிகேஷன்களை கணினியில் நிறுவி பின் நீக்கும் போது வன்தட்டிற்கு பிரச்சினை ஏற்படக்கூடும்.
வன்தட்டினை முறையாக பராமரிக்காமல் இருந்தால் ஆயுள்காலம் கண்டிப்பாக குறைந்துவிடும். சில நேரங்களில் கணினியில் ஒன்றுக்கு மேலான அப்ளிகேஷன்களில் பனியாற்றிக்கொண்டிருக்கும் போது தீடிரென கரன்ட் இல்லாமல் கட் ஆகிவிடும். அப்போது கணினியில் நிலை கண்டிப்பாக பாதிக்கப்படும். மேலும் வன்தட்டானது சில நேரங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும். ஊதா நிற விண்டோ தோன்றி வன்தட்டானது சரியாக இல்லை அதை மாற்றம் செய்ய சொல்லும்.
இதுபோன்ற பிரச்சைகள் வரும் முன்னரே நம் கணினியில் வன்தட்டில் என்ன நிலையில் உள்ளது என்பதை நம்முடைய இயங்குதளத்தின் உதவியுடன் அறிந்துகொள்ள முடியும்.
இதற்கு முதலில் வின்கீ+R கீகளை ஒருசேர அழுத்தவும். அப்போது Run சாளரப்பெட்டி திறக்கும். அதில் cmd என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அடுத்து கட்டளை பலகை ஒப்பன் ஆகும் அதில் wmic என்று உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும்.
அடுத்து diskdrive get status என்று தட்டச்சு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.
உங்கள் வன்தட்டானது நன்றாக இருந்தால் OK என்ற செய்தி வரும். மிகவும் நன்றாக இருப்பின் OK OK என்று வரும். அதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். கணினியினுடைய வன்தட்டின் நிலையை.
மீண்டும் இதயங்கனிந்த நன்றி தமிழ் கம்பூயூட்டருக்கு
வலைதளம் பெயரே சுப்பர்.முன்னால் ஆசை தோசை என்று சேர்த்து விடுங்கள்.
பதிலளிநீக்குஹார்ட் டிஸ்க் பராமரிப்பு பற்றிஅ தகவல் பயனுள்ளது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
பதிலளிநீக்கு