பிச்சைக்கார மன்னன் :
பெரு மன்னன் ஒருவன் வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரை கண்டான்.
அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெருமகிழ்சியுற்று தன்னிடமிருந்த ஏதாவது ஒரு
நன்கொடையைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான்.
முனிவரோ எதுவும் வேண்டாம் என் நிலைமையில்
மனத்திருப்தியை முழுவதும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைத்
தருகின்றன. இக் குகையில் நான் பாதுகாப்பாக உறங்குகிறேன். நீ ஒரு மன்னாதி மன்னன்
ஆனாலும் உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? நான் சுதந்திரமானவன்,
எனக்கு நாளை என்பது கிடையாது. நாளையப் பொழுதை ஆண்டவனிடம் விட்டு விடுகிறேன்.
அதனால் எனக்கு எவ்விதக் கவலையுமில்லை என்றார். அதற்குப் பேரரசனோ என்னைத் தூயவனாக்கவும்,
மகிழ்விக்கவுமே ஏதுனும் ஒன்றை நன்கொடையாக பெருக என்னோடு நகருக்குள் எழுந்தருள்க என்று அரண்மனைக்கு அழைத்தான். இறுதியில்
முனிவரும் அவனுடன் செல்ல இசைந்தார்.
அவரை அரண்மனைக்கு மன்னன் அழைத்து சென்றான்.
அங்கே, அவர், பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல செல்வமும் அதிகாரமும் எங்கு
விளங்கினதை கண்டார்.
மன்னன் முனிவரை காத்திருக்குமாறு கூறி, ஒரு
மூலைக்கு சென்று, இறைவா இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க
என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.
இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல
முற்பட்டார். அவர் செல்வதை கண்ட பேரரசன் அவரைப் பின் தொடர்ந்து, ‘நில்லுங்கள்; எனது நன்கொடையைப் பெறாது செல்கிறீர்களே!’ என்றான். முனிவர்
அவனை நோக்கி ‘மன்னா பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை, உன்னால் என்ன கொடுக்க
இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய்’ என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று, இறைவனிடம் ‘இதைத்தா அதைத்தா’ என்று நீ
வேண்டுவாயானால் அன்பிற்கும், வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு என்று கேட்டார்.
- சுவாமி விவேகானந்தர்
பதிவு முழுக்க (தலைப்பைத் தவிர) Font மாறி உள்ளது... கவனிக்கவும்...
பதிலளிநீக்குEx :
முதல் மூன்று வரிகள் :
À¢î¨ºì¸¡Ã ÁýÉý:
¦ÀÕ ÁýÉý ´ÕÅý §Åð¨¼Â¡¼î ¦ºýÈ¡ý. «íÌ ´Õ ÓɢŨÃì ¸ñ¼¡ý. «Å§Ã¡Î º¢È¢Ð §¿Ãõ ¯¨Ã¡Ê ÁýÉý ¦ÀÕÁ¸¢úÔüÚò ¾ýÉ¢¼Á
இந்தப் பதிவு Tscu_paranar (TSC11anjal) font கொண்டு எழுதப்பட்டது . கூகிள் இன்புட் டூல் மூலம் தமிழுக்கு பதிவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விரைவில் எல்லோருக்கும் தெரியும் வகையில் அமையும்
நீக்குதகவலுக்கு மிக்க நன்றி திரு. தனபால் அவர்களே
நீக்குநல்ல கேள்வி...
பதிலளிநீக்குஇப்போது உங்களுக்கு சரியாக தெரிகிறதா நண்பரே
பதிலளிநீக்குவருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே