ஞாயிறு, 16 மே, 2021

ஓவர் நைட்ல Realme பார்த்த வேலை; இந்தியாவின் Cheapest 5G Phone அறிமுகம்!

 ரெட்மி நோட் 10எஸ் அறிமுகமான நிமிடத்திலிருந்து அதை ஈடுகட்ட, ஓரங்கட்ட… முதலில் ரியல்மி 8 5ஜி மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது, இப்போது அதன் புதிய 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


    New Storage Variant of Realme 8 5G


ஹைலைட்ஸ்:
  • ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அறிமுகம்
  • மே 18 முதல் வாங்க கிடைக்கும்
  • இனிமேல் இது தான் இந்தியாவின் மிகவும் மலிவான 5ஜி போன்

ரியல்மி இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தனது தற்போதைய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் மலிவான பதிப்பை அறிமுகப்படுத்தியது. அது ரியல்மி 8 5ஜியின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பாகும்.

இது முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைவிட ரூ.1,000 மலிவானது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 8 5 ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.13,999 ஆகும்.


இந்த ஸ்டோரேஜ் மாடலுக்கான முதல் விற்பனை மே 18 ஆம் தேதி ரியல்மி வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் நடக்கும்.

சலுகைகளைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் மொபிக்விக் பேமண்ட்ஸ்களில் (ரூ.200 வரை) 10 சதவீத கேஷ்பேக் மற்றும் ஃப்ரீசார்ஜ் பேமண்ட்ஸ்களுடன் ரூ.75 கேஷ்பேக் போன்றவைகளை அறிவித்துள்ளது.

இப்போது வரை, ரியல்மி 8 5 ஜி இரண்டு பதிப்புகளில் 4 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு முறையே ரூ.14,999 மற்றும் ரூ.16,999 க்கு கிடைக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் ரியல்மி வலைத்தளத்திலும், பிளிப்கார்ட் இ-காமர்ஸ் வலைத்தளத்திலும் விற்கப்படுகின்றன.

Realme 8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

- டூயல் சிம் (நானோ)
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- ரியல்மி யுஐ 2.0

- 6.5 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
- 20: 9 திரை விகிதம்
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன்ட்ரெயில் கிளாஸ் பாதுகாப்பு

- மீடியா டெக் டைமன்சிட்டி 700 SoC
- ARM மாலி-ஜி 57 எம்சி 2 ஜி.பீ.யூ
- 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
- விர்ச்சுவல் ரேம்களாக மாற்றுவதற்கான டி.ஆர்.இ தொழில்நுட்பம்

- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 48 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎம் 1 முதன்மை சென்சார் (எஃப் / 1.8 லென்ஸ்)
- 2 மெகாபிக்சல் (மோனோக்ரோம், எஃப் / 2.4) போர்ட்ரெய்ட் லென்ஸ்
- 2 மெகாபிக்சல் (எஃப் / 2.4) மேக்ரோ லென்ஸ்
- நைட்ஸ்கேப், 48 எம் மோட், ப்ரோ மோட், ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ போன்ற கேமரா அம்சங்கள்

- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் (எஃப் / 2.1 லென்ஸ்)
- போர்ட்ரெய்ட், நைட்ஸ்கேப் மற்றும் டைம்லேப்ஸ் போன்ற செல்பீ கேமரா அம்சங்கள்

- 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ்
- பிரத்யேக ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (1 டிபி வரை) விரிவாக்கலாம்
- 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் - Accelerometer, ambient light, magnetometer மற்றும் proximity சென்சார்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

- 18W க்விக் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- அளவீட்டில் 162.5x74.8x8.5 மிமீ
- எடையில் 185 கிராம்.

Amazon Prime மெம்பர்களுக்கு பேட் நியூஸ்; இனி இந்த Plan கிடைக்காதாம்!

இந்தியாவில் அமேசான் நிறுவனம் அதன் ஒரு மாத கால ப்ரைம் சந்தாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. உடன் ஃப்ரீ ட்ரையல் சோதனையையும் நிறுத்துகிறது



அமேசான் நிறுவனம், இனி இந்தியாவில் மாதாந்திர ப்ரைம் மெம்பர்ஷிப்பை வழங்காது. அதாவது மாதத்திற்கு ரூ.129-க்கு அணுக கிடைத்த அமேசான் ப்ரைம் சந்தா இனிமேல் கிடைக்காது. மாறாக இந்த ஈ-காமர்ஸ் நிறுவனம் மூன்று மாத அல்லது வருடாந்திர ப்ரைம் மெம்பர்ஷிப்களைகளை மட்டுமே வழங்கும்.


என்ன காரணம்?

புதிய ரிசர்வ் வங்கி ஆணையைப் பின்பற்றுவதற்காக இந்த ஆரம்ப தொகுப்பு அகற்றப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைத் தொடர்ச்சியான ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதற்கான Additional factor of authentication-ஐ (AFA) செயல்படுத்துமாறு கேட்கிறது.

இந்தப் புதிய ஆணையை அமல்படுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரைம் சந்தாவின் மாதாந்திர சேவையை நீக்குவதை பிரதிபலிக்கும் வகையில் அமேசான் தனது ஆதரவு பக்கத்தை இது சார்ந்த தகவலை அப்டேட் செய்துள்ளது.

ஃப்ரீ ட்ரையலும் நிறுத்தப்பட்டுள்ளது!

இதுதவிர்த்து, ஏப்ரல் 27 முதல், தற்காலிகமாக அணுக கிடைக்கும் அமேசான் ப்ரைம் இலவச சோதனைக்கான புதிய உறுப்பினர் சேர்க்கையையும் நிறுத்தியுள்ளது.

ஆக இந்த நேரத்தில், ஒரு பயனர் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை வாங்க அல்லது அதை அப்டேட் செய்ய விரும்பினால், அவரால் மூன்று மாதங்கள் அல்லது வருடாந்திர சந்தாவை மட்டுமே வாங்க முடியும்.

அமேசான் ப்ரைமிற்கான மூன்று மாத சந்தாவின் விலை ரூ.329 ஆகும் மற்றும் ஆண்டு சாந்தாவின் விலை ரூ.999 ஆகும்.

2019 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது!

புதிய ரிசர்வ் வங்கி கட்டமைப்பானது முதலில் ஆகஸ்ட் 2019 இல் அறிவிக்கப்பட்டது மற்றும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் 30-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கெடு "வாடிக்கையாளர்களுக்கு எந்த அசௌகரியத்தையும் வழங்கக் கூடாது" என்பதற்காகவே நீட்டிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

புதுசா தியானம் பண்ண தொடங்குறீங்களா? அப்போ இந்த டிப்ஸ்லாம் ஃபாலோ பண்ணுங்க ஈஸியா இருக்கும்

 தியானம் என்பது நம் மனதையும் உடலையும் உற்சாகப்படுத்த பெரிதும் உதவுகிறது. தியானம் உங்க எண்ண அலைகளைக் கட்டுப்படுத்தி நினைத்ததை சாதிக்க உதவி செய்யும். உங்க தியானத்தின் மூலம் எந்த மாதிரியான நன்மைகளைப் பெற முடியும் இதை எப்படி செய்யலாமென அறிவோம்.


நம்முடைய மனநிலையை மேம்படுத்துவதில் தியானம் ஒரு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. தியானம் மேற்கொள்ளும் நபர்கள் நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளைப் பெறுகின்றனர். இது உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும்.


தியானம் என்பது மனரீதியான தெளிவான உணர்ச்சிபூர்வமான நிலையை அடைவதாகும். பண்டைய காலங்களிலிருந்து உலகம் முழுவதும் பல கலாச்சாரங்களில் தியானம் நடைமுறையில் உள்ளது. தியானத்தின் பயிற்சி, பல்வேறு நிலைகள், வகைகள் மற்றும் துணை வகைகளை உள்ளடக்கியது. தியானத்தின்போது உங்க எண்ணங்களைச் சுதந்திரமாக ஓட விட வேண்டும். தியானத்தின் நன்மைகள் உங்க மனதையும் உடலையும் பலப்படுத்தும். இது மனதை தளர்த்தும். சரி வாங்க அறிவியலின் படி தியானத்தின் நன்மைகளை நாம் அறிந்து கொள்வோம்.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது

இது பதட்டத்தை நிர்வகிக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. சுய விழிப்புணர்வு மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இது செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. வயதான காலத்தில் ஏற்படும் மறதி பாதிப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது.


​தியானம் உங்க மனதை அமைதிப்படுத்தும்

தியானத்திற்கு பிறகு நீங்கள் பெறும் நிதானமான உணர்வு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதயத் துடிப்பை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. சுவாசம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஒரு வகையான மனம்-உடல் மருந்தாகக் கருதப்படும் தியானம் உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தக்கூடும்.

ஆனால் தியானம் செய்வது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. உங்க எண்ண அலைகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நம் அன்றாட பிஸியான வாழ்க்கை முறையில் அமைதியான நேரத்தைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இருப்பினும் ஆரம்பத்தில் நீங்கள் தியானத்தில் ஈடுபடுகிறீர்கள் என்றால் அதற்கான சில எளிய முறைகள் இதோ...

​மெதுவாகச் செய்யுங்கள்

நீங்கள் தியானிக்க உட்கார்ந்தால் உங்கள் மனம் சுதந்திரமாகவும் எல்லா எண்ணங்களிலிருந்தும் விடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது. மெதுவாக உங்க மனதை அதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். உங்க மனதுக்கு கற்பியுங்கள். ஒன்றன் பின் ஒன்றாகச் சிந்திக்க வேண்டும்.

​வசதியாக உணருங்கள்

முதலில் தியானம் செய்வதற்கு வசதியான நிலையில் உட்காருவது அவசியம். சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து இருங்கள். நீங்கள் தரையிலோ அல்லது நாற்காலியிலோ உட்காரலாம். நீங்கள் குறுக்கு கால் போட்டோ அல்லது எந்த நிலை உங்களுக்கு வசதியாக உள்ளதோ அந்த நிலையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

​உங்க சுவாசத்தை கவனியுங்கள்

இது ஒரு எளிய செயல் மட்டுமல்ல தியானத்தில் முக்கியமான செயலும் கூட உங்க சுவாசத்தை கவனியுங்கள். உங்க வாய், வயிறு அல்லது மூக்கு வழியாகக் காற்று செல்வதை கவனியுங்கள். ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து உங்க வயிற்றை விரிவடைய செய்து மெதுவாக வெளியே விடுங்கள். 2 நிமிடங்கள் மூச்சு பயிற்சி செய்யுங்கள்.

​உங்க நேர அளவை திட்டமிடுங்கள்

ஆரம்பத்தில் தியானத்தில் ஈடுபடுபவர்கள் நேர வரம்பை நிர்வகியுங்கள். எடுத்த எடுப்பிலேயே நீண்ட நேரம் தியானத்தில் உட்கார்ந்தால் பிறகு அதிக சோர்வாகிவிடுவீர்கள். ஆரம்பத்திர் 5-10 நிமிடங்கள் எனத் தொடங்கி, நேர வரம்பை நிர்வகிக்கவும். உங்க நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுங்கள்.

​உங்க மனதை கட்டுக்குள் வையுங்கள்

தியானத்தின்போது உங்க மனம் அலைந்து திரிந்தால் கவலைப்பட வேண்டாம். உங்க மனம் மற்ற இடங்களில் கூடக் கவனம் செலுத்தலாம். கவனச் சிதறல் ஏற்படலாம். உங்க கவனம் அலைந்து திரியும்போது உங்க மூச்சின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள் அவசரப்பட வேண்டாம். விழிப்புணர்வுடன் உங்க சுவாசத்திற்கு திரும்புங்கள்.

காட்சிப்படுத்துங்கள்

செயலில் கற்பனை கொண்டவர்களுக்கு இது உதவியாக இருக்கும். இது உங்க தியானத்தின் தரத்தையும் கவனத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் விரும்பும் எண்ணங்களைக் காட்சிப்படுத்துங்கள்.

​உங்க குரலைப் பயன்படுத்துங்கள்

தியானத்தின்போது மந்திரங்களை ஓதுவது சிறப்பாகக் கூறப்படுகிறது. தியானத்துடன் தொடர்புடைய பிரபலமான மந்திரம் என்று பார்த்தால் ஓம் என்பது தான். ஓம் என்று சொல்லும்போது அது உங்க மனதுக்குள்ளே ஒரு அமைதியான உணர்வை ஏற்படுத்துகிறது.

எளிதில் முடியுங்கள்

உங்க தியான அமர்வை முடிக்கும்போது மெதுவாகக் கண்களைத் திறந்து உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் அவதானிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்க உணர்ச்சி, உடல் மற்றும் எண்ணங்களைக் கவனியுங்கள்.

​தியானம் செய்ய உதவிக் குறிப்புகள்

ஒவ்வொரு சுவாசத்தையும் 1 முதல் 10 வரை எண்ணலாம், நீங்கள் 10 ஐ அடைந்ததும் மீண்டும் தொடங்கவும். நீங்கள் எப்போதும் உட்கார்ந்து தியானிக்க வேண்டியதில்லை, படுத்துக் கொள்ளுங்கள் அல்லது யோகா நித்ரா நிலையில் கூட நீங்கள் தியானிக்கலாம்.

இந்த நுட்பத்துடன் தூங்குவது மிகவும் இயல்பான ஒன்று. உங்க உடலில் கவனம் செலுத்துங்கள் (தோரணை மற்றும் ஆற்றல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்). தியானிக்க சிரமப்பட வேண்டாம். மனதையும் உங்க உடலையும் ஒரே இடத்தில் உட்கார வையுங்கள். 45 நிமிடங்களுக்கு ஒரு வாரத்திற்கு ஒரு முறை தியானிப்பதற்கு பதிலாக, உங்கள் இலவச நேரத்தைத் தேர்வு செய்து 5-10 நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் தியானிப்பது சிறந்தது.

தியானத்தை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். வழக்கமாகத் தியானம் செய்து வருவது உங்க வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மனதையும் உடலையும் உற்சாகப்படுத்தவும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தியானம் என்பது ஊக்குவிக்கப்படுகிறது.


சனி, 15 மே, 2021

பயனுள்ள 5 websites பத்தி பார்ப்போம் (கொஞ்சம் பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்)

1.  Duolinga

இது ஒரு Language learning website இந்த வெப்சைட் மூலமா சுலபமா நமக்குத் தெரியாத சில மொழிகளைக் கத்துக்கலாம், ஆரம்பம் முதல் நல்ல கத்துக்கலாம் நம்ம தமிழ் மொழியை உயிர் எழுத்துக்கள் அதுல இருந்து கத்துகிறது போலத்தான்.

வேற எதாவது ஒரு மொழி கத்துக்கணும் அப்டினு ஆசை பட்றவங்க இந்த வெப்சைட் தாராளமா போலாம்.ரொம்ப பெருசா Expert Levelku கத்துக்க முடியாடியும் ஒரளவுக்கு கத்துக்கலாம். 


வெப்சைட் லிங்க்


2. Coursera 

இது ஒரு Learning Websites இந்த வெப்சைட்ல நிறைய Free courses இருக்கு, அது மூலமா உங்களக்கு விருப்பமான எதாவது ஒரு course எடுத்துப் படிக்கலாம் முழுவதும் free அப்டினு சொல்ல முடியாது அந்த course முழுவதும் முடித்தபிறகு உங்களுக்கு certificate வேணும்னா நீங்கப் பணம் கட்டணும்.தேவை இல்லையென்றால் பணம் ஏதும் கட்டத்தேவையில்லை.


வெப்சைட் லிங்க்


3. Documentry Heaven

இது ஒரு அற்புதமான வெப்சைட், இந்தச் சைட் மூலமா உலகத்துல நடந்த வினோதமான விஷயங்கள், முக்கியமான வரலாற்று  நிகழ்வுகள் பத்தின எல்லாம் Documentrya பார்க்க முடியும், அதுமட்டும் இல்லாம நிறைய titlesla நிறைய Documentry இருக்கு, இது கண்டிப்பா Research பண்றவங்களுக்கு பயனுள்ளதா இருக்கும், கண்டிப்பா போய்ப் பாருங்க.



வெப்சைட் லிங்க்


4. Htwins

இந்த வெப்சைட் நம்ம வீட்ல உள்ள குழந்தைகளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும், ஏன் நமக்குக் கூடப் பயனுள்ளதா இருக்கும்னு கூடச் சொல்லலாம்.இந்த வெப்சைட் மூலமா உலகத்துல உள்ள எல்லா பொருட்கள், விலங்குகள், இடங்கள் ஒட அளவுகளைத் தெரிந்து கொள்ளலாம் அது மட்டும் இல்லாம அதைப் பத்தி கொஞ்சம் சின்னதா விளக்கமும் கொடுத்து இருப்பாங்க.


வெப்சைட் லிங்க்


5. Stars.chromeexperiment

இந்த வெப்சைட் மூலமா சூரிய குடும்பம் அதாவது (Solar System) இதைப் பத்தி நல்ல தெரிந்து கொள்ளலாம். இந்த வெப்சைட் உள்ள போனவுடனே Top Left Cornerla Take a Tour அப்டினு ஒரு Play Button இருக்கும் அதை மட்டும் Click பண்ண போதும், Automatica Play ஆகும்.இது மூலமா கொஞ்சம் solar system பத்தி தெரிந்து கொள்ளலாம். செமயா இருக்கும். 


வெப்சைட் லிங்க்