புதன், 19 ஆகஸ்ட், 2020

அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மத்திய அரசு.

இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள வளாகத்தில் 50 அல்லது 100 படுக்கை வசதிக்கொண்ட கட்டிடத்தை தனியாருக்கு 30 வருடங்களுக்கு கொடுக்க வழிவகை செய்யும் ஒரு ஒப்பந்தத்தை அனைத்து மாநில அரசுக்கும் மத்திய நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பியிருக்கிறது.


இதன் மூலம் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையே இல்லாமல் செய்யும் வேலையை மத்திய அரசு செய்ய துணிந்திருக்கிறது. ஏற்கனவே 2012-இல் குஜராத் முதல்வராக மோடி இருந்த போது புஜ் அரசு மருத்துவமனையை அதானி குழுமத்தின் மருத்துவ கல்லூரிக்காக 99 வருடத்திற்கு குத்தகைக்கு விட்டவர்தான் இப்போது நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மாவட்ட மருத்துவமனைகளையும் தனியாருக்கு கொடுக்க முன்வருகிறார்.


ஏற்கனவே 'நீட்' எனும் சட்டத்தினால் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்ட மோடி அரசு, இப்போது இந்த புதிய ஒப்பந்தத்தால் அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுக்க வேலை செய்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு இரண்டு வார காலத்திற்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்திருக்கிறார்.


இந்த ஒப்பந்தத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும். அதுபோலவே எல்லா மாநிலங்களும் இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதனால் வரக்கூடிய விளைவுகள் இந்திய சமூகத்தில் மிக மோசமானதாக இருக்கும்.

சனி, 1 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?


கடந்த சில நாட்களாக, நாளேடுகள், இதழ்கள், ஊடகங்கள், சமுதாய மற்றும் அரசியல் அரங்குகள் அனைத்திலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றிய சாதக-பாதகங்கள் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் அளிக்க முன்னாள் கேபினட் செயலாளர், டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஐ.ஏ.எஸ்., தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு பரிந்துரைகள் கொண்ட 200 பக்க அறிக்கையை அண்மையில் அளித்திருக்கிறது.

1964ஆம் ஆண்டு இந்தியக் கல்விக் குழு, பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த கோத்தாரி தலைமையிலும்; 1993ஆம் ஆண்டு கல்விக் குழு கல்வியாளரும் அறிவியலாளருமான யஷ்பால் தலைமையிலும், அமைக்கப்பட்டிருக்கும் போது; தற்போது மத்திய பா.ஜ.க. ஆட்சியில் 2015ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழு கல்வியாளர் தலைமையில் அமைக்கப்படாமல், அரசின் பொது நிர்வாகத் துறையைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்டிருப்பது வினோதமான முடிவாகும். அது மட்டுமல்ல; குழுவில் இடம் பெற்றுள்ள அய்வரில் நான்கு பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவர்; ஒருவர் மட்டுமே கல்வியாளர் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. அனைவர்க்கும் எளிதில் நினைவுக்கு வரும் கோத்தாரி குழுவுக்கு முன்பு, தத்துவ ஞானியும் மிகச் சிறந்த கல்வியாளரு மான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் 1948ஆம் ஆண்டில் இந்தியப் பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதும்; அரும் பெரும் கல்வியாளர் டாக்டர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் அவர்கள் 1952ஆம் ஆண்டில் அனைத்திந்திய இடைநிலைக் கல்வி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதும்; இந்தியக் கல்வி வரலாற்றின் பொன்னேடுகள்.

இக்குழு பரிந்துரைத்துள்ள பல அம்சங்கள் விவாதத்திற்கு உரியவை ஆகும்; மேலும் பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன.

கட்டாயத் தேர்ச்சி என்பது நான்காம் வகுப்பு வரை மட்டுமே அளிக்கப்பட வேண்டும்; அய்ந்தாம் வகுப்பு முதல், தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும் என்பது குழுவின் பரிந்துரை. மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி என்பது அவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதல்ல. அவர்களைக் கட்டாயம் தேர்ச்சி பெறுவதற்குத் தகுதியானவர்களாக உருவாக்கிட வேண்டும் என்பதே அதன் உட்பொருள். தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில் பலர் கல்வியைத் தொடர்வதில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கும்போது, தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே மேல் வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என்பது போன்ற பரிந்துரையால் பள்ளியை விட்டு வெளியேறும் அல்லது இடை நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி “அனைவருக்கும் கல்வி” என்பது செயலாக்கத் தொடர்பற்றுப் போகும். இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவர்.

உலகில் கல்வியில் மிக உயர்ந்த இடம் வகித்திடும் பின்லாந்து நாட்டில், ஏழு வயதில்தான் கல்வி தொடங்குகிறது என்பதையும்; 16 வயது வரை ஒன்பது ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகத் தேர்வு என்பதே மாணவர்களுக்கு இல்லாமல், அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது என்பதையும்; நினைவில் கொள்வது நலம்!

அது மட்டுமல்ல; ஒரு மாணவன் தொடர்ந்து தேர்வு பெறவில்லை என்றால், அந்த மாணவனைத் தொழிற் பயிற்சிக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரையும் இருக்கிறது. ஒரு பக்கம் கல்வி உரிமைச் சட்டம் மூலம், அனைவருக்கும் கல்வி அளிக்க உறுதி பூண்டுள்ள வேளையில் இன்னொரு பக்கம், மாணவனை 12 வயதிலேயே தொழிற்கல்விக்கு அனுப்பத் திட்டமிடுவது நயவஞ்சகம் இல்லையா? மேலும், மறைமுகமாகக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அய்யத்தை ஏற்படுத்தும் பேரபாயம் தோன்றி விடும். அது கடிகாரத்தைப் பின்னோக்கித் திருப்பி வைக்கும் முயற்சியை ஒத்ததாகிவிடும். தேர்வு பெற முடியாமல் படிப்பில் பின்தங்கி விடும் மாணவர்களுக்குத் தொழிற் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை மாணவர்களுக்குள்ளே இளம் வயதிலேயே பிளவு ஏற்படுத்தும் காரியமாகும். அனைத்து மாணவர்களும் வேலை வாய்ப்பைப் பெற்றிடும் வகையில், தொழில் கல்வி உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத் தப்படுவதே, நமது நாட்டிற்கு உகந்த தாகவும், வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்கும்.

கல்வி நிர்வாகப் பணிக்கு வருவோருக்கு இந்தியக் கல்விப் பணித் தேர்வு வைக்க வேண்டும் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் கல்வித் துறை இயக்குநர்களை நேரடியாக நியமிக்க முடியாது என்பதோடு, அகில இந்தியக் கல்விப் பணியில், அதிகாரிகள் நியமன ஒதுக்கீடு பெறும் மாநிலத்தைப் பற்றிய சரியான புரிதல் இன்றி, பணி ஈடுபாடு வெகுவாகக் குறைந்து விடும்.

பிளஸ் 2 முடித்தவர்கள் பின்னர் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று குழுவின் அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் பாடத் திட்டத்தை மாநில அரசுகள் திட்டமிட முடியாத நிலை ஏற்படுகிறது. டெல்லியில் அமர்ந்து கொண்டு வகுக்கப்படும் பாடத் திட்டம் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத் திட்டமாகி, இந்தியாவின் அடிப்படைக் கூறான “பன்முகம்” என்பது காலப் போக்கில் சிதைவுறும்.

நம் நாட்டில் உயர் கல்வியின் தரத்தை உயர்த்த, தலைசிறந்த வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்ற பரிந்துரையின் பெயரால், கல்வியில் தாராளமயம் புகுந்து விடும்; கல்வி முற்றிலும் வணிக மயமாகி விடும்; கல்விக் கட்டண உயர்வுக்கு வழி ஏற்பட்டு விடும்; உயர் கல்வி செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய தனி உடைமையாகி, பணக்காரக் கல்வி, ஏழைக் கல்வி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடும். வெளிநாடுகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்றால்; அது போன்ற தரமான கல்வி நிறுவனங்களை நம் நாட்டிலேயே நமது சூழ்நிலைகளையொட்டி உருவாக்கிட முனைப்புக் காட்ட வேண்டும்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் கட்டாயமாக லைசென்ஸ் அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை உருவாக்க வேண்டும்; மேலும் ஒவ்வொரு பத்தாண்டுக்குப் பிறகு மேற்கண்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதி தங்கள் லைசென்சை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற விதியையும் உருவாக்க வேண்டும் என்றும்; ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயமாகப் பயிற்சி பெற வேண்டும் என்றும்; பரிந்துரைத்திருப்பது எதிர்பார்க்கும் விளைவுகளை ஏற்படுத்துவதற்கு மாறாக, ஆசிரியர்கள் மத்தியில் ஒருவகை எந்திரத் தன்மையைத் தோற்றுவிப்பதோடு, காலப் போக்கில் கற்பித்தலில் சலிப்பையும், விரக்தியையும் ஏற்படுத்திவிடும்.

இந்திய நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படும் வரை “கல்வி” மாநிலப் பட்டியலில்தான் இருந்து வந்தது. நெருக்கடி காலத்தில்தான், மாநில உரிமைகளில் ஆக்கிரமிப்பு செலுத்திடும் விதமாக, கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே கல்வியில் மத்திய அரசின் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. பாடத் திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும், மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.

கல்வித் துறையில் அதிகாரிகளை நியமிக்க “இந்தியன் எஜுகேஷனல் சர்வீஸ்” தேர்வு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே கல்வித் துறையில் அதிகாரிகளாக பணி அமர்த்த வேண்டும் என்றும்; மேல்நிலைக் கல்வி முடித்த அனைவரும் அகில இந்திய அளவில் ஒரு பொது நுழைவுத் தேர்வினை எழுதி, அதில், அவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே அவர்கள் எந்த ஒரு உயர் கல்வியிலும் சேர முடியும் என்றும்; செய்யப்பட் டிருக்கும் பரிந்துரைகள் மாநில உரிமைகளை மறுப்பவை; ஆதிக்க எண்ணத்தைப் பிரதிபலிப்பவை.

தற்போது வகுக்கப்பட்டிருக்கும் “புதிய கல்விக் கொள்கை” வெளிப்படைத் தன்மையோடும், ஜனநாயக அடிப்படையிலும் உருவாக்கப் பட்டிருப்பதாகக் கருது வதற்கு இடமில்லை.

“2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சில விவாதத் தலைப்புகள் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. நாடு முழுவதும் இதுகுறித்த விவாதம் நடத்தப்பட்டதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கூறுகிறது. ஆனால் யாரிடம், எப்போது நடந்தது, அதில் கூறப்பட்ட கருத்துகள் என்னென்ன என்பதை அரசு வெளியிட மறுக்கிறது. கருத்துக் கேட்பு நடத்தப்பட்டதாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் எந்தச் செய்தித் தாளிலும் செய்திகள் வரவில்லை. பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட யாருக்கும் இது குறித்த எந்தத் தகவலும் தெரியவில்லை. திரட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கருத்துகளை எல்லாம் தொகுத்து பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையினையும் இந்திய அரசு வெளியிட மறுக்கிறது. இவ்வாறு ரகசியமாக கல்விக் கொள்கை அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியிருப்பதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது.

திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி அவர்களின் தலைமையில் 12-7-2016 அன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டத்தில், “புதிய கல்வி முறை என்ற பெயரால் நுழைக்கப்படும் நவீன குலக் கல்வித் திட்டத்திற்குக் கண்டனம்” என்ற தலைப்பில்,

“மத்திய அரசால் நியமிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ள டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் கமிட்டியின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கியமான ஆபத்துகளில் ஒன்று, இந்தியா முழுமைக்குமான புதிய இந்தியக் கல்விப் பணி சர்வீஸ் ஒன்றைத் துவக்கி, அதிக தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் தேர்வு என்று கூறி, பொத்தாம் பொதுவில், தற்போது மாநிலங் களின் தனி கலாச்சாரம் , சமூக நீதி, முன்னேற்றம் - இவைகளைப் பாதிக்கும் மறைமுகமானதொரு அபாயத்தை நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளனர்”

“ஏற்கனவே நெருக்கடி நிலை காலத்தில், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து மேலும் மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் மத்திய அரசின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரத் திட்டமிடப்படுகிறது.”

“இதன் மூலம் இந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை - மேலும் எளிதாக்கிடவே மறைமுகமாக ஆழ்ந்த உள்நோக்கத் துடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசுகள் ஒரு போதும் தம் இசைவைத் தரக் கூடாது” என்று நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் நன்கு சிந்தித்து, தெளிவு பெறத்தக்கது.

“பொதுப்பள்ளிக்கான மாநில மேடை”யின் ஏற்பாட்டில், 14-7-2016 அன்று, சென்னைப் பல்கலைக் கழகப் பவள விழா மண்டபத்தில், கல்வியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

“தொடக்கக் கல்வி கூட அனைவருக்கும் சமமாகக் கிடைக்காது என்பதை உறுதியுடன் மத்திய அரசின் ஆவணம் கூறுகிறது. இடைநிலைக் கல்வி கூட முடிக்காமல் பெரும் பகுதி மக்களை அரைகுறைத் திறனுடன் குறைந்த கூலிக்குப் பணிபுரியும் பன்னாட்டு நிறுவனத் திற்குத் தேவையான கூலிப் பட்டாளத்தை உருவாக்கும் கொள்கை முன்மொழி வாக அமைந்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் கீழ்சேவையில் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தில் கல்வியை சந்தைப் பொருளாக மாற்றத் தேவையான கொள்கை முன்மொழிவுகள் இந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ளன”.

“சமூக நீதிப் போராட்டத்தின் பயனாகக் கிடைத்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சமூக நீதித் திட்டங்களும் செயலற்றதாக ஆக்கும் கொள்கை முன் மொழிவுகள் இடம் பெற்றுள்ளன”.

“மானியம் ஒழிப்பு, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு சமூகத்திலும், கல்வியிலும் பின் தங்கிய நிலைக்குத் தகுந்தாற்போன்ற கல்வி உதவித் தொகை என்ற அரசமைப்புச் சட்ட நோக்கத்திற்கு மாறாக தகுதி அடிப் படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர் களுக்கான கல்வி உதவி என்ற முன் மொழிவும்; அரசு இனி புதிதாக உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்காது, பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நிதி முதலீடு செய்து இலாபம் ஈட்டவும் ஆசிரியருக்கோ, மாணவர் களுக்கோ சிக்கல் உருவானால் நீதிமன்ற தலையீடு இல்லாமல் நடுவர் மன்றம் வழக்குகளை தீர்க்கக்கூடிய மிக ஆபத்தான கொள்கை முன்மொழிவும் உள்ளன” என்று விரிவாகக் குறிப்பிட்டிருப்பது, “புதிய கல்விக் கொள்கை”யின் போர்வையை விலக்கி, உண்மையான தோற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாக உள்ளது.

கல்விக் கொள்கையை வரையறுக்க கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை இந்திய அரசு உருவாக்க வேண்டும். அத்தகைய குழுவில் மாநிலங்களையும் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் சமூகத்தின் பெரும்பான்மையாக உள்ள சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள கல்வியாளர்களையும் பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் அக்குழு அமைய வேண்டும். அக்குழு தயாரிக்கும் வரைவு அறிக்கை நாட்டு மக்கள் முன் வைக்கப்பட்டு மக்கள் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் இந்திய அரசு கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

தமிழக அரசு, பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும், ஆசிரியர் மத்தி யிலும், மாநில உரிமைகளிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் ஏராளமான பிரச்சினைகளை உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே எதிர்க்கட்சிகளுக்குப் போதிய வாய்ப்பளித்து, ஒரு நாள் முழுதும் விவாதித்து, தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்; அந்தத் தீர்மானத்தில் “கல்வி”யை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் சேர்ப்பதற்குத் தக்கக் காரண விளக்கங்களுடன் அழுத்தமான கோரிக்கையும் இடம் பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, “கல்வி சிறந்த தமிழ்நாட்டை” நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சம நீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை! ஜெயலலிதா அரசு, நமது மாநிலத்திற்குச் சிறிதும் பொருந்தாத இந்தப் பிரச்சினையை எச்சரிக்கையோடு கையாளுமா? தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுமா?


நன்றி: தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2020

வேண்டாம் புதிய கல்விக் கொள்கை 2020 - Part 2

  • ஆசிரியர்கள் பதவி உயர்வில் இனி திறமை மற்றும் ஆர்வம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இத்தனை நாள் கட்டமைத்த சமூக நீதியின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்க முடிவு பன்னிட்டாங்க. இனி சொம்பு ஜால்ரா எல்லாமே உயர்பதவியில் நூல் கொண்யடு இருக்கும்.





  • கல்வி நிலைய உயர்பதவிகளில் ஆர்வமும் ஊக்கமும் நிறைந்த நபர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். எதுக்கு சுத்தி வளைச்சுட்டு நேரா சொல்லிடுங்க லைக் கார்ப்பரேட் வீ ஆர் கோயிங் டூ கிவ் ப்ரமோஷன்.




  • போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு கூடுதலாக நேர்முகத்தேர்வும் வகுப்பறை கற்பித்தல் தேர்வும் நடைபெறும் . லஞ்சம் , செல்வாக்கு விளையாடப்போகும் இடம்.




  •  இப்போது இருக்கும் பி.எட் பாடமுறை 2030 வரை மட்டுமே. அதன்பிறகு 4 வருட ஒருங்கிணைந்த பி.எட் பட்டமாக மாற்றப்படும். இனி எவனும் வரமாட்டான் பி.எட் படிக்க.




  • மூன்றாம் வகுப்பு வரை ஆங்கிலம் கிடையாது ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் விருப்பபாடம் மட்டுமே. இங்கிலீஷ் படிச்சுட்டு நீங்க எப்படி வெளிநாடு போலாம். இங்கேயே ஆடு மேய்ங்கடா பரதேசி பசங்களா.




  •  யூஜிசி இனி உயர்கல்வி மானியதுறை. MHRD இனி உயர்கல்வி துறை அமைச்சகமாகிறது. மனிதவள மேம்பாடு அவுட்



  • ஆய்வு மானியங்களில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சமவுரிமை. அம்பானி அதானி யுனிவர்சிட்டி ஆரம்பிச்சு மொத்த கிராண்ட் வாங்கிடுவாங்க இங்க ஸ்டேட் யுனிவர்சிட்டி லாம் நக்கிட்டு போக வேண்டியதுதான்.





  • மேலோட்டமாக பாத்தா நல்லா இருக்கமாதிரி தெரியும் இனி மதிப்பெண் சான்றிதழ் மாநில அரசு வழங்கும் ஆனால் மதிப்பெண் இணையாக்கம் மத்திய அரசுதான் செய்யும். இப்படி எல்லா விஷயத்திலும் தென்மாநிலங்களில் வடக்கு உள்புகும். உரிமை பறிபோகும்.  வசதிகள் குறையும். இந்தியா முழுவதும் பீகார் போல ஆகும்.






 இதெல்லாம் சாம்பிள் தான். இன்னும் பெரிய துரோகங்கள் இருக்கிறது. இதேபோல் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் கடவுளின் கைகளில் நாடு சிக்கிக்கொண்டது.



 இனி கட்டைவிரலுடன் உயிர் முழுவதும் கேட்காமலே உங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்ளப்படும். கவலை மட்டும்தான் மிச்சம். இதை எப்படி நிறைவு செய்வது என்று கூட தெரியவில்லை‌.



 நம் தலைமுறைகளின் அழிவு நம் கண்ணெதிரே நிகழப்போகின்றது.

வேண்டாம் புதிய கல்விக் கொள்கை 2020

  • NEP முதல் பேரிடி சத்துணவானது விலைவாசி மற்றும் பணவீக்கத்தை பொருத்து தொடர்ந்து மாற்றப்பட்டு வரும்‌. அடப்பாவிங்களா அரிசி விலை ஏறினால் அரிசி சோறு இல்லை என்கிறார்கள் நேரடியாக.

  • பாடநூல்களை அந்தந்த மாநில அரசுகள் அச்சடித்துக்கொள்ளலாம் ஆனால் பாடத்திட்டம் மத்திய அரசே வழங்கும்.


  • இந்தியா போன்ற நாட்டிற்கு ஒரே கல்வித்திட்டம் என்பது முட்டாள்தனம். மேலும் பாடத்திட்டம் மத்திய அரசே வழங்கும் என்பது மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரான செயல்‌

  • 5+3+4கல்வி முறை முட்டாள்தனத்தின் உச்சம். எப்படி ஒரு மாணவன் எட்டாம் வகுப்பு முடித்தவுடனே பொதுப்பாடங்களுடன் அவனது விருப்ப பாடத்தை தேர்வு செய்வான். இதில் அனைத்தும் செமஸ்டர் வடிவம். பத்தாம் வகுப்பு வரை 17% என்று உள்ள இடைநிற்றல் மேல்நிலையில் 36% என்று உள்ளது இப்போது வரை. இந்த கொள்கையால் இந்த சதவீதம் இன்னும் அதிகரிக்கும்.


  • தமிழகத்தில் மட்டும்தான் தடுக்கி விழுந்தால் தொடக்கப்பள்ளி ஓடி வந்து விழுந்தால் உயர்நிலைப்பள்ளி என்ற நிலை உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட வற்புறுத்தி வரும் நேரத்தில் எங்கோ ஒரு இடத்தில் தொடங்கப்படும் கல்வி வளாகத்தில் மாணவர்கள் சேரலாம் என்பது அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் மீது திணிக்கப்படும் திட்டமிட்ட தாக்குதல்.                           

  • மூன்றாம் வகுப்புவரை மொழிப் பாடம் மற்றும் கணிதம் மட்டுமே. இப்படி இருந்தால் அவன் சூழ்நிலையில் என்பதையே மறந்து கேள்விகேட்பதையே மறந்துவிடுவான்.


  • மிஷன் நாளந்தா மிஷன் தக்சஷீலா கேட்க நன்றாக இருக்கிறது இதன் நோக்கம் வசதியற்ற மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள கல்லூரிகளை மூடவேண்டும் என்பதே. அவற்றை மேம்படுத்த முயற்சிக்காமல் மூட வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம். கிராமப்புற மாணவர்களை படிக்க விட கூடாது இதுதான் நோக்கம்


  • ஒப்பந்த மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார். தமிழகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் இனி தலையில் துண்டு போட்டுக்கொள்ளலாம். பிடிஏ மூலம் நடைபெறும் நற்செயல்கள் இனி நடைபெறாது


  • கொடையுள்ளம் கொண்ட தனியார் அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் தொடங்க தடையேதும் இல்லை இனி. ஜியோ கல்வியில் முதலீடு செய்ததில் வியப்பேதும் இல்லை. இரண்டிற்கும் உள்ள தொடர்பு இன்னும் தெளிவு படுத்தப்பட வேண்டுமா?



எல்லோரும் பெண்களாகி விடுவோம் !


சந்தன கடத்தல் வீரப்பனை பற்றி நமக்கு என்ன தெரியும்? அவன் ஒரு கொள்ளைக்காரன், கொலைகாரன், ஆட்களை கடத்தியவன், பத்தாயிரம் வீரர்கள் தேடியும் யார் கையிலும் கிடைக்காமல் வாழ்ந்த கில்லாடி என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அவன் தனிப்பட்ட ரீதியில் நுண்ணுனர்வு மிக்கவன் இயற்கையின் அமைப்புகளை மிக கூர்மையாக ஆராய்பவன் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நிச்சயமாக விரல்விட்டு சொல்லிவிடலாம்.


யானைகள் காடுகளில் ஒரே இடத்தில் வாழாது பயணப்பட்டு கொண்டே இருப்பது தான் அவற்றின் இயல்பு வீரப்பனும் அப்படி தான் பகல் பொழுதில் உறங்கி இரவு பொழுதில் அடர்ந்த காட்டிற்குள் பயணம் செய்வான். அப்படி பயணப்படும் போது கடினமான தாகம் எடுத்தால் ஓடுகிற தண்ணீரை குடிக்க அனுமதிப்பானே தவிர குட்டையாக ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை தானும் குடிக்க மாட்டான் தனது கூட்டாளிகளையும் குடிக்க அனுமதிக்க மாட்டான்.


காரணம் தேங்கி நிற்கும் தண்ணீரில் கிருமிகள் வளரலாம் எதிரிகள் விஷம் கலந்து வைத்திருக்கலாம் தண்ணீர் ஓடி கொண்டே இருந்தால் அதில் எந்த விஷமும் தங்காது எந்த கிருமியும் வாழாது. தேங்குதல் என்றாலே அது விஷம் தான் இது தண்ணீருக்கு மட்டும் பொருந்த கூடியது அல்ல மனித வாழ்க்கைக்கும் பொருந்த கூடியது ஆகும்.


இரண்டாயிரத்தி இருபது பிப்ரவரி மாதத்திலிருந்து நமது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் எடுத்து கொள்ளுங்கள் அது தேங்கி நின்றுகொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கண்ணுக்கு தெரியாத கொரானா என்ற நுண்ணுயிர் உலக மக்கள் அனைவரையும் ஆட்டுக்குட்டிகளை போல கட்டிபோட்டு விட்டது.


காலையில் கண்விழிப்போம் நல்லதோ கெட்டதோ எதாவது வேலை செய்வோம். இரவில் உறங்க போகும் நேரம் வரையில் மனதாலும் உடம்பாலும் கட்டுபாடுயின்றி சுற்றிவருவோம். நமது சுதந்திரத்தை யாரும் பறித்தது கிடையாது. அப்படி யாராவது பறிக்க நினைத்தால் அவர்களை சும்மா விட்டு விடுவோமா? ஆனால் இன்று நம் நிலைமை என்ன?


எனக்கு தெரிந்த பலர் வருடமுழுவதும் ஓடி ஆடி வேலை செய்ய வேண்டியது இருக்கிறது பணத்திற்காக நாய் ஓடுவது போல ஓடுகிறேன் ஓய்வு என்பதே இல்லை வாரத்தில் ஒருநாள் ஞாயிற்று கிழமை விடுமுறை என்று தான் பெயர் அன்றும் தலையை பிய்த்து கொள்ளுகிற அளவிற்கு வேலை கிடக்கிறது. ஒருநாளாவது வேலை எதுவும் செய்யாமல் கட்டிலேயே படுத்து கிடக்க மாட்டோமா என்று தோன்றுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இன்று அவர்கள் நினைத்தாலும் வேலை செய்ய முடியாது. ஒரு நாள் இரண்டு நாள் என்று இல்லாமல் மாதக்கணக்கில் வெளியே கூட செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடைக்க வேண்டிய நிலை இருக்கிறது.


பலருக்கு இது பழக்கமில்லாத விஷயம் தொடர்ந்து செய்கின்ற வேலையை செய்யாமல் விட்டால் மனம் பித்துபிடித்துவிடும். எதிலும் நிலைகொள்ள முடியாமல் பதட்டமும் அச்சமும் நடுக்கமும் ஒருவிதமான குழப்பமும் வந்துவிடும். நமது வருங்காலம் என்னவாகுமோ ?பிள்ளைகுட்டிகள் நிலை எப்படி இருக்குமோ? என்றெல்லாம் நினைத்து நினைத்து வீணான கற்பனையில் திளைத்து நிஜமான நோயாளியாகவே மாறிவிடுவார்கள்.


நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பைபிள் கிளாஸ் என்று வருடத்தில் பதினைந்து நாட்கள் என் பள்ளியில் நடத்துவார்கள் அதில் நான் ஆர்வத்தோடு கலந்து கொள்வேன். காரணம் பைபிள் மீதுள்ள ஆர்வத்தால் அல்ல அதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உயர்தரமான சாக்லேட், கேக் போன்றவைகளும் நாற்பது வருடங்களுக்கு முன்பு மிக அரிதாகவே கிடைக்கின்ற ஐஸ்க்ரீம் போன்ற தின்பண்டங்களுக்காகவும் பைபிள் வகுப்பில் முனைப்போடு கலந்து கொள்வேன்.


அப்படி ஒருநாள் பைபிள் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது வகுப்பு எடுத்து கொண்டிருந்த பாதிரியார் உலகம் அழியும் விதத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தார். வானம் இருண்டு விடும் சூரியனே உதிக்காது வருடக்கணக்கில் மழை பொழியும் உயிர்கள் எல்லாம் தத்தளிக்கும் மலைகளையே மூழ்கடிக்கும் வெள்ளத்தின் மேற்பரப்பில் மின்னல்கள் விழுந்து நெருப்பு பற்றிக்கொள்ளும் வானத்திலிருந்து பெரிய பெரிய கற்கள் பூமியின் மீது வந்து மோதும் நாமெல்லாம் உடல் நசுங்கி கைகால் ஒடிந்து உயிருக்காக போராடுவோம் என்று பல்வேறு விஷயங்களை வர்ணனை செய்ய ஆரம்பித்தார். எனக்கு அப்போது அது பெரியதாக தெரியவில்லை. அம்புலிமாமா கதை படிப்பது போல கேட்டுவிட்டேன்.


ஒருநாள் இரவு திடிரென்று விழிப்பு வந்துவிட்டது. அந்த பாதிரியார் சொன்னது நினைவுக்கு வந்தது சுற்றிலும் இருட்டுவேறு பயத்திற்கு கேட்கவா வேண்டும் உடம்பெல்லாம் தந்தி அடித்தது வேர்த்து கொட்டியது. நாக்கு அன்னாக்கில் சென்று ஒட்டி கொண்டது வானத்திலிருந்து நிலா பெயர்ந்து தலைமேல் விழுவது போலவும் நட்சத்திரங்கள் உதிர்ந்து வீட்டு கூரைமேல் விழுவது போலவும் கற்பனை வந்தது. நெஞ்சு அடைத்து கொள்வது போலவும் மூச்சி நின்றுவிடுவது போலவும் தோன்றியது அந்த பயம் தான் அதே போன்ற பயம் தான் இன்று பலருக்கு கொரானா ஏற்படுத்தி இருக்கிறது.


ரயில் இயங்காது பஸ் ஓடாது தொழிட்சாலை இயங்காது வேலை போய்விடும், வீட்டில் தோசைக்கு மாவு அரைக்க கூட க்ரேண்டர் வேலை செய்யாது காரணம் மின்சாரம் இருக்காது மின்சார பில் கட்ட காசு இருக்காது குழந்தைகள் படிப்பு அரோகரா வங்கி சேமிப்பு கோவிந்தா மீறி வேலைக்கு போனால் கொரானா வரும் உயிர் போகும் பெண்டாட்டி பிள்ளைகள் அனாதையாக தெருவில் நிற்பார்கள். என்று எத்தனை எத்தனையோ பயம் உலக முழுவதும் பலருக்கு ஏற்பட துவங்கி விட்டது.


இந்த நிலையை மனநல மருத்துவர்கள் ஓசிடி நோய் என்று கருதுகிறார்கள். இது புதிய நோய் அல்ல பழசு தான் ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அதிகமான மனிதர்களை தாக்குவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த நோயின் அஸ்திவாரமே விபரீத கற்பனையாலும் அச்சத்தாலும் வருகிறது என்று கூறலாம். உலகத்தில் இன்று நடைபெறுகிற சம்பவங்களை பார்த்தால் இதே போன்ற நோய்களும் வேறுபல விபரீதங்களை அதிகரித்து விடுமோ என்ற நியாயமான அச்சம் நமக்கு வருகிறது.


பெண்களின் மீதும் குழந்தைகளின் மீதும் காட்டுகிற வன்முறை உணர்ச்சி இப்போது சற்று அதிகரித்து இருக்கிறது. முன்பு ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் சில மணிநேரங்களாவது ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. இப்போது அது இல்லை. காலையிலிருந்து இரவு வரை ஒரே முகத்தையே பார்க்க வேண்டிய நிலைவரும் போது சிறிய குற்றமும் பெரியதாக தோன்றும். சோம்பேரியின் மூளை சாத்தானின் பட்டறை என்ற பழமொழியின் உண்மை விளக்கத்தை அப்போது தான் புரிந்து கொள்ள முடிகிறது. இயக்கம் இல்லை என்றால் உயிர் இல்லை என்பார்கள் தனிமனித வளர்ச்சியாக இருக்கட்டும் சமூதாயத்தின் வளர்ச்சியாக இருக்கட்டும் அது தொடர்ச்சியான செயல்களால் தான் நடந்தேறும்.


இப்போது மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற கட்டாய தனிமை மிக கொடூரமானது. நம்மில் பலர் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு காஷ்மீரில் முழு அடைப்பு என்று தான் கேள்வி பட்டிருப்போம் தவிர அனுபவித்து அறிந்திருக்க மாட்டோம். நாம் என்றில்லை பெருவாரியான நாடுகளின் நிலையம் அப்படி தான். சில நாட்கள் என்றால் பரவாயில்லை எப்போது சகஜ நிலை வருமென்றே தெரியாத போது இந்த தனிமை யாரையும் கொல்லத்தான் செய்யும்.


போதை பழக்கம் புகையிலை பழக்கம் உடையவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். குறித்த நேரத்தில் சிகரெட் பிடிக்க முடியாத நிலை தற்காலிகமாக ஏற்படும் போதே பரபரப்புக்கு உள்ளாகும் மனது நாட்கணக்கில் மாத கணக்கில் காத்திருக்க வேண்டும் என்ற நிலை வந்தால் எப்படி பொறுக்கும். அதிர்ந்து பேசவே அஞ்சுகிற நபர்கள் எல்லாம் கூட அடிதடி ஆசாமியாகி விடுவார்கள் அதிலும் குறிப்பாக போதை பழக்கம் உள்ளவர்கள் மற்றவர்களை கஷ்டப்படுத்துவதோடு மட்டுமல்லாது தன்னை தானே கொடுமைப்படுத்தி துன்பப்பட ஆரம்பித்து விடுவார்கள். நான் அறிந்த வரையில் சில தொழில் அதிபர்களும் சினிமாகாரர்களும் இந்த மனநிலையால் மிக மோசமான பாதிப்பு அடடைந்து இருக்கிறார்கள். காரணம் உழைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அல்ல காசு பணம் வருவது நின்றுவிட்டதே என்ற பேரச்சமே ஆகும்.


தனிமை என்று வரும் போது ஆண்கள் கோழைகள் கூட்டத்தில் கும்பலாக சேர்ந்து தான் அவர்களால் கொக்கரிக்க முடியும். தனியாக அகப்பட்டு கொண்டால் அழுதுவிடுவார்கள் காரணம் குடும்பம் தொழில் சமூகம் என்று அனைத்துமே தனது தலையில் தான் இருக்கிறது தான் தான் அவைகளை காப்பாற்ற வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் வளர்க்க பட்டதே ஆகும். ஒருவர் என்னிடம் சொன்னார் என் ஒருவனுக்கு மட்டும் தான் பிரச்சனை என்றால் பரவாயில்லை என்னை நம்பி இருக்கும் ஐம்பது பணியாளர்களுக்கும் இது பிரச்சனை நான் ஓடவில்லை என்றால் நான் உழைக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாது என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். அவரது வருத்தம் நியாயமானது என்றாலும் அர்த்தமற்றது என்று யோசித்தால் புரியும்.


இந்த உலகில் யாரும் யாரை நம்பியும் பிறக்கவுமில்லை வாழவுமில்லை அருணாச்சல செட்டியார் வேலை தருவார் என்று தான் ஏழுமலை பிறந்தானா? அல்லது அவனது அப்பனும் அம்மையும் அப்படி தான் அவனை பெற்றார்களா? கடவுள் ஏழுமலையை படைத்தான் ஏழுமலைக்கு எப்படியும் அவன் உணவு கொடுப்பான் நான் பட்டினி கிடந்து தான் சாகவேண்டுமென்று இறைவன் எனக்கு விதித்திருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது.


நமக்கு வருகிற இன்பமாக இருக்கட்டும் துன்பமாக இருக்கட்டும் அதை அனுபவித்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு தான் பகிரத பிரயத்தனம் செய்தாலும் வாழ்க்கையை விட்டு ஓடிவிட முடியுமா? இல்லை இந்த உடம்பில் பசி வருகிறது நோய் வருகிறது மூப்பு வருகிறது வேறு உடம்பை மாற்றி கொள்ளலாம் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? எனவே எல்லா வற்றையும் அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


துன்பத்தை விரட்டி அடிப்பதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது அதற்கு துன்பத்தை ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் கஷ்டம் வந்தால் உன் இதயம் படபடக்கிறதா அந்த தாளத்தை ரசி வயிற்றுகுள் இனம் புரியாத கனம் தெரிகிறதா? அந்த பாரத்தை ரசி தொண்டை அடைத்து கொண்டு விக்கல் வருகிறதா? அடக்க முடியாமல் அழுகை பொங்கி கொண்டு வருகிறதா? அழும்போது நீ எப்படி இருப்பாய் என்று கற்பனை செய் அழகாக நாசுக்காக அழவேண்டும் என்று பயிற்சி எடு துன்பம் உன்னை கண்டு பயந்து நடுங்கி தூரத்தில் நிற்பதை உன் கண்களாலேயே பார்ப்பாய் அதிகப்படியாக என்ன வந்துவிட போகிறது மரணம் வரும் அவ்வளவு தானே செத்து விட்டு மறுபடியும் பிறப்போம் அப்போதும் வாழ்வோம் என்று மனநிலையை மாற்றி கொள்ளுங்கள்.


உண்மையிலேயே ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள் தைரிய சாலிகள் காலகாலமாக துன்பத்தை அனுபவித்து அனுபவித்து அதற்கு பழகி நெஞ்சத்தில் உரமேறி விட்டது அவர்களுக்கு விபரீதமான எண்ணங்களால் நாம் அவதிப்படும் போது நம் தாயிடமோ மனைவியிடமோ மகளிடமோ மனமிட்டு துயரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் அவர்கள் கொடுக்கும் தைரியம் ஆயிரம் யானைகளின் பலத்தை நமக்கு கொடுக்கும். பெண்களுக்கு மட்டும் கஷ்டம் இல்லை என்று நினைக்கிறீர்களா அவர்களுக்கும் உண்டு ஆனால் ஆண்கள் எதையும் ஒழித்து மறைத்து வைத்து கொள்ள தெரியாதவர்கள் பெண்கள் அப்படி அல்ல தங்கள் மன உணர்ச்சியை அவ்வளவு சீக்கிரம் வெளிகாட்டிக்கொள்ள மாட்டார்கள்.


இப்போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் கொரனவால் வந்திருக்கும் இந்த தற்காலிக தனிமையை துயரத்தை பயத்தை போக்கி கொள்ள ஆண்கள் எல்லாம் பெண்களை போன்ற மனநிலையை வளர்த்து கொள்ளுங்கள் பெண்கள் ஆண்களின் தவறுகளை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். இவைகளை மட்டும் பரஸ்பரம் செய்தால் இந்த துயரம் மட்டுமல்ல வேறு எந்த துயரம் வந்தாலும் அதையும் வெல்லலாம்.