மது: தீமைகளின் உறைவிடம். இது நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல்,
வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று பல கேடுகளை உண்டாக்குகிறது.
இது உண்டாக்கும் நோய்கள்: உணவு குழாயை அரிக்கிறது,
ஜீரண உறுப்புகளின் ஆற்றலை குறைக்கின்றது, வயிற்றில் புண்ணை ஏற்படுத்தி,
இதுவே பிற்காலத்தில் புற்று நோய் உண்டாக காரணமாக மாறுகிறது.
மேலும்,
கலீரல் பாதிப்பை உண்டாக்கி, மூளையை செயலிழக்க செய்கிறது, இதயத்தை
வலுவிழக்க செய்கிறது, ரத்த குழாய்களை சேதமடைய வைக்கிறது, மறதியை
உண்டாகிறது. இப்படி படிப்படியாக மனிதனை கொல்லும் பல்வேறு நோய்களை
உண்டாக்குகிறது.
கஞ்சாவா & சாராயம்: உண்மைகள் இப்படி இருக்க குடி பழக்கத்தை உரம் போட்டு வளர்க்கிறது நமது அரசாங்கங்கள். மாநில அரசாங்கங்கள் தங்களது கஜானாவை நிரப்ப மதுவை ஆறாக ஓட அனுமதித்துள்ளது.
அரசு மதுவை வீடுகளில் அடுக்கி வைத்திருந்தால் தண்டனை இல்லை. அதுவே 10 கிராம் கஞ்சாவை வைத்திருந்தால் 10 வருடம் சிறை தன்டனை. கஞ்சாவால் உடலுக்கு பெரிய கெடுதி கிடையாது. ஆனால் சாராயம் உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் அழிக்க கூடியது.
கஞ்சாவை விட மிக பெரிய அளவில் கேடு உண்டாக்கும் சாராயத்திற்கு சட்டப்படி அனுமதி. குறைந்த தீமையை உண்டாக்கும் கஞ்சாவுக்கு 10 வருடம் சிறை தண்டனை என்றால் உயிரை குடிக்கும் சாராயத்திற்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும். இதில் இருந்து என்ன தெரிகிறது மக்கள் நலம் எல்லாம் இவர்களுக்கு முக்கியம் இல்லை வருமானம்தான் முக்கியம். இந்த வருமானத்தை வைத்து இலவசங்களை வீசி ஓட்டை பொறுக்க வேண்டும். இதுவே இவர்களது திட்டம்.
இப்பொழுது இன்றைய செய்தியை படியுங்கள்: உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம் மதுபானங்களின் விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. குவார்ட்டர் மதுபாட்டலின் விலை ரூ.50 ஆக உயர்ந்தது. ஆனால், அண்டை மாநிலமான அரியானாவில் ரூ 30–க்கு குவார்ட்டர் கிடைக்கிறது.
இதனால்
உத்தரபிரதேச ‘குடிமகன்’கள், அரியானாவுக்கு சென்று மது வாங்க தொடங்கினர்.
சிலர் அரியானாவில் இருந்து மதுவை கடத்தி வந்து உ.பி.யில் விற்க தொடங்கினர்.
சிலர் கலப்படம் செய்தும் விற்க தொடங்கினர்.
மிக கேவலமான ஐடியா: இதனால் UP அரசு நேற்று மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. இப்பொழுது
குவார்ட்டர் மது பாட்டில் ரூ.25 ஆக குறைந்த விலைக்கு கிடைக்கிறது.
அரியானா மாநில எல்லை யோரத்தில், குறிப்பிட்ட மதுக்கடைகளில் மட்டும் இந்த
மது கிடைக்கும். இதன்மூலம், மது கடத்தல் குறையும் என்று ஆயத்தீர்வை துறை
அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நன்றிகள்:
sinthikkavum@yahoo.com
puthiyathenral@gmail.com
அவர்களுக்கு
அன்புடன் வணக்கம்
பதிலளிநீக்குஅடுக்கு மொழி பேசி பட்டி தொட்டி எல்லாம் மது கடைகளை திறந்து மதுவை ஆறாக ஓட விட்ட புண்ணிய வாழன் மக்கள் நலன் பற்றி பேசுவது என்ன ...கருணை ...நீதி... என்று எனக்கு தெரியவில்லை விஷ சாராயம் குடித்து இறந்தால் .. லக்ஷம்.. நிதி உதவி ஏன் என்றும் புரியவில்லை
hamaragana20 ஏப்ரல், 2013 11:45 AM
பதிலளிநீக்கு//அன்புடன் வணக்கம்
அடுக்கு மொழி பேசி பட்டி தொட்டி எல்லாம் மது கடைகளை திறந்து மதுவை ஆறாக ஓட விட்ட புண்ணிய வாழன் மக்கள் நலன் பற்றி பேசுவது என்ன ...கருணை ...நீதி... என்று எனக்கு தெரியவில்லை விஷ சாராயம் குடித்து இறந்தால் .. லக்ஷம்.. நிதி உதவி ஏன் என்றும் புரியவில்லை //
எதுவும் யோசிக்காத அளவுக்கு தமிழர்களை புண்ணிய வாழன் கள் மாற்றி வைத்துள்ளார்கள். இதுதான் தமிழனின் இப்போதைய பரிதாப நிலை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா