விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 அக்டோபர், 2013

அஜித்தின் ஆரம்பம் என்ன சொல்ல வருது இந்த படம்

தீபாவளி ஸ்பெஷல் அஜித்தின் “ஆரம்பம்’’. ரசிகர் மன்ற காட்சி ஒரு பார்வை...
இன்று காலை 8 மணிக்கு ஷோ என சொன்னார்கள்.. நேற்று இரவு வரை டிக்கட் கிடைக்கவில்லை தியேட்டரில் கேட்டதற்கு மொத்தமாக ரசிகர் மன்றம் சார்பில் வந்து வாங்கிச் சென்றுவிட்டதாகக் கூறினார்கள்.

அதனால் காலை 6 மணிக்கெல்லாம் தியேட்டருக்கு சென்றுவிட்டேன்(வீட்டில் செம அர்ச்சனை). அங்க போய் பார்த்தா ரசிகர் மன்ற ஆளுங்கனு சொல்லி சில பேர் டிக்கட்டை இரு மடங்கு விலை வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.
டிக்கட் விலை 140 ரூபாய். அடிப்படையில் விஜய் ரசிகனான எனக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் வந்துவிட்டொம் இதை விட்டால் வேற வழி இல்லை என்பதால் 140 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினேன்.
திருவண்ணாமலையில் இருக்கும் ஸ்ரீபாலசுப்ரமணியர் தியேட்டரில் இந்த படம் ஒடுகிரது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாள் இருப்பதால் ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டிய நாடு ஆகிய படங்களுக்கு புக்கிங் பன்ன திரை அரங்குகளில் எல்லாம் இந்த படம் இரண்டு நாள் காட்சியாக திரை இடப்படுகிரது(மக்கள் பணத்தை எப்படி எல்லாம் பிடுங்குறாங்க )

பாலசுப்ரமணியர் தியேட்டர் திருவண்ணாமலையில் சொல்லிகொல்லும் படியாக இருக்கும் தியேட்டரில் ஒன்று. டிக்கட் வாங்கிகொண்டு உள்ளே செல்ல 6.40 க்கெல்லாம் கூட்டத்தோடு கூட்டமாக நின்றேன். நேரம் கடந்து செல்ல செல்ல ஒரு சில அஜித்தின் ஆர்வக் கோளாறுகள் கூர்மையான இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட மெயின் கதவின் மேலேறி குதித்துச் சென்றார்கள். ஒரு சிலர் முடியாமல் கம்பியில் கிழித்துக்கொண்டும் அரங்கின் மேனேஜரிடம் பிவிசி பைப்பால் அடிவாங்கிக் கொண்டும் இருந்தார்கள்...

7.30 க்கு உள்ளே போனால் அனைத்து சீட்டுகளும் நிரம்பி இருந்தது.இத்தனைக்கும் உள்ளே மொத்தம் ஒரு 25 பேர் தான் அப்போதைக்கு இருந்தார்கள் .. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வரிசியில் இருக்கும் மொத்த இருக்கைகளையும் வெளியே இருக்கும் தனது நன்பர்களுக்காக முன்பதிவு செய்து பிடித்து வைத்து இருந்தார்கள். இதனால் 28 வது ஆளாக நுழைந்த எனக்கே இருக்கை இல்லை.. அப்புறம் தேடிபிடித்து ஒரு இருக்கையில் அமர்ந்தேன்..

காட்சி 8 மணிக்கு என்பதால் ரசிகர்கள் பொருமையாக வந்து கொண்டெ இருந்தார்கள்.. படம் போடும் போது தியேட்டர் நிரம்பி வழிந்தது. கிட்டத்தட்ட 100 பேர் இருக்கை இல்லாமல் நின்று கொண்டு படம் பார்த்தார்கள்.

இனி படத்தின் விமர்சனம் மற்றும் கதை:
மும்பையில் சின்சியரான இரண்டு போலிஸ் அதிகாரிகள். இதில் ஒருவர் கை தேர்ந்த வெடிகுண்டு நிபுணர். அப்பாவி மக்களை பணையக் கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு டிமாண்ட் பண்ணும் தீவிரவாதிகளை பிடிப்பதில் இருவரும் கில்லாடிகள்..

இன்னிலையில் இந்தியாவுக்கு வரும் சில வெளி நாட்டினரை பிடித்து வைத்துகொண்டு டிமாண்ட் பண்ணும் சில தீவிரவாதிகளை பிடிக்கும் பணியில் இருக்கும் போது அந்த இரு அதிகாரிகளில் ஒருவர் தரமில்லாத புல்லட்புரூப் ஜாக்கட்டினால் (இதனால் நிஜத்திலும் நாம் பல அதிகாரிகளை இழந்து இருக்கிரோம்.. இக்காட்சியில் எனக்கு அவர்கள் தான் ஞாபகத்துக்கு வந்தார்கள்)இறந்து விடுகிறார்.

இந்த அநியாயத்தை உயிர்த்தோழனான அந்த கைதேர்ந்த வெடிகுண்டு நிபுணர் கேட்க போக வில்லன்கள் அவர் குடுபத்தை அழிக்கிரார்கள் அதே வேளையில் “வில்லு” படத்தில் வருவது போல் இறந்து நேர்மையான அதிகாரி மீது தேசத்துரோக பழி சுமத்துகிறார்கள்..

இதில் இருந்து தப்பித்து எப்படி இந்த நிபுணர் அந்த துரோகிகளை பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.
கைதேர்ந்த வெடிகுண்டு நிபுணராக அஜித்தும் உயிர்த்தோழணாக ராணாவும் வருகிரார்கள். அஜித் எதிரிகளை பழிவாங்க நயன் தாரா ,ஆர்யா, டாப்சி போன்றவர்களி பயன்படுத்திக் கொள்கிறார். இதில் நயன் அவர்கள் ராணாவின் தங்கை ஆவார். ஆர்யாவுக்கு ஜோடி பேபி டாப்சி. டாப்சி ஆர்யாவிடம் கொஞ்சும் போது செம அழகாக இருக்கிரார்.

ஓபனிங்கில் குண்டு வைக்கும் அஜித் அது வெடித்ததும் அறிவுறை சொல்லி ஓபனிங் சாங் பாடுகிறார். சகிக்கல.. தவறான ஓபனிங் அஜித்தின் மாஸ¤டன் சுத்தமாக பொருந்தவில்லை. ஒரு பொறம்போக்கிடம் இருந்து உண்மைய வாங்க அந்த ஆளின் பச்ச குழைந்தையின் மீது அயர்ன் பாக்ஸ் வைத்து தேய்த்து விடுவேன் என்று மிரட்டியது ப்பா முடியல .ஏன் அஜித் கு இந்த மாதிரி சீன் வைக்கிராங்கனு தெரியல .. அந்த இடத்தில் அஜித்தின் மீது எனக்கு கொல வெறி தான் வந்தது. நிச்சயம் இந்த சீனை அஜித் ரசிகர்கள் தவிர வேறு யாராலும் ரசிக்க முடியாது ரசிக்கவும் வைக்காது. கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி ஒரு சீன் தேவையா?

ஆர்யா முன்கதையில் 120 கிலோ குண்டு உடம்பில் வருகிறார். சுத்தம் கொஞசம் கூட சிரிப்பு வரல.இந்த இடத்தில் நயனக்கா பல்லு வைத்து கட்டி இருக்கிரார்கள்.. பிறகு ஒரு டூயட் சாங்கில் 5 வினாடிகளில் ஆர்யா 120 இல் இருந்து 60 க்கு வருவது எல்லாம் செம காமடிங்க போங்க. ரகம். எப்படி விஸ்னு சார் ஒரு மாஸ் ஹீரோ படம் ணா அதுல வரமொக்க சீன கூட ஜனங்க ரசிப்பாங்கனு தப்பா நினைச்சிட்டிங்க போல.. உங்க பார்வையில அஜித்துக்கு கொடுத்த முக்கியத்துவத்த காட்சி அமைப்புகளில் கொஞ்சமாவது கொடுத்து இருக்கலாம்..

ஒரு வில்லனை மடக்க நயனக்கா வரும் போது செம கிளுகிளுப்பு.. சென்சாரில் அனுமதி கொடுத்த புண்ணியவான்களுக்கு கோடி புண்ணியம்... எந்த காட்சியும் மனசில ஒட்டல முக்கியமா அந்த டுகாட்டி பைக் சீன்..
மங்காத்தால அந்த பைக் சீன் எவ்ளோ சூப்பரா இருந்திச்சி பட் இதுல மகா சொதப்பல்.. நான் மிகவும் இந்த படத்தில் எதிர்பார்த்தது இந்த பைக் சீன் தான் ஆனா இதுலயும் கோட்ட விட்டுடீங்க.. வழக்கம்போல அஜித் இதிலும் நடக்கிறார் நடக்கிறார். அவர் சாதாரணமா நடக்கிறது கூட நம்ம ஆளுங்க ஸ்லோ மோசனில் காட்டி அவர் நடக்கிறார் என்பதை உறுதிபடுத்துகிறார்கள்..///////////////////////

வெள்ளி, 15 மார்ச், 2013

பாலாவின் பரதேசி விமர்சனம்

இந்த படத்தை சாமானிய மனம் படைத்த எல்லாராலும் பார்க்க முடியாது  
அந்த அளவுக்கு இந்த படத்தில் பாலா  சோகத்தை  கசக்கி பிழிந்து  எடுத்து இருக்குறார் ....

1939- இல்  நடக்கிறது அல்லது ஆரம்பிக்கிறது கதை . ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை அதர் வா தன திறமையான நடிப்பில்   நம்மை சீட்டிலேயே உட்கார வைக்கிறார் ...

செம நடிப்பு . ஒவ்வொரு பாத்திரமும் கண கச்சிதமாக  நடித்து  இருக்கிறார்கள் .கங்கானி முதல் உண்மையாண  டாக்ராக வரும் அனைவரின் நடிப்பும் செம...
விடுதலை போராட்ட காலம் முதலே தமிழனுக்கு எப்படி தமிழனே துரோகம் செய்து இருக்கிறான் என்பதை பார்க்கும் போது தானாக கண்ணில் நீர் துளிகள் எட்டிபார்க்கிறது...

அதர்வா.. கல்யாண வீட்டில் பசியுடன் சாப்பாட்டுக்கு ஏங்கும் போதும்.. அனைவரும் அவரை உதாசினபடுத்தும் போது அவர் அழும் போதும் தியேடேடரில் பெரும் அமைதி .. என் பக்கத்தில் அமர்ந்து இருந்த நடுத்தர வயது நபர் தனது கர்ச்சிப்பால் கண்ணை துடைப்பதை காணமுடிகிறது...



படம் ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் செய்யும் ஆரவாரம் போக போக எல்லாரும் அமைதியாகி படத்தில் ஒன்றிப் போவது படத்திற்கு பெரும் பலம் இது படத்திற்கு வெற்றியை தேடித்தரும் என்பதில் நிச்சயம்....

கதை எல்லாருக்கம் தெரிந்தது என்றாலும் ( நான் படம் பார்க்கும் முன்னரே கதையை பற்றி தெரி்துகொண்டேன் கிளைமேக்ஸ் தவிர) எந்த ஒரு காட்சியிலும் சலிப்பு ஏற்படவில்லை....

இந்த படத்தில் கிளைமேக்ஸ் இல்லை என்பது பெரும் ஏமாற்றம்...  திடிரென பாலா படத்தை முடித்துவிட்டார்... a film by bala என போடும் போது எல்லாரும்  முழு திருப்தியில்லாமல் எழுந்தனர்...


வேதிகா கொஞ்சம் அவ்வப்போது பிதாமகன் லைலா வை ஞாபகபடுத்துகிறார் ஒரு சில காட்சிகளில் மட்டும்... மற்றபடி செமயான நடிப்பு.. எதிர்பாராமல் தேயிலை தோட்டத்துக்கு கொத்தடிமையாக வேலைக்கு வரும் போது அதர்வா வை விட பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்குதான் செமயான அதிர்ச்சி... புலம்ப வைத்துவிட்டார்..
ஒரு சில தமி்ழ் பண்ணாடைகள் எப்படி எல்லாம் வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்கி இருக்கிறானுங்க என்று காணொளியாக பார்க்கும் போது அந்த காலத்தில் நம் முன்னோர்கள் இவர்களின் தந்திர வலையில் சிக்கி எப்படி எல்லாம் கஸ்டப்பட்டு இருப்பார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை...

படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அதர்வாவின் பாட்டி தீர்த்து வைக்கிறார்... செம பஞ்ச் கொடுக்குறார்...


தன்ஷிகா விற்கு காட்சிகள் குறைவு இருந்தாலும் முடிந்த அளவுக்கு முழுமையாக நடித்து இருக்கிறார்... வேதிகா, தன்ஷிகாவை இந்தக் கோலத்தி்ல் பார்க்க ரொம்ப பாவமாக இருக்கு.....

இந்த படத்தில் நீங்கள் ஒரு கமர்ஷியல் கிளைமாக்ஸை எதிர்பார்த்தால் நிச்சயம் நீங்கள் ஏமாறுவீர்கள்....

மீண்டும் பாலா தன்னை நிருபித்து உள்ளார்...
பிண்ணனியில் பின்னி பெடல் எடுக்கிறார் பிரகாஷ்குமார்...
ஒளிப்பதிவு... பக்கா..

ஒரு சில காட்சிகளை தவிர அனைத்தும் நம்மை ரசிக்க வைக்கிறது....
அவன் இவணில் வருவது போல இதிலும் கிராம நடைமுறை வார்த்தைகள் வருகிறது...

மகாத்மா காந்தியை இகழ்ந்தும் புகழ்ந்தும் தள்ளுகிறார்கள்



பாலா வின் பரதேசி அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய முழுமை பெறாத காவியம்....  வாழத்துக்கள் பாலா மற்றும் குழுவிற்கு...

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சாட்டை - சிறப்பு விமர்சனம்!

சாட்டை - சிறப்பு விமர்சனம்!


சமூக அக்கறையும் சமரசமில்லாத திரைக்கதையும் இயல்பான பாத்திரங்களுமாய் வந்து அவ்வப்போது மனதை வெல்லும் படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம், சாட்டை.

 

saattai movie review


ஓரிரு இடங்களில் சினிமாத்தனமான உணர்ச்சிக் குவியலாய் காட்சிகள் அமைந்தாலும், அவற்றில் பெரிதாக நெருடலேதும் இல்லாததால், படத்துடன் ஒன்ற முடிகிறது.

ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்து வந்த அரசுப் பள்ளி, ஆசியர்களின் அக்கறையின்மை, சோம்பேறித்தனம், ஒழுங்கின்மையின் உச்சத்தால் உருப்படாமல் போகிறது. புதிதாக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் இளம் ஆசிரியர் தயாளன். ஒரே ஆண்டில் அந்தப் பள்ளி ஒழுக்கம், கட்டுப்பாடு, கலைகள், விளையாட்டு என அனைத்திலும் மேன்மை பெற்று மாவட்டத்திலேயே முதலாவது பள்ளியாக வருகிறது...

எப்படி இது சாத்தியமானது? இந்தக் கேள்விக்கான விடையை ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்... குறிப்பாக பெற்றோர்களும் தவறாமல் பார்த்துத் தெளிய வேண்டியது இன்றைய அவசியம்!

நேர்மை, ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை, எதற்கும் கலங்காத நேரிய சிந்தனை கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி. சற்றும் அலட்டிக் கொள்ளாத, நடிப்பென்று சொல்ல முடியாத நடிப்பு.

ஒழுங்கீனமான மாணவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வெல்வதும், கடைசி வரை ஒத்துழைக்க மறுக்கும் சக ஆசிரியர்கள், கடைசியில் தங்களை அறியாமலேயே கற்றுத் தருதலில் மகா ஆர்வத்துடன் இயங்கச் செய்வதும், அந்த ஸ்போர்ட்ஸ் மீட்டை அவர் நடத்தும் விதமும்... ஒரு பள்ளியின் நிகழ்வுகளை அசலாகக் கண்முன் நிறுத்தின.

அரசுப் பள்ளிகளில் படித்த ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு தயாளனைச் சந்தித்திருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒன்றிரண்டல்ல.. குறைந்தது அரை டஜன் சிங்கப்பெருமாள்களாவது (தம்பி ராமய்யா) ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் இருக்கவே செய்கிறார்கள். தங்கள் பள்ளிக்கு ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தும் அந்தஸ்தைப் பெற்றுத் தந்த தயாளனுக்காக தலைமையாசிரியர் கைத்தட்டச் சொல்லும் இடத்தில் தம்பி ராமையா ஒரு பாவம் காட்டுகிறாரே... க்ளாஸ்!

உள்ளே போவதும் வருவதுமாக இருக்கும் அந்த அழுக்கு சாக்ஸ்.. அழுத்தமான குறியீடு!

தன் காலத்தில் பள்ளி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பாதா... என்ற ஆதங்கமும், சக ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த முடியாத இயலாமையும் சதா முகத்தில் இழையோட வரும் தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. மனதை நெகிழ்த்துகிறார்.

இந்தக் கதையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் - மாணவி காதலும் உண்டு. அந்தக் காட்சி வரும்போதெல்லாம் மனசு பதறுகிறது. நல்ல வேளை, அந்தக் காதலின் முடிவு யாருக்கும் பாதகமில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதில் ஒரு நிம்மதி. இந்தப் பாத்திரங்களில் நடித்துள்ள யுவன், மகிமா இருவருமே ப்ளஸ் டூ மாணவர்களுக்கே உரிய உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளனர். கருத்த பாண்டி வரும் காட்சிகள் கலகல!

சாட்டையில் ஓட்டைகளும் உண்டு. ஒரே பாடலில் பணக்காரனாவது போன்ற க்ளீஷேக்கள் இந்தப் படத்திலும் உண்டு. ஒட்டுமொத்தப் பள்ளியும் ஒரு ஆசிரியரை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டுவது கொஞ்சம் சினிமாத்தனமான மிகைதானே! மன்னிப்பும் அளவு கடந்த நம்பிக்கையும் சில நேரங்களில் பிழையாகப் போகவும் வாய்ப்பிருக்கிறதல்லவா..

ஆனால் இன்றைக்கு மோசமாக உள்ள அரசுப் பள்ளி ஒவ்வொன்றும் இந்தப் படத்தில் வரும் பள்ளி மாதிரி திருந்தி உயர்ந்தால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம், அந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்ள வைக்கிறது என்பதே உண்மை. பேதமில்லாத கல்விதான் நோக்கம் எனும்போது, அது அரசுப் பள்ளிகளிலேயே கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு இந்த பாழாய்ப் போன மிடில்கிளாஸ் என்றைக்குதான் வருமோ?

இமானின் இசை சுமார். இந்தப் படத்துக்கு அது ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். ஜீவனின் ஒளிப்பதிவு, கதையின் யதார்த்தத்தை மீறாமல் அமைந்திருக்கிறது.

புதிய இயக்குநர் அன்பழகன் தன் கதையில் எந்த வணிகத் திணிப்புகளுக்கும் இடம் கொடுக்காதது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

படைப்புகள் படைப்பாளிகளுக்கானவை அல்ல, சமூகத்துக்கானவை என்பதை உணர்ந்து புதிய இயக்குநருக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர்கள் சமுத்திரக்கனி, பிரபு சாலமனுக்குப் பாராட்டுகள்.

 

thanks;  online news website one india

நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை

திங்கள், 17 செப்டம்பர், 2012

சுந்தர பாண்டியன் – நண்பர்களின் துரோகம்


சுந்தர பாண்டியன்நண்பர்களின் துரோகம்

நாயகன் ச சிகுமார், நண்பன் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த நாடோடிகள் படம் பார்த்த பிறகு நண்பர்களின் மீது நெருக்கம் அதிகமானது...

நாயகன் ச சிகுமார்  தன் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடித்த இந்த சுந்தர பாண்டியன் நண்பர்களை சந்தேகப் பட வைக்கிறான்...

ஒரு பெண்ணுக்காக மூன்று நண்பர்கள் சேர்ந்து, அந்த மூன்று நண்பர்கள் மீது அதிக நம்பிக்கை, பாசம் வைத்திருக்கும் நண்பனுக்கு செய்யும் துரோகம் தான் இந்த சுந்தரபாண்டியன் படத்தின் ஒன் லைன்....

ஓபனிங்லே உசிலம்பட்டி காரங்க பற்றி சொல்லிவிடுவதால் , ஹூரோ ஹூரோயினை லவ்வும் போதே நமக்கு ச சிகுமார் எப்படி அவர்களை சமாளிப்பார் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு வந்து விடுகிறது...

ச சிகுமார் ரஜினி ரசிகனாக வருகிறார். இதற்காக அவர் பண்ணும் ஸ்டைல்கள் ரஜினியை ஞாபகப்படுத்துகின்றன.

முதன் முதலாக காதல் சொல்லும் இடம், கடைசியாக காதல் சொல்லும் இடம், இவ்விடங்களில் அவரின் உடை நாகரிகம் அருமை..

நண்பனின் காதல் செட் செய்ய அவர் தரும் ஐடியாக்கள் நிஜ வாழ்க்கைக்கும் பொருத்தமானது.

ஹீரோயின் புதுமுகம், இதை மறைக்கும் இவரின் நடிப்பு திறமை அபாரம். இடது கண்ணுக்கு கீழ் இருக்கும் தழும்பு தான் அவரின் அழகை கெடுக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ இவர் இதயத்தில் இடம் பெற அதை அவரின் முகமே காட்டி கொடுப்பது அருமை.

காதலை காதலினிடம் தைரியாமாக சொல்லும் போதும், அப்பா காதலுக்கு சம்மதம் சொல்லும் போதும், அம்மா சித்தி இருக்கும் போது தைரியமாக காதலனுக்கு போனில் பேசும் போது ரசிக்க வைக்கிறார்.

ஹீரோவின் நண்பர்கள் அவர் அவர் வேலைய கச்சிதமாக செய்துள்ளனர். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் கோபத்தை அப்புகுட்டி அழகாக வெளிகாட்டுகிறார்.. அவரிடம் ச சிகுமார் பஸ்ஸில் சண்டை போடுவது ஹீரோவின் ரெளடியிசத்தை காட்டுகிறது. ஒரு அப்பாவியை அப்படியா பேருந்தில் அத்தனை பேர் சேர்ந்து அடிப்பது.

ஒரு நண்பன் செய்யும் துரோகத்துக்கு சொல்லும் காரணம் ஏற்க கூடியதாக இருக்கிறது-அது தன் நண்பனை கொலை செய்தவனை பழிவாங்குவது-ஓகே.

அந்த ஹீரோயினியின் அக்கா புருஷன் தம்பி ஹீரோவுக்கு நண்பன் எனச் சொல்லி, இவரும் ஹீரோவுக்கு துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், அவர் ஹீரோவை கொல்ல முடிவு செய்வதே ஒரு நண்பனா இருந்து கொண்டு தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்து நினைத்து தான்.

ஆனால் இவரும் ஹீரோவும் சந்திக்கிற மாதிரி படத்தில் ஒரே காட்சி மட்டும் தான் வைத்திருக்கிறார்கள்.. இன்னும் கொஞ்சம் சீன் வைத்திருக்கலாம்.

சின்ன வயதில் இருந்தே ஒன்றாக இருக்கும் மற்றொரு நண்பன் கிளைமேக்ஸில் எடுக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போது இந்த முடிவு எடுத்த்தற்கு பதில் ஹீரோயின் ஹீரோவை காதலிப்பதாக ஹீரோ இவரிடம் சொல்லும் போதே எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்... ஹீரோ நண்பர்களுக்கு உதவக்கூடிய ஆள் என்பதால் பலன் கிடைத்திருக்கும்.. கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டுக்காக இயக்குனர் மாற்றிவிட்டார் போல.

பொதுவா ஜெயிலுக்கோ இல்ல போலிஸ் ஷ்டேசனுக்கோ போயிட்டு வந்தா வீட்டுக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு தான் செல்லுவார்கள். ஆனால் படத்தில் இத்தனை பெருசுங்க இருந்தும் சுந்தர பாண்டியனை வீட்டில் விட்டு ஆற அமர அழுதுவிட்டு அப்புறம் சுந்தர பாண்டியன் அப்பா சொன்னதுக்கு பிறகு தான் செய்கிறார்கள்.

ஹீரோவுக்கு தலையில் பலமாக அடி விழுகிறது ,பின் எல்லாம் சுபமாக முடிகிறது. ஆனால் தலையில் இவ்வளவு பலமாக அடிவிழுந்து இருக்கிறதே இது எதிர்காலத்தில் ஹீரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதை தெளிவாக சொல்லவில்லை.

தன் மகளுக்கா தான் ஹீரோ ஜெயிலுக்கு போனதால் அவருக்கு பெண் தர சம்மதிக்கும் பெண்ணின் அப்பா, ஏன் மாப்பிள்ளைக்கு எந்த வேலையும் இல்லை என்பதை பற்றி கவலை படவில்லை.

மாப்பிள்ளைக்கோ எந்த தொழிலும் இல்லை, ஆனால் கல்யாணம் ஆனதும் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு எங்கு போறார் என்பதை தெளிவாக சொல்லவில்லை.. எங்கயோ போறாங்க......

படத்திற்கு நன்மைகள்

படம் ஆரம்பித்த்தில் இருந்து முடியும் வரை எதிர்பார்ப்போடு நம்மை வைத்திருப்பது..

முதல் பாதி முழுவதும் வரும் காதல் கலாட்டாக்கள், முக்கியமாக அந்த பஸ்ஸில் நடக்கும் காதல் கூத்துக்கள்..

விறுவிறுப்பான திரைக்கதை..

ச சிகுமாரின் காமெடி கலாட்டா பிளஸ் காதல் காட்சிகள்....

நாடோடிகள் போல நண்பர்களின் கதை.....

இடைவேளைக்கு பிறகு வரும் திருப்பங்கள்....

ச சிகுமார் அண்ட் நண்பர்கள் செய்யும் காமெடி காட்சிகள்...

படத்திற்கு எதிரான தீமைகள்:

ஓபனிங் பாடல் தவிர மற்றவை சொல்லும் படியாக இல்லை..

ஹீரோ ஹீரோயின் டூயட் சாங் நல்லா கண்கள் இரண்டால் மாதிரி காதலோடு இல்லாமல் இருப்பது...

பிண்ணனி இசை சுத்த மோசம்.. கொஞ்சம் கூட நல்லா இல்லை... கிளைமேக்ஸ் பைட்டில் எப்படி பின்னி பெடலெடுத்து இருக்கலாம்..  யாருப்பா இசை அமைத்தவர் போங்கபா வேஸ்ட் பண்ணிட்டிங்க...

படத்தை பற்றிய விளம்பரம் குறைவு... போஸ்டர் கூட குறைவாகத்தான் ஒட்டியிருக்கிறார்கள்...

சரியாக விளம்பரம் படுத்த படாத இந்த படத்தை திருவண்ணாமலையில் உள்ள இரண்டு முக்கிய தியேட்டரிகளிலும் போட்டது....

தீர்ப்பு:

சுந்தரபாண்டியன் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் வகையில் உள்ளது..

படம்  சூப்பர் சூப்பர்

 

 

 

 

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பில்லா டேவிட் பில்லா - பில்லா 2 விமர்சனம்..

பில்லா டேவிட் பில்லா  - பில்லா 2 விமர்சனம்..

பிளிஷ் உங்க பொன்னான நேரத்தை இந்த படத்துக்காக வீணாக்க வேண்டாம்...

படம் பார்க்க உள்ளே நழையும் போது இருக்கும் சந்தோசம்  மன நிம்மதி படம் முடியும் போது இல்லை...

தல வலி கழுத்து வலி தான் வருது...

டி்க்கெட் 70 ரூபா   தல வலி கழுத்து வலி மாத்திரைக்கு 150 ரூபா செலவு  இவ்ளோ செலவு பண்ணதுக்கு அப்புறம்தான் வலி எல்லாம் போச்சி.....

படம் சின்ன படம்ங்க... இரண்டு மணிநேரம்தான் ஓடுது...

படம் போட்டதுல இருந்து தல அஐித் சுட்டுகிட்டே இருக்காருங்க... எத்தனை பேர சுட்டார் என்பதை நம்ம செந்தில் அண்ணனிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

படம் முடிஞ்சுதுனு தியேட்டர் காரன் லைட் போட்டதுக்கு அப்புறம் தான்  எனக்கு நிம்மதியா இருந்தது....   எழுந்து வெளியே வந்து கேட்ட தாண்டும் போது கூட டுமில் டுமில்னு சுடர சத்தம் கேட்குதுங்க   இவங்க இம்ச  தாங்க முடியல....

படத்தோட கத நல்லா தான் ஆர்வமா இருக்கு..  ஆனா இன்னும் கொஞ்சம் தெளிவா விரிவா சொல்லி இருக்கலாம்...   

டேவிட் பில்லா எப்படி  இன்டர்போல் தேடும் மிகப்பெரிய டான் ஆகுறான் என்பதுதான் கதை....

நிறைய எதிர்பார்த்து போனேன்  ஏமாந்து வந்தேன்.....

இன்று காலைக் காட்சிக்கே தியேட்டரில்  கூட்டம் இல்லை.. இத்தனைககும் இன்று படம் வெளியான மூன்றாவது நாள்...

நான் பில்லா 1 யும் இதே மூன்றாவது நாள் காலைக்காட்சிதான் பார்த்தேன்..   செம கூட்டம்....

தியேட்டருக்கு கூட்டத்தை வரவைக்க இரண்டு வழிதான் இருக்கு
1. பில்லா 2 ஓடும் தியேட்டர் கேண்டினில் இனி தலைவலி மாத்திரை இலவசமாக கொடு்க்கப்படு்ம்னு அறிவிக்கலாம்...

2. சென்சாரில் கட் பண்ண சீன்களை இடைவேளையில் ஒளிபரப்பலாம்...

பாடல்கள் ஒனறு கூட நல்லா இல்லை...  கேங்ஸ்டர் பாடலை நான் நிறைய எதிர்பார்த்தேன்...  படத்தில் அந்த பாட்டே இல்லை..   படம் முடிந்த பிறகு தான் ஒளிபரப்புகிறார்கள்...

பிண்ணனி இசை சுமார்......

ஒளிப்பதிவு.. வசனம்.... எடிட்டிங் ...  சூப்பர்

அஐித் ஸ்டைல்  நச்.....
திருவண்ணாமலையில் 4 தியேட்டரிகளில் ஓடுகிறது...  கூட்டத்த தான் காணோம்.....




செவ்வாய், 27 ஜூலை, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்- விமர்சனம்


  நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு ஒழுங்கான மகிழ்ச்சியான(வயிறு குலுங்க ) திரைப்படம் பார்த்த அனுபவம் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் . உண்மையிலேயே வைச்ச குறி தப்பேல்ல மாமு .



வழமையாக நகைச்சுவையுடன் கருத்துக்களை அள்ளி வழங்கும் இயக்குனர் சிம்புதேவன் படங்கள் வரிசையில்(23 ஆம் புலிக்கேசி , அறை எண் 305 இல் கடவுள் )  இன்னொரு வெற்றிப்படம். அரசியல் கருத்துக்கள் , தமிழர் பிரச்சனைகள் பற்றிய வசனங்களும்  பஞ்சமில்லை.

பிரபல முன்னணி நடிக நடிகைகள் மனோரமா , டெல்லி கணேஷ் , நாசர் , வி.எஸ் ராகவன் போன்றோரும் நமக்கு வழமையாகவே பிடித்த எம் எஸ் பாஸ்கர் , வையாபுரி , ரமேஷ் கண்ணா என பெரிய நகைச்சுவைப்பட்டாளம். இவர்களுடன் லாரென்ஸ் ,சந்தியா , பத்மப்ரியா , லட்சுமி ராயும் பாத்திரங்களில் நிறைவு . இடையில் வி எஸ் ராகவனை மட்டும் காணவில்லை.

36 வருடங்களுக்கு பிறகு ஒரு கௌபாய் திரைப்படம். ஜெய்சங்கர் இதற்க்கு முதல் ஒரு கௌபாய் படம் நடித்திருந்தார். இந்த கௌபாய் கதை நடக்கும் இடத்தின் பெயர் ஜெய் ஷங்கர் புறம் . ஆரம்பத்தில் கௌபாய் வரலாறு சினிமா நடிகர்களை வைத்து கூறுவது அருமை.


படத்தின் கதை(ஒரு புனை  கதையாக ) என்று பார்த்தால் கௌவ் பாய்(தமிழ்)  காலத்தில் நடக்கிறது .லாரென்ஸ் வைரம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு செல்லும் போது சிலரால்(வேறு கௌபாய் குழு ) காப்பாற்றப்படுகிறார். காரணம் அவர்கள் இனத்தலைவன் சிங்கம் போன்றவன். அந்த  இனத்தலைவனை
 இழந்து துடிக்கும் மக்கள்  வலுவிழந்து இரும்புக்கோட்டையில் இருக்கும் கிழட்டிடம் (நாசர் ) அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர் . அதனால் அம்மக்களை புரடச்சிகொண்டு எழ வைக்க(இரும்புக்கோட்டைக்கு எதிராக ) சிங்கம் போலவே உள்ள லாரென்சிடம் நீ சிங்கமாக நடித்தால் அதே போல உள்ள வைரத்தை தருகிறோம் என்கின்றனர் . உண்மையான சிங்கம் வீரன் அவளவு தான் வித்தியாசம் . இறுதியில் இரும்புக்கோட்டைக்கும் முரட்டு சிங்கத்திட்க்கும் நடக்கும் யுத்தம் இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதை கலகலப்பாக காட்டியுள்ளார் சிம்புதேவன் .


திரைக்கதையில் இரண்டாம் பாகத்தில் சில நீட்ச்சிகள் தெரிந்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து இல்லாமல் பண்ணி விடுகின்றனர் . அதுவும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மக்களுக்கு தேவையான கருத்துகளில் பின்னி பெடல் எடுத்து விட்டார் சிம்புதேவன் .

பின்னணி இசையை  ஜி வி பிரகாஷ் சரியாக செய்துள்ளார் . பாடல்கள் ஒன்றும் பெரிதாக ஹிட் ஆகா விட்டாலும் காட்ச்சியுடன் கேட்ப்பதட்க்கு நன்றாக உள்ளது . ஒளிப்பதிவாளர் அழகப்பன் குதிரைகளில் செல்லும் காட்ச்சிகள் , லாறேன்சின் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் போன்றவற்றில் நான்றாக செய்துள்ளார் .

விஷுவல்  பீட்டர் போல் . துப்பாக்கி சுடும் காட்சி , கார்ட்ஸ் விளையாடும் காட்சி என விஷுவலில்  விளையாடி உள்ளார் .

பாஸ்கர் செவ்விந்திய தலைவனாக வருகிறார். சந்தியா அவர் மகள் . பாஸ்கர் க்கு மொழி பெயர்ப்பாளர் ஆக வருபவர்( ஜாவா சுந்தறேசனாக  அறை எண் 305 இல் வருபவர் ) மொழி பெயர்ப்பில் பாஸ்கர் போலவே உடல் அசைவையும் மொழி பெயர்க்கும் போது  சொல்வது அசத்தல் .


3 நடிகைகள் வந்தாலும் இந்த உடைகளில் மிகவும் அழகு. பதம்ப்ப்ரியா லாறேன்சின் காதலியாக வருகிறார் . லட்சுமி ராய் நாசருடன் இருக்கிறார் . இடையில் சந்தியாவையும் சந்திக்கிறார் . நாயகிகளுக்கு பஞ்சமில்லை .



வயிறு குலுங்க சிரிக்க , சிந்திக்க வைத்த வசனங்கள் தான் படத்தின் பிளஸ். சென்சார்ல தியேட்டர் ல இருக்கிற ரீலை எடுத்து வெட்டாமை விட்டா சரி டோய் . ஏகப்பட்ட மறைமுக நக்கல்கள் . அரசியல் வாதிகள் மக்களின் நிலையை புட்டு வைச்சிடாருப்பா.

நின்றய காட்ச்சிகளும் கூட.. போய் பார்க்கும் போது உற்று கவனிக்கவும் .

ஐயருக்கு கௌபாய் தொப்பி ரொம்ப ஜில்லாலங்கிடி .. குறும்பு சிம்புதேவன் . அதுவும் குகை திறக்கும் வாசலில் கல்லில் ஜவுளிக்கடை விளம்பரம் இட்டிருப்பது கடியோ கடி .

படத்தில் புதையல் எடுப்பதற்க்கு குகைக்குள் செல்வதற்க்கு துண்டு சீட்டில் கேக்கப்பட்டிருக்கும் கேள்விகளும் பதிலும் .

தமிழில் எத்தனை எழுத்துக்கள் ? -
லட்ச்சுமி ராய் - 33
அந்த அம்மா சொல்லுறது நடக்காது டோய் .. ( 33 %  இட ஒதுக்கீடு.. லொள் )

 பொங்கு தமிழனுக்கு   பிரச்சனை வந்தால் என்ன செய்வோம் ?
A . ஆக்ரோஷமாக கிரிக்கெட் பார்ப்போம்
B . சினிமாவுக்கு போய் பாலாபிஷேகம் பண்ணுவோம்
C . டீக்கடையில் ஒக்காந்து வெட்டி பேச்சு
D .கலக்கப்போவது யாரு

இடையில் வரும் வாசங்களும் பஞ்ச் :
 நாசர் பேசும் வசனங்கள்  :- "தமிழனுக்கு பிடிக்காத வார்த்தை சுய உரிமை "  

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை புரட்சி  என்பன செம கடி .


தமிலன்ல ஒருத்தனுக்கு பிரச்சனைனா இன்னொருத்தன் வர மாட்டான் .. அது தெரிஞ்சு தானே இரும்புக்கோட்டையை   இங்க கட்டியிருக்கேன் என நாசர் சொல்லுமிடம் சூபர் .

மொத்தத்தில் சொல்ல  வந்ததை சொல்லி முடித்திருக்கிறார் சிம்புதேவன் . மனுஷன் பெருசா கதைக்காட்டியும் செயல்ல காடீடுப்பா ..karthikeyan

சிங்கம் - திரை விமர்சனம்

karthikeyan


  நிறைய நாட்களாக ஒரு நல்ல கமெர்ஷியல் படம் பார்க்கவில்லை என்கிறவர்களுக்கு ஹரி கொடுத்திருக்கும் இன்னொரு மெகா ஹிட் திரைப்படம் சிங்கம் . சனி,  ஞாயிறு தமிழ்  ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இந்த படம் அமையும் . சன் பிக்சர்ஸ் க்கும் ஐங்கரனுக்கும் இன்னொரு 200/100 நாள் திரைப்பட வரிசையில் இணையும் .



ஒரே கதையோ அல்லது ரவுடி கதைகளோ அதில் திரைக்கதை என்பது  மிக மிக முக்கிய பங்கு என நிரூபித்திருக்கும் ஒரு படம் . ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இருந்த இடத்தை விட்டு எழும்ப விடாமல் வைத்திருக்கும் அளவு திரைக்கதை சுவாரசியம் . இடை வேளையின்  பின்பு திரைக்கதையின் வேகம் இன்னமும் அதிகம் . அது ஹரியின் ரகசியம் . 

முதல் ஆரம்ப காட்ச்சியிலேயே எதுக்கு துவக்கு வைச்சு கொண்டு சண்டை பிடிக்கிறார், ரவுடிகள் பறக்கிறான்களே என்று கேள்வி எழுந்தாலும் அந்த படத்திற்கு அவர் உடலை தயார் செய்திருக்கும் விதம் பார்க்க இவரு அடிக்கலாம் என்று எண்ணத்தோன்றும் .

போலீஸ் வேலையிலேயே விருப்பமில்லாத ஊர் மக்களுடன் அன்பாக இருக்கும் சூர்யா  (துறை சிங்கம் ) எவ்வாறு நெல்லூரில்(கிராமம் ) இருந்து திருவான்மியூர், ஆந்திரா வரை செல்கிறார் , இறுதியில் எப்படி ஸ்பெஷல் அதிகாரி ஆகிறார்  என்பது இயக்குனரின் கைவண்ணம். இது கதையின் கரு. இவருக்கு இடையில்  என்ன என்ன பிரச்சனை வருகிறது , அதற்க்கு யார் காரணம் என  மிகுதியை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .


இந்த படத்தை திரைக்கதையோடு சேர்த்து தூக்கி நிறுத்த சூர்யாவின் உழைப்பு படத்தில் பார்த்தால் தெரியும்  . அந்த கம்பீரமும் , வீரமும் போலீசுக்கு உரிய ஸ்டையிலில் பின்னி இருக்கிறார் . இளைஞர்கள் மனதில்  இன்னொரு மூன்று முகம்  ரஜனி வந்துவிட்டார் என்று எண்ணத்தோன்றும் . 

சூர்யாவுடன் சேர்ந்து படத்தை தூக்கி நிறுத்திய பங்கு நாசர் , பிரகாஷ் ராஜ் க்கு போய் சேரும். கில்லியில் பார்த்த அதே முகம், கோபம், நடிப்பு பிரகாஷ்ராஜை மகா நடிகனாக்குகிறது .  

முக்கியமாக நாசர்(அனுஷ்காவின் அப்பா ) போலீஸ் கானுக்கு பொன்னை கட்டி கொடுக்க மாடன் என முரட்டு பிடிவாதம் கவுரவம் பார்க்கும் இடங்களில் சபாஷ் போடலாம். என்ன ஒரு நடிப்பு . அதுவும் நீங்க கொடுத்த லயிசன்ஸ் காலாவதி ஆகிரிச்சாம் என்று அனுஷ்கா  சொல்லும் இடத்தில் கொடுப்பார் ஒரு ரி ஆக்க்ஷன். பின்னணியில் நாயகன் நீங்கள் நல்லவரா கெட்டவரா? டியூன் ஒலிக்கும் . ரசித்த காட்சி. 

லாஜிக்கில் பிழை இல்லாமல் அவளவு ரவுடிகளையும்  ஒரேயடியாக அடிக்காமல் பிளான் போட்டு தூக்குவதில் இயக்குனரும் ,அவரின்  திட்டமும், சூர்யாவின் நடிப்பும்  மிக மிக அருமை .காட்சிகள் அனைத்தும் திரைக்கதையின் வேகத்துடன் கச்சிதமான பொருத்தம் . முக்கியமாக எப் ஐ ஆரை கிழித்து போட கேட்க்கும் ரவுடியுடன் தானே எப் ஐ ஆரை கிழித்து போட்டு விட்டு எதுக்குடா எப் ஐ ஆரை கிழிச்சா ? என்று கேட்க்கும் இடம் கைதட்டல் .


தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை முதலில் கேட்க்க பிடிக்கவில்லை . தியட்டரின் காதல் வந்தாலே க்கு கிடைத்த ரெஸ்போன்ஸ் சூபர் . சிங்கம் போல நடந்து வரும் போது போடும் பின்னணி பாடல் "சிங்கம்" காட்ச்சியுடன் உண்மையில் சிங்கம் போலவே இருப்பார் சூர்யா  . வேறு எந்த பாடலும் தூக்கி நிறுத்தவில்லை . 

விவேக்கின் காமெடி ரெட்டை வசனங்களை(ஏன் இப்பிடி மாறினார் ) கொண்டு வந்தாலும்   சிரிக்க வைக்கிறார். போர்ட்டர் வேலைக்கா படிக்கிறீங்க இவளவு சுமை சுமக்கிறீன்களே என பை கொளுவிச்செல்லும் பிள்ளையை பார்த்து விவேக் கேட்ப்பார். அங்கு மட்டும் தான் பழைய விவேக் தெரிந்தார் . 


அனுஷ்கா கவர்ச்சிக்காக வந்தாலும் புப்ளிக்கிலை இருக்கிற வரவேற்ப்பு எப்பா . 

இருந்தாலும் திரைக்கதையால் கட்டிப்போட்ட சிங்கம் . தைரியமாக மாபெரும் வெற்றி என்று சொல்லலாம் . ஹரி , சூர்யா , பிரகாஷ்ராஜ் இன் உழைப்பு தெரிகிறது . ஒரு படத்தை கொண்டு சேர்க்க தாய் உணர்ந்து நடிக்க வேண்டும் என நிரூபித்துள்ளனர். நல்லதொரு கமேர்ஷால் படம் . 

இராவணா

  

  விசில், ஆரவார கூட்டம்  இல்லாத நாளா போய் ராவணா பாக்க வேணும்னு கிழமை நாட்கள்ல போய் பார்ப்போம்  என்று இன்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .

கதை உலகத்துக்கே தெரிந்த கதை தான் . வெளிநாட்டு கதைகளை சுட்டு சினிமா எடுப்பதை விட எமது வரலாற்று கதையை எடுத்து அதை வெளிநாடுகளுக்கு நவீன முறையில் மாற்றி கொண்டு போய் சேர்த்த மணிக்கு முதல் வாழ்த்துக்கள் .

ஆனா இன்னும் ராமாயண கதை முழுதாக தெரியாத கூட்டம் கூட இருக்குன்னு தியேட்டர் கமெண்ட்ஸ்  சொல்லியது .



அப்படி அப்படியே பாத்திர படைப்புகள் . ராமனாக பிரிதிவ் ராஜ் , சீதையாக ஐஸ்வர்யா ராய் , ராவணன் விக்ரம் ,அனுமான் கார்த்திக் , கும்பகர்ணன் பிரபு , விபீஷணன் - பெயர் தெரியாது,   சூர்ப்பனகை - பிரியாமணி . அதே இயல்புகளுடனும் படைக்கப்பட்டுள்ளது . ஆட்டை குழம்பு வைச்சு சாப்பிட சொல்லு சாபிடுறன், மற்றையது அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் ராவணனுக்கு தவறு என சுட்டிக்காட்டிக்கொண்டு இருப்பார் . அவர் தான் விபீஷணன் .

படத்தின் சிறப்பு  - (இப்பிடி சொன்னாலே  நிச்சயம் மறை கருத்தும்  இருக்கும்) 

மணி கதையை(அதே கதை ) கையாண்ட விதம் மிக அருமை . கதையின் மையக்கருவையும் கோணத்தையும் மாற்றி வரலாற்றையே மாற்றி விட்டது. ராவணன் பற்றி வரலாறு  கூறிய பொய்யை போட்டு உடைத்தது நவீன ராவணன் . எத்தனை குழுக்கள்  கொடி தூக்க போகுதோ ?

ஒளிப்பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது  போல என்னையும் கவர்ந்தது . மனோஜ் பரமஹம்ச க்கு பிறகு சந்தோஷ் சிவனை அடையாளம் காட்டியுள்ளது . உயிரே க்கும் அருமையாக பண்ணியிருப்பார் . நீர்வீழ்ச்சி மற்றும் காடுகளில் கமெராவை வைத்த விதம் அருமை .

கள்வரே கள்வரே பாடல்  காட்சி அமைப்பு பாராட்டுக்குரியது . அவ்வளவு அழகு . ஐஸ்வர்யாவும் காட்ச்சியும் .

ராவணனின் பாத்திரத்தை மாற்றி அமைப்பதில் எளிமையான வெற்றியை கண்டிருக்கிறார் . ராமன் மனதில் நிற்க்கவில்லை , ராவணன் தான் வாழ்கிறான் . படத்திலும் வாழ்ந்தான் .

ராவணனை சிவன்  பக்தனாக காட்டிய வரலாறு. ஹரியை ஹீரோவாக காட்டியது . எம்மை இழிவாக காட்டுவதே வேலையாக போய் விட்டது . மணியின்  காவியம் சிந்திக்க வைக்கும் .

படத்தின் எதிர் மறை(மயினஸ் ) 

முக்கியமாக மணியின் பழைய படங்களில் இருந்த சிறப்பு இதில் இல்லை . காரணம் ஒரு வகையில் சுகாசினியின்  எழுத்தாகவும் இருக்கலாம் . மணி  சொல்ல வரும் ,காட்ட நினைக்கும் காட்ச்சிகள் வசனத்தில் பஞ்சத்தை காட்டியது . சில இடங்களை தவிர. சுஜாதாவை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லையோ ? சுஜாதா மணியின் படங்களின் சிறப்பு எனலாம் .

இந்த கெமிஸ்ட்ரி எனும் விடயம் ஐஸ்வர்யா ராய்க்கும் , விக்கிரமுக்கும் இடையில் இல்லை . சில இடங்களில் பார்வையில் மாத்திரம் தெரிகிறது . ஒரு வேளை சீதையையும் ராவணனையும்  நெருக்கமாக காட்டினால் குழுக்கள் கொடி பிடிக்கும் என்று பயந்திருக்கலாம். ஆனால்  அந்த குறையே இறுதி காட்ச்சியில்  மனதை நிரப்பாத ஒரே காரணம் .

என்னைப்பொருத்த வரை மோசமான எடிட்டிங் ..

காட்டு சிறுக்கி பாடலையும் காணவில்லை . ராவணனோடு டூயட் பாட கூடாது என்றோ ?

வசனங்களில் ஆங்காங்கே சுகாசிநியினியை  அடையாளம் காட்டுகின்றன. விக்ரம் ஐஸ் இடம் கேட்க்கும்  " அவரு எப்பிடி சிவப்பா இருப்பாரோ ? ஆமா சாமின்னா சிவப்பா தானே இருப்பாரு ? " " நாம எல்லாம் அரக்கர்கள் அழுக்கு தீண்டப்படாதவர்கள் " போன்ற வசனங்கள் ஹயிலயிட் . சுஜாதாவின் எழுத்தையும் ஞாபகப்படுத்தியது  . எனக்கு திராவிடர்கள் வரலாற்றில் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது மனதில் தோன்றியது .

ஐஸ்வர்யா ராயின் நடிப்பு மட்டுமே பாராட்ட கூடியது . கார்த்திக்கும் சிறப்பாக பண்ணியிருப்பார் . ஆனால் விக்ரம் நடிப்பை சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் காணவில்லை .

மணி மாற்றியமைக்க நினைத்த வரலாறு , படைக்க இருந்த காவியம் எழுத்தாளர் சுஜாதாவின் இழப்பாலும் , போர்க்கொடிகளாலும் காணாமல் போய் விட்டது . இவை இல்லாமல் சாதாரண தரத்தில் திருப்தியடைய வைத்திருக்கிறது ராவணா .

நல்ல படத்தை  தூக்கி நிறுத்தியது ஒளித்தொகுப்பும் மணியுமே !!

"வரலாற்றை மாற்றி அமைத்த காவியம் " - வாழ்ந்திருக்கிறான் . 


எனது பார்வை பிடித்திருந்தா மறக்காம  ஓட்டையும் karthikeyan

சனி, 23 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில் :;\




ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில் :;\
 முதலில் இந்த படத்தை எடுத்த டைரக்டர் செல்வா வுக்கு எனது முதல் வாழ்த்துக்கள்.
மற்றும் இந்த படத்தின் ஹீரோ நடிகை ரீமா சென்னுக்கும் எனது வாழ்த்துகள்.
முழுக்க முழுக்க செல்வாவின் திறமையினால் உருவான இக்கதை என்னவென்றால் ........அக்காலத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடக்கும் சண்டையில் சோழர்கள் தோல்வியை தழுவ ,சோழமன்னன் தன வாரிசயும் ,மக்களையும் ,இன்ன பிற செல்வங்களுடன் பாண்டியர்களின் குல தெய்வ சிலையையும் சேர்த்து அநிப்பி விடுகிறார் .அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை சோழர்களை தேடி சென்றவர்கள் யாரும் திரும்பி வாரவில்லை இதில் aantriya அப்பா வும் அடங்குவார் .
      தொலைந்து போன அப்பாவை தேட ரீமா சென்னுடன் கைகோர்க்கிறார் .அவர்களுடன்  ஒரு சிறிய மிலிடரி படையும் ,அவர்களுக்கு உதவி புரிய குப்பத்து மனிதனான கார்த்தியும் ,அவரது சகாக்களும் வருகிறார்கள். வியட்நாம் அருகில் உள்ள வாயில் நுழையாத ஒரு தீவுக்கு போகிறார்கள். அந்த தீவில் சென்றவுடன் படம் பயங்கர விறு விருப்பாகிறது.
       கடல்கள், பழங்குடி மக்கள் , போர் வீரர்கள், பாம்புகள், பசி, தாகம் ,புதை குழி என எழு கண்டங்கள் உள்ளன .ஒவ்வொரு கண்டங்களை தாண்டும் போதும் பல பேர் மரணத்தை சந்திக்கிறார்கள் .அதில் ரீமா, கார்த்தி, antriya மட்டும் தப்பித்து செல்கிறார்கள் .பிறகு சோழர்கள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்து அங்கே மூவரும் டான்ஸ் ஆடி பாடுகிறார்கள்.பாடல் முடிவில் அதி பயங்கர சத்தத்தை கேட்டு பித்து பிடித்து பிறகு மாமுனியின் சோதனைக்கு பிறகு உள்ளே செல்லும் பொது கார்த்தி மட்டும்  பார்த்திபனிடம்  செல்கிறார் .(அதன் பிறகு வரும் சீன்கள் எல்லாம் தூய தமிழ் தெரிந்தவர்கள் (சிறிது தெரிந்தாலும் போதும்) மட்டுமே குழம்பாமல் பார்கிறார்கள் .மற்றவர்கள் தூய தமிழ் தெரியாமல் படக்காட்சிகளை யும் ,பின்னனி மியூசிக் யும் ரசிக்கிறார்கள் .) காரணம் அந்நிய தேசம் போகும் சோழர்கள் தூதுவன் வந்த பிறகு ,தங்கள் நாடு திரும்ப வேண்டும் என்பது முன்னோர் அறிவுரை .அனால் தூதுவன் கார்த்திக் இரு நாயகிகள் மீது உள்ள ஆசையினால் உளற ,அரசு தரப்பு அவனையும், அவனுடன் வந்தவர்களை யும் பலியிட போக ,அங்கே இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளும் ரீமா தான் தான் அந்த தூதுவள் என்றும் ,நீங்கள் உடனே தாழி நோக்கி செல்லவேண்டும் என்றும் ,அதற்கு முன் என்னுடன் இருக்க வேண்டும் என்பதை தூய தமிழ் இல் கூறுகிறார்.
                   திடிரென ரீமா மீது கதை செல்ல காரணம் என்ன வென்றால் -பாண்டிய குல வம்சாவளியான ரீமா சோழர்கள் கடத்தி சென்ற தன் பரம்பரை குல தெய்வ சிலையை மீட்க சிறு வயதில் இருந்தே சகல கலைகளையும் கற்றுகொல்கிறார் .பிறகு சோழர்களை  வருகிறார் .
                                                                                  அதன் பிறகு ரீமா தன மாயா வலைகளை விரிக்க்ரர். இதற்கிடையில் அங்கு நடக்கும் ஒரு வீர விளையாட்டில் கார்த்தி செய்து விடுகிறார்(புண்ணியம் டைரக்டர்) .அதனால் கார்த்தியை மதித்து ஏற்று கொள்ளுகிறார்கள் மக்கள். உண்மையை உணரும் ரீமா குடிக்கும் நீரில் விசத்தை கலந்து விட்டு சிலையை எடுத்துக்கொண்டு செல்கிறார். அதற்கு முன் தன அண்ணனுக்கு தகவல் சொல்லி ராணுவத்தை வர வைக்கிறார் .(வியட்நாம் தீவில் கூட மொபைல் போன் சிக்னல் நல்ல கிடைக்குது- வோடபோன் விளம்பரத்திற்கு உதவும்)
                                    
                                                     கர்ஹியை ஹீரோவாக புக் பண்ணியதால் கடைசியில் கதையை கார்த்தி மீது வைக்கிறார் டைரக்டர்.கார்த்திக்கும் ,பார்த்திபனும் தங்கள் படையோடு  ராணுவத்தை எதிர்க்கிறார்கள்.முடிவில் ராணுவம் வெற்றி பெற்றது.
இதனால் ராணுவத்திற்கு அடிமையாகும் மக்களிடம் வீரர்கள் கொடுமை காட்டுகிறார்கள் .இதனால் மன்னன் பார்த்திபன் சுயமரணம் அடைகிறார் .கார்த்தியும் தன பங்கிற்கு காட்டிற்குள் ஓடும் இளவரசனை தேடி சென்று காட்டிற்குள் மறைகிறார் .அப்பட ஒரு வழியா கதைய சொல்லி முடித்தாயிற்று .G.V.பிரகாச்குமாரின் பின்னணி இசை அருமை .ஒளிபதிவு சூப்பர் .ஆர்ட் அற்புதம். கலையில் உழைப்பு தெரிகிறது .
                           
                                    எல்லாத்தையும் விட செல்வாவின் உழைப்பு மேல் ஓங்குகிறது .
கார்த்திக்கு இந்த படத்தில் நடிக்க பெருசா வாய்ப்பு இல்ல .கதை முழுக்க முழுக்க ரீமா வை நம்பியே உள்ளது.படத்தில் இன்னொரு நடிகையாக வருபவர்க்கு முதல் பாதியில் இருந்தது கூட பிற்பாதியில் இல்லை .கார்த்தி பருத்தி வீரனை விட்டு வெளியே வரவில்லை . அங்கங்கே அதன் சாயல் தெரிகிறது. இப்படியே போனால் ஓரங்கட்டிவிடுவார்கள் .பார்த்து கார்த்தி.
                            பிரகாசின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.பாடல்கள் அடிகடி எப் எம் இல் கேட்க முடிகிறது .படத்தின் மற்றொரு பலம் ரீமா .அவர் இடத்தில வேர் ஒருவரை  வைக்க முடியவில்லை .அந்த அளவுக்கு பிரமாதம் .
                 படத்தில் பல இடங்களில் ஆங்கிலம் படத்தின் சாயல் தெரிகிறது .
செல்வாவை சுற்றிய சுழல்கள் இந்த ஹிட்டால் மறைந்து போய்விட்டன .படத்தின் கிளைமாக்ஸ்  காட்சி இலங்கை தமிழர்களை சுட்டிக்காட்டுகிறது .
பழங்கால மக்களை இவ்வளவு கருப்பா காட்டுவது.சரி படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துகள்