கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜூன், 2015

எப்போது வருவாய் என் மகளென்ற முகவரியாய்



விழிக்கும் முன்


       விழித்திருப்பாய்!

உண்ணும் வரை

      காத்திருப்பாய்!

பேசும் வரை

      மௌனமாய் இருப்பாய்!

ஆனந்த மானால்

      ஆர்ப்பரிப்பாய்!

எடுக்கும் முடிவுக்கு

      என்றும் ஆதரவு அளிப்பாய்!

கோபத்தின் கொட்டத்தை

      கொதிப்போடு அடக்குவாய்!

எல்லை யில்லா ஆசைக்கு

       அளவு கோலா யிருந்தாய்!

பேரின்பத்தை

      பெருந்திரளாய் கொடுத்தாய்!

ஆ வென அலறும் போது

      அன்போடு அணைத்தாய்!

இனிமையாய் எல்லாவற்றையும்

      இயன்றவரை எடுத்துரைத்தாய்!

எட்டு திக்கு எங்கு போனாலும்

      எனக்காக ஏங்கினாய்!

பைத்திய காரனாய் செய்த தவறுகளை

      பணிவுடன் பொறுத்தாய்!

என் தனை ஆள என்னுள்

     என்றும் குடி கொண்டாய்!

எமக்குள் இருந்த அறியாமையை

     அலை போல அழித்தாய்!

ஆண் என்று பெண் என்று

     அவதாரம் காட்டினாய்!

ஆண்மையையும்

     உணர்த்தினாய்!

பெண்மையையும்

 உணர்த்தினாய்!

எம் தந்தை யானாய்!

என் தாயு மானாய்!

எம் நண்பன் ஆனாய்!

எம் ஆசான் ஆனாய்!

எல்லாமும் ஆனாய்!

என்னவளாய் இருந்தாய்

   இரு வருடம் முன்பு வரை!

அடியே எங்கு சென்று விட்டாய்

   முகவரி கூட கொடுக்காமல்

உன் மகளாக வருவேன்

   என்றாயே

எப்போது வருவாய்


   என் மகளென்ற முகவரியாய்!!!!!


       ------  காத்திருக்கிறான்  உம் மகன் கார்த்திகேயன் .

வெள்ளி, 12 ஜூன், 2015

பள்ளி மாணவியின் கவிதை-II

காலையில் எழுந்ததும்
ஒரு கப் டீ குடித்தேன்
கன்றின் வயிற்றில் அடித்து
இன்றைய தினத்தின்
முதல் பாவம் ...

        கோ.ப்ரியா

பூவுக்கும் பொட்டுக்கும்
எந்த ஒற்றுமையும் இல்லை
உன் அழகில்
இணையும் வரை
இது அவைகளுக்கு கடவுள்
கொடுத்த வரம் ...


       கா. நந்தினி

கர்ஜிக்கும் கரு மேகங்கள்
உன் உதட்டின்
உயிர் பறிக்கும் வெண்மையில் பட்டு
உருண்டோடி விழுகிறது
மழை துளிகளாய்!!

     கா.நந்தினி

வியாழன், 18 ஏப்ரல், 2013

பள்ளி மாணவியின் ஆண்டுக் கவிதை



மழை:

முத்தான   மழையே


யாருமில்லா நேரம் பார்த்து


மண்ணில் விழுந்த அதிசயம் என்ன


உன்னை காணும் ஒரு சில நொடியும்


என்னைத் தொட்டு போவதுண்டு


இயற்கையாகவே!


கவிதையாக மாறும் உன்னை


கற்பனை செய்ய முடியும்


மழைத்துளியாக மாறும் உன்னை


மவுனமாக காண முடியும்


கனவு காணும் காலங்கள் யாவும்


உண்மையாக மாறும்


இயற்கையாகவே !

-   கோ . ப்ரியா
-   முதலாம் ஆண்டு
-   அரசு மேல்நிலைப்பள்ளி சாத்தனூர்.


ஆசிரியர்:

கல் போன்ற விதை நாங்கள் 


அதை சிற்பமாக்கும் சிற்பியாக நீங்கள்


வேலை செய்யும் இயந்திரம் போன்று நாங்கள்


அதை கடினபட்டு உருவாக்கும் அறிஞர் நீங்கள்


சிறு சிறு பூக்களாக நாங்கள்


மலர்ந்து மனம் வீச செய்யும் மாண்பாலாரகா நீங்கள்


குறும்பு செய்யும் குழந்தையாக நாங்கள்



அதை திருத்தும் தாயாக நாங்கள் .

-   கோ . ப்ரியா
-   முதலாம் ஆண்டு
-   அரசு மேல்நிலைப்பள்ளி சாத்தனூர்.