ஞாயிறு, 16 மே, 2021

Amazon Prime மெம்பர்களுக்கு பேட் நியூஸ்; இனி இந்த Plan கிடைக்காதாம்!

இந்தியாவில் அமேசான் நிறுவனம் அதன் ஒரு மாத கால ப்ரைம் சந்தாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. உடன் ஃப்ரீ ட்ரையல் சோதனையையும் நிறுத்துகிறது



அமேசான் நிறுவனம், இனி இந்தியாவில் மாதாந்திர ப்ரைம் மெம்பர்ஷிப்பை வழங்காது. அதாவது மாதத்திற்கு ரூ.129-க்கு அணுக கிடைத்த அமேசான் ப்ரைம் சந்தா இனிமேல் கிடைக்காது. மாறாக இந்த ஈ-காமர்ஸ் நிறுவனம் மூன்று மாத அல்லது வருடாந்திர ப்ரைம் மெம்பர்ஷிப்களைகளை மட்டுமே வழங்கும்.


என்ன காரணம்?

புதிய ரிசர்வ் வங்கி ஆணையைப் பின்பற்றுவதற்காக இந்த ஆரம்ப தொகுப்பு அகற்றப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைத் தொடர்ச்சியான ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதற்கான Additional factor of authentication-ஐ (AFA) செயல்படுத்துமாறு கேட்கிறது.

இந்தப் புதிய ஆணையை அமல்படுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரைம் சந்தாவின் மாதாந்திர சேவையை நீக்குவதை பிரதிபலிக்கும் வகையில் அமேசான் தனது ஆதரவு பக்கத்தை இது சார்ந்த தகவலை அப்டேட் செய்துள்ளது.

ஃப்ரீ ட்ரையலும் நிறுத்தப்பட்டுள்ளது!

இதுதவிர்த்து, ஏப்ரல் 27 முதல், தற்காலிகமாக அணுக கிடைக்கும் அமேசான் ப்ரைம் இலவச சோதனைக்கான புதிய உறுப்பினர் சேர்க்கையையும் நிறுத்தியுள்ளது.

ஆக இந்த நேரத்தில், ஒரு பயனர் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை வாங்க அல்லது அதை அப்டேட் செய்ய விரும்பினால், அவரால் மூன்று மாதங்கள் அல்லது வருடாந்திர சந்தாவை மட்டுமே வாங்க முடியும்.

அமேசான் ப்ரைமிற்கான மூன்று மாத சந்தாவின் விலை ரூ.329 ஆகும் மற்றும் ஆண்டு சாந்தாவின் விலை ரூ.999 ஆகும்.

2019 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது!

புதிய ரிசர்வ் வங்கி கட்டமைப்பானது முதலில் ஆகஸ்ட் 2019 இல் அறிவிக்கப்பட்டது மற்றும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் 30-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கெடு "வாடிக்கையாளர்களுக்கு எந்த அசௌகரியத்தையும் வழங்கக் கூடாது" என்பதற்காகவே நீட்டிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக