திங்கள், 11 மார்ச், 2013

உங்கள் போராட்டம் இதோடு நிற்காமல் தொடர என் ஆதரவுகள்...

இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து அந்நாட்டின் மீது பொருளாதார தடைவிதிக்க கோரி கடந்த 4 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து லயோலா கல்லூரி மாணவர்களை இன்று அதிகாலை தமிழக அரசின் காவல்துறை மாணவர்களின் உடல்நிலையை காரணம் காட்டி அவர்களை கைது செய்து கட்டாயடுத்தி  சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்..


உடன் இருந்த சக மாணவர்களை சமுதாய நல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்....  8 மாணவர்களின் உயிர் காக்கப்பட்டது சந்தோசமான விசயம் தான் ஆனால் இதை காவல்துறை நேற்று பகலில் செய்யாமல் இரவோடு இரவாக அப்புறபடுத்தியதன் அவசியம் என்ன...


அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலிகளை போலிஸார் அடித்து உடைத்தாக மாணவர்கள் கூறுவதாக செய்திகள் கூறுகின்றன.  இதை பார்க்கும் போது எங்கோ இடிக்கிறது...  இந்த 4 நாட்களாக மாணவர்களின் உண்ணா போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவு ஆட்சியாளர்களுக்கு பீதியை கிளப்பி இருக்குமோ என தெரியவில்லை... எது எப்படியோ 4 மாணவர்களின் உயிர் காப்பாற்றபட்டுள்ளது..

மாணவர்கள் மீண்டும் இது போன்ற போராட்டங்களை கைவிட்டுவிட்டு  வேறு போராட்டங்களை நடத்தலாம்.. தயவு செய்து உண்ணா போராட்டத்தை மீண்டும் கையில் எடுக்காதீர்கள்..  இந்த கைது ஒரு வகையில் அரசுக்கு உங்கள் மீது இருக்கும் அக்கரையாக தோன்றுகிறது.. போக போக உண்மை தெரியவரும்...
உங்கள் போராட்டம் இதோடு நிற்காமல் தொடர என் ஆதரவுகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக