வியாழன், 19 ஜூலை, 2012

குடியரசு தலைவரின் அதிகாரங்கள், பொறுப்புகள் பற்றிய ஒரு பார்வை




இந்தியாவின் முதல் குடிமகன், நாட்டின் உயரிய பொறுப்பாக கருதப்படும் குடியரசு தலைவருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள், அவரின் பொறுப்புகள் குறித்து தெரிந்துகொள்வோம்.


பிரிட்டன் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, குடியரசு தலைவர் பதவி, பிரிட்டன் அரசருக்கு நிகரானது. இந்திய அரசின் தலைமை நிர்வாகியான குடியரசு தலைவரின் பெயரில் தான் மத்திய அரசு இயங்குகிறது. மேலும் குடியரசு தலைவர் முப்படைகளின் தலைவராகவும் இருப்பார்.


பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றே மத்திய அரசு, நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்களை நியமிக்கவும், நீக்கவும் செய்கிறது.


நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகே சட்டமாகிறது.
முக்கிய ஒப்புந்தங்களுக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவை. கைதிகளின் தண்டனையை குறைக்கவும், தண்டனையை ரத்து செய்யவும் குடியரசு தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு. மத்திய அரசையும், மாநில அரகளையும் நீக்கும் அதிகாரமும் குடியரசு தலைவருக்கு உள்ளது.


குடியரசு தலைவரின் பெயரால் மத்திய அரசு செயல்பட்டாலும், தனியாக முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் அவருக்கு இல்லை. சட்டங்கள் இயற்றுவது முதல் அரசின் முடிவுகள் அனைத்துமே அமைச்சரவையை சார்ந்ததே. அதே சமயம், மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நேரங்களில் குடியரசு தலைவரின் முடிவு முக்கியமானது.


அரசு அமைக்க உரிமை கோருபவர்களில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை முடிவு செய்வதில் குடியரசு தலைவரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் முடிந்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் குடியரசு தலைவர் முக்கியமான முடிவை எடுத்த வரலாற்று பதிவுகளும் இந்தியாவில் உண்டு.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைமை பொறுப்பு என்ற பெருமையையும் குடியரசு தலைவர் பெற்றிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக