செவ்வாய், 27 ஜூலை, 2010

விண்ணை தாண்டி வருவாயா

karthikeyan


  பரீட்சை முடிந்த உடனேயே விண்ணை தாண்டி வருவாய் போறதெண்டு முடிவே பண்ணியாச்சு . நீண்ட கால எதிர்பார்ப்பு வேற , கவுதம் மேனன் படங்கள் என்றாலே வழமையாக உயிர் . எப்பிடியோ முதல் நாள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சிட்டுது. வந்த உடனேயே எழுதும் பதிவு

ஒரு வருட கால எதிர்பார்ப்பு. பூர்த்தி செய்திருக்கிறார் கவுதம் மேனன் . சிறந்த ஒரு ரசனையாளன் படைப்பாளி என தன்னை மீண்டும் நிலை நிறுத்தி உள்ளார் . நிறைய காலத்திற்க்கு பின் ஒரு சிறந்த படைப்பு விண்ணை தாண்டி வருவாயா.உண்மையிலேயே விண்ணை தாண்டி விட்டார் கவுதம் மேனன்



முதலில் இருந்தே கவுதம் மேனன் படங்கள் என்றாலே காட்சி அமைப்புகள் தான் நினைவு வரும் . எதிர் பார்ப்பை தாண்டி அருமையாக காட்சி அமைப்பு . முதலிலேயே விண்ணை தாண்டி வருவாயா கண்களுக்கு விருந்து .வழமை போலவே தனது பாணியில் யதார்த்தமான கதைக்கருவை கொண்டு திரைக்கதையில் புகுந்து விளையாடி இருக்கிறார்.


கதை என்று பார்த்தால் யதார்த்தமாக உருவாகும் காதல் .தமிழ் பேச கூடிய மலையாள கிறிஸ்தவ பெண் திரிஷா , சிம்பு இந்து . சிம்புவின் லட்ச்சியமே படம் எடுக்க வேண்டும் என்பது . திரிஷாவோ படமே பார்த்ததில்லை. காதலில் ஜெயிக்க சிம்பு( கார்த்திக் ) செய்யும் வேலைகள் அனைத்தும் ரசிக்கத்தக்கன . பின்னர் திரிஷாவும்( ஜெசி ) காதலில் விழுகிறார் . இதில் என்ன வித்தியாசம் என்றல் ஒரு பெண்ணின் உண்மைக்காதலையும் எடுத்து காட்டியிருப்பது தான். இருவரும் காதலிக்கிறார்கள் . சந்தர்ப்பம் உறவுகள் வழமை போல காதலை பிரிக்கின்றன .



இறுதியில் உண்மைக்காதல் ஜெயித்ததா ? காதலர்கள் ஜெயித்தார்களா ? யதார்த்தம் ஜெயித்ததா ? என்பதை உண்மையாக மிக மிக வித்தியாசமான பாணி யதார்த்தமான காட்சி ஓட்டங்கள் வைத்து பூர்த்தி செய்திருக்கிறார் .படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . ஒவ்வொரு நிகழ்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். சினிமா காதலையும் உண்மையான காதலையும் ஒப்பிட்டு அருமையான விளக்கம்.

காதலின் குழப்பம் நிறைவாக காட்டப்பட்டுள்ளது .

காதலர்களுக்கு இடையே காதலில் ஏற்ப்படும் பிரச்சனைகள் , குழப்பங்கள் நம் கண் முன்னே அப்படியே . நான் ஏன் ஜெஸ்ஸி ய லவ் பண்ணேன் தெரியுமா என சிம்பு அடிக்கடி கேட்பது உருக வைக்கிறது .அனைவரும் கூடுதலாக நமக்கிடையே கேட்டுக்கொள்வது தான் . திரிஷா குழம்புவதும் மீண்டும் காதல் ஏற்ப்படுவது யதார்த்தம் .
ஒவ்வொரு காட்ச்சிகளில் முன்னைய காட்ச்சிகளுக்கு விளக்கம் . அவற்றை தொடர்பு படுத்தி கோர்த்து கொடுத்த பாணி அருமை .



ஒளிப்பதிவில் மனோஜ் பின்னி எடுத்திருக்கிறார். கவுதம் மேனன் காட்சிகளில் குறை இல்லை என்பது படத்தை பார்த்தால் விளங்கும் . பாடல்களின் காட்சி அமைப்புகள் சில வெளி வந்தது தான். ஒவ்வொரு காட்ச்சியிலும் கதைக்கு ஏற்ப்ப தேர்ந்து எடுத்த இடங்கள் அனைத்தும் மனதில் . காதல் காட்ச்சிகளுக்கும் நெருக்கமான காட்சிகளுக்கும் நேர்த்தியான ஒளிப்பதிவு. முக்கியமாக கேரளா காட்ச்சிகள் கோவா , அமெரிக்கா காட்ச்சிகள் போன்றவற்றில் பின்னி எடுத்திருக்கிறார். இரவில் சிம்பு மதிலில் ஏறி இருக்கும் போது நிலவுடன் சேர்ந்து எடுத்த காட்ச்சிகளுக்கு சபாஷ் . சில காட்சி அமைப்புகளில் நம்மை எங்கோ கொண்டு சென்று விட்டார் ஒளிப்பதிவாளர்.

ஒலிப்பதிவு சொல்லவேண்டுமானால் தனியாக ஒரு பதிவே எழுதலாம். ரகுமான் இந்த படத்தில் முழுதாக ஒரு பாகம் . பின்னணி இசை பின்னி பெடல் எடுத்து விட்டார் . கிடார் வயலின் இசைப்பாடல்கள் ஆரோமலே , கண்ணுக்குள் கண்ணை வைத்து ஸ்பெஷல் . அனைத்து பாடல்களுமே சிறப்பு . மற்றைய பாடல்களும் அனைவருக்கும் இனி பிடிக்கலாம். பினனனியில் பியானோ , கிடார் இசைகள் பிளஸ் . ஆரோமலே புதிய இசை அறிமுகம் தரமாக .தாமரையின் வரிகள் பாடல்களுக்கு மேலும் மெருகு

முக்கியமாக கவுதம் படங்களில் கலை வடிவமைப்பாளர்கள் முக்கியமாக பாராட்ட பட வேண்டியவர்கள். ஒவ்வொரு காட்ச்சிகளும் சரி , நாயகன் ,நாயகி உடை வடிவமைப்புகளும் சரி அனைத்துக்கும் ஒரு சபாஷ் . கலை ரஜீவன் . ஆடை வடிவமைப்பு நளினி சிறிராம் . சிறந்த கற்ப்பனை . பொருத்தமான எளிமையான வடிவமைப்பு .



நாயகி திரிஷா(ஜெசி )
இது வரைக்கும் பார்த்திராத திரிஷா . எளிமையான உண்மையான நடிப்புக்கு பாராட்டுக்கள். இவ்வளவு அழகாக யாரும் திரிஷாவை சேலைகளில் காட்டியது கிடையாது .

நாயகன் சிம்பு (கார்த்திக் )
சிம்புவும் இதுவரை யாரும் பார்க்காத சிம்பு தான். கூடுதலானோருக்கு சிம்புவை பிடிக்கலாம். மிகவும் அமைதி ,எளிமை . எளிமையான தோற்றம் . கலக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். உடை வடிவமைப்புகளுக்கு முக்கிய பாராட்டுகள்.

கே எஸ் ரவிக்குமார் , சிம்புவுடன் இருக்கும் இயக்குனர் போன்றோரே வெளியானவர்களில் படத்தில் அடையாளம் காட்ட கூடியவர்கள். வேறு ஒருவரும் மனதில் நிற்க்கவில்லை.

சில வசனங்கள் ஜொலிக்கின்றன . திரிஷா காதலுக்கு சமயம் , மொழி ,அப்பா காரணம் காட்ட கடைசியா உன்னை எனக்கு பிடிக்கணும் என ஒரு காரணத்தையும் திரிஷா சொல்ல. இது காரணம் என்று சொல்லும் இடம் அருமை . தனக்கு திருமணம் நிச்சயித்து இருக்கு என்ன பண்ணட்டும் கார்த்திக் என்று திரிஷா சொல்ல " நீ ஒன்னும் பெர்மிஷன் கேட்டு வரேல்லையே பொய் கல்யாணம் பண்ணிக்க ஜெசி " என்று சொல்லி அனுப்பது மிக அருமை .



கவுதம் மேனனுக்கு எங்கிருந்து தான் இவளவு அருமையான ரசனைகளோ தெரியைல்லை. அவருக்கு அமையும் ஒளிப்பதிவாளர்கள் கலை வடிவமைப்பாளர்களுமோ தெரியவில்லை . ரகுமானின் இசை , ஓளிப்பதிவு, யதார்த்தம் , கவுதமின் அருமையான படைப்பு . இவை அனைத்தும் விண்ணை தாண்டி வருவாயா ஒரு படமல்ல யதார்த்தமான அழகான கண்ணீர் கவிதை என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் .

படத்தை பார்த்தால் கண்ணீரும் புன்னகையும் ஒரு நிறைவும் இருக்கும் .
மற்றைய இயக்குனர்களின் காதல் படங்கள் முழுவதும் பொய் என்றால் கவுதமிடம் யதார்த்தம் இருக்கும் .உண்மையான யதார்த்தமான காதலையும் காதலர்களையும் காட்டிய கவுதமிட்க்கு பாராட்டுக்கள் . சினிமா காதலையும் யதார்த்தத்தையும் சேர்த்த விதம் அருமை .

உண்மையில் விண்ணை தாண்டி வருவாயா தமிழ் சினிமா காதல்களில் மனதில் நிற்க்கும். விண்ணை உண்மையாக தாண்டிய கவுதமிட்க்கும் , ரகுமானுக்கும் வாழ்த்துக்கள் . ஒரு சபாஷுடன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக