செவ்வாய், 27 ஜூலை, 2010

இராவணா

  

  விசில், ஆரவார கூட்டம்  இல்லாத நாளா போய் ராவணா பாக்க வேணும்னு கிழமை நாட்கள்ல போய் பார்ப்போம்  என்று இன்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .

கதை உலகத்துக்கே தெரிந்த கதை தான் . வெளிநாட்டு கதைகளை சுட்டு சினிமா எடுப்பதை விட எமது வரலாற்று கதையை எடுத்து அதை வெளிநாடுகளுக்கு நவீன முறையில் மாற்றி கொண்டு போய் சேர்த்த மணிக்கு முதல் வாழ்த்துக்கள் .

ஆனா இன்னும் ராமாயண கதை முழுதாக தெரியாத கூட்டம் கூட இருக்குன்னு தியேட்டர் கமெண்ட்ஸ்  சொல்லியது .



அப்படி அப்படியே பாத்திர படைப்புகள் . ராமனாக பிரிதிவ் ராஜ் , சீதையாக ஐஸ்வர்யா ராய் , ராவணன் விக்ரம் ,அனுமான் கார்த்திக் , கும்பகர்ணன் பிரபு , விபீஷணன் - பெயர் தெரியாது,   சூர்ப்பனகை - பிரியாமணி . அதே இயல்புகளுடனும் படைக்கப்பட்டுள்ளது . ஆட்டை குழம்பு வைச்சு சாப்பிட சொல்லு சாபிடுறன், மற்றையது அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் ராவணனுக்கு தவறு என சுட்டிக்காட்டிக்கொண்டு இருப்பார் . அவர் தான் விபீஷணன் .

படத்தின் சிறப்பு  - (இப்பிடி சொன்னாலே  நிச்சயம் மறை கருத்தும்  இருக்கும்) 

மணி கதையை(அதே கதை ) கையாண்ட விதம் மிக அருமை . கதையின் மையக்கருவையும் கோணத்தையும் மாற்றி வரலாற்றையே மாற்றி விட்டது. ராவணன் பற்றி வரலாறு  கூறிய பொய்யை போட்டு உடைத்தது நவீன ராவணன் . எத்தனை குழுக்கள்  கொடி தூக்க போகுதோ ?

ஒளிப்பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது  போல என்னையும் கவர்ந்தது . மனோஜ் பரமஹம்ச க்கு பிறகு சந்தோஷ் சிவனை அடையாளம் காட்டியுள்ளது . உயிரே க்கும் அருமையாக பண்ணியிருப்பார் . நீர்வீழ்ச்சி மற்றும் காடுகளில் கமெராவை வைத்த விதம் அருமை .

கள்வரே கள்வரே பாடல்  காட்சி அமைப்பு பாராட்டுக்குரியது . அவ்வளவு அழகு . ஐஸ்வர்யாவும் காட்ச்சியும் .

ராவணனின் பாத்திரத்தை மாற்றி அமைப்பதில் எளிமையான வெற்றியை கண்டிருக்கிறார் . ராமன் மனதில் நிற்க்கவில்லை , ராவணன் தான் வாழ்கிறான் . படத்திலும் வாழ்ந்தான் .

ராவணனை சிவன்  பக்தனாக காட்டிய வரலாறு. ஹரியை ஹீரோவாக காட்டியது . எம்மை இழிவாக காட்டுவதே வேலையாக போய் விட்டது . மணியின்  காவியம் சிந்திக்க வைக்கும் .

படத்தின் எதிர் மறை(மயினஸ் ) 

முக்கியமாக மணியின் பழைய படங்களில் இருந்த சிறப்பு இதில் இல்லை . காரணம் ஒரு வகையில் சுகாசினியின்  எழுத்தாகவும் இருக்கலாம் . மணி  சொல்ல வரும் ,காட்ட நினைக்கும் காட்ச்சிகள் வசனத்தில் பஞ்சத்தை காட்டியது . சில இடங்களை தவிர. சுஜாதாவை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லையோ ? சுஜாதா மணியின் படங்களின் சிறப்பு எனலாம் .

இந்த கெமிஸ்ட்ரி எனும் விடயம் ஐஸ்வர்யா ராய்க்கும் , விக்கிரமுக்கும் இடையில் இல்லை . சில இடங்களில் பார்வையில் மாத்திரம் தெரிகிறது . ஒரு வேளை சீதையையும் ராவணனையும்  நெருக்கமாக காட்டினால் குழுக்கள் கொடி பிடிக்கும் என்று பயந்திருக்கலாம். ஆனால்  அந்த குறையே இறுதி காட்ச்சியில்  மனதை நிரப்பாத ஒரே காரணம் .

என்னைப்பொருத்த வரை மோசமான எடிட்டிங் ..

காட்டு சிறுக்கி பாடலையும் காணவில்லை . ராவணனோடு டூயட் பாட கூடாது என்றோ ?

வசனங்களில் ஆங்காங்கே சுகாசிநியினியை  அடையாளம் காட்டுகின்றன. விக்ரம் ஐஸ் இடம் கேட்க்கும்  " அவரு எப்பிடி சிவப்பா இருப்பாரோ ? ஆமா சாமின்னா சிவப்பா தானே இருப்பாரு ? " " நாம எல்லாம் அரக்கர்கள் அழுக்கு தீண்டப்படாதவர்கள் " போன்ற வசனங்கள் ஹயிலயிட் . சுஜாதாவின் எழுத்தையும் ஞாபகப்படுத்தியது  . எனக்கு திராவிடர்கள் வரலாற்றில் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது மனதில் தோன்றியது .

ஐஸ்வர்யா ராயின் நடிப்பு மட்டுமே பாராட்ட கூடியது . கார்த்திக்கும் சிறப்பாக பண்ணியிருப்பார் . ஆனால் விக்ரம் நடிப்பை சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் காணவில்லை .

மணி மாற்றியமைக்க நினைத்த வரலாறு , படைக்க இருந்த காவியம் எழுத்தாளர் சுஜாதாவின் இழப்பாலும் , போர்க்கொடிகளாலும் காணாமல் போய் விட்டது . இவை இல்லாமல் சாதாரண தரத்தில் திருப்தியடைய வைத்திருக்கிறது ராவணா .

நல்ல படத்தை  தூக்கி நிறுத்தியது ஒளித்தொகுப்பும் மணியுமே !!

"வரலாற்றை மாற்றி அமைத்த காவியம் " - வாழ்ந்திருக்கிறான் . 


எனது பார்வை பிடித்திருந்தா மறக்காம  ஓட்டையும் karthikeyan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக