செவ்வாய், 27 ஜூலை, 2010

அடி எண்டா இது அடி(அரசியல் வாதிகள் டங்குவார் )

karthikeyan


சில விஷயங்கள் பெரிய மனுஷன் பண்ணுற வேலையா எண்டு கேக்க தோணும். சில அரசியல்வாதிகள் அடி பட்டாலே பெரிய கொண்டாட்டம் . உலக தலைவர்களே அடி பட்டுகொண்டால் . என்ன சின்னப்புள்ளத்தனமா ?அடி எண்டா இதுகள் அடி...

துருக்கிமெக்ஸிகோ (பயபுள்ளை மீசை மேல என்ன அவளவு ஆசை )தென் கொரியாஉக்ரையின்

ரஷ்யாஇலங்கை (என்ன எண்டு பாக்காதீங்க இவைகளும் அரசியல் வாதிகள் தான் )சீனாஜப்பான்


இந்தியாதாய்வான்இத்தாலிஇந்த படங்கள் நிறைய யோசிக்க வைக்கும் சிரிப்போட ..

விண்ணை தாண்டி வருவாயா

karthikeyan


  பரீட்சை முடிந்த உடனேயே விண்ணை தாண்டி வருவாய் போறதெண்டு முடிவே பண்ணியாச்சு . நீண்ட கால எதிர்பார்ப்பு வேற , கவுதம் மேனன் படங்கள் என்றாலே வழமையாக உயிர் . எப்பிடியோ முதல் நாள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சிட்டுது. வந்த உடனேயே எழுதும் பதிவு

ஒரு வருட கால எதிர்பார்ப்பு. பூர்த்தி செய்திருக்கிறார் கவுதம் மேனன் . சிறந்த ஒரு ரசனையாளன் படைப்பாளி என தன்னை மீண்டும் நிலை நிறுத்தி உள்ளார் . நிறைய காலத்திற்க்கு பின் ஒரு சிறந்த படைப்பு விண்ணை தாண்டி வருவாயா.உண்மையிலேயே விண்ணை தாண்டி விட்டார் கவுதம் மேனன்முதலில் இருந்தே கவுதம் மேனன் படங்கள் என்றாலே காட்சி அமைப்புகள் தான் நினைவு வரும் . எதிர் பார்ப்பை தாண்டி அருமையாக காட்சி அமைப்பு . முதலிலேயே விண்ணை தாண்டி வருவாயா கண்களுக்கு விருந்து .வழமை போலவே தனது பாணியில் யதார்த்தமான கதைக்கருவை கொண்டு திரைக்கதையில் புகுந்து விளையாடி இருக்கிறார்.


கதை என்று பார்த்தால் யதார்த்தமாக உருவாகும் காதல் .தமிழ் பேச கூடிய மலையாள கிறிஸ்தவ பெண் திரிஷா , சிம்பு இந்து . சிம்புவின் லட்ச்சியமே படம் எடுக்க வேண்டும் என்பது . திரிஷாவோ படமே பார்த்ததில்லை. காதலில் ஜெயிக்க சிம்பு( கார்த்திக் ) செய்யும் வேலைகள் அனைத்தும் ரசிக்கத்தக்கன . பின்னர் திரிஷாவும்( ஜெசி ) காதலில் விழுகிறார் . இதில் என்ன வித்தியாசம் என்றல் ஒரு பெண்ணின் உண்மைக்காதலையும் எடுத்து காட்டியிருப்பது தான். இருவரும் காதலிக்கிறார்கள் . சந்தர்ப்பம் உறவுகள் வழமை போல காதலை பிரிக்கின்றன .இறுதியில் உண்மைக்காதல் ஜெயித்ததா ? காதலர்கள் ஜெயித்தார்களா ? யதார்த்தம் ஜெயித்ததா ? என்பதை உண்மையாக மிக மிக வித்தியாசமான பாணி யதார்த்தமான காட்சி ஓட்டங்கள் வைத்து பூர்த்தி செய்திருக்கிறார் .படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . ஒவ்வொரு நிகழ்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். சினிமா காதலையும் உண்மையான காதலையும் ஒப்பிட்டு அருமையான விளக்கம்.

காதலின் குழப்பம் நிறைவாக காட்டப்பட்டுள்ளது .

காதலர்களுக்கு இடையே காதலில் ஏற்ப்படும் பிரச்சனைகள் , குழப்பங்கள் நம் கண் முன்னே அப்படியே . நான் ஏன் ஜெஸ்ஸி ய லவ் பண்ணேன் தெரியுமா என சிம்பு அடிக்கடி கேட்பது உருக வைக்கிறது .அனைவரும் கூடுதலாக நமக்கிடையே கேட்டுக்கொள்வது தான் . திரிஷா குழம்புவதும் மீண்டும் காதல் ஏற்ப்படுவது யதார்த்தம் .
ஒவ்வொரு காட்ச்சிகளில் முன்னைய காட்ச்சிகளுக்கு விளக்கம் . அவற்றை தொடர்பு படுத்தி கோர்த்து கொடுத்த பாணி அருமை .ஒளிப்பதிவில் மனோஜ் பின்னி எடுத்திருக்கிறார். கவுதம் மேனன் காட்சிகளில் குறை இல்லை என்பது படத்தை பார்த்தால் விளங்கும் . பாடல்களின் காட்சி அமைப்புகள் சில வெளி வந்தது தான். ஒவ்வொரு காட்ச்சியிலும் கதைக்கு ஏற்ப்ப தேர்ந்து எடுத்த இடங்கள் அனைத்தும் மனதில் . காதல் காட்ச்சிகளுக்கும் நெருக்கமான காட்சிகளுக்கும் நேர்த்தியான ஒளிப்பதிவு. முக்கியமாக கேரளா காட்ச்சிகள் கோவா , அமெரிக்கா காட்ச்சிகள் போன்றவற்றில் பின்னி எடுத்திருக்கிறார். இரவில் சிம்பு மதிலில் ஏறி இருக்கும் போது நிலவுடன் சேர்ந்து எடுத்த காட்ச்சிகளுக்கு சபாஷ் . சில காட்சி அமைப்புகளில் நம்மை எங்கோ கொண்டு சென்று விட்டார் ஒளிப்பதிவாளர்.

ஒலிப்பதிவு சொல்லவேண்டுமானால் தனியாக ஒரு பதிவே எழுதலாம். ரகுமான் இந்த படத்தில் முழுதாக ஒரு பாகம் . பின்னணி இசை பின்னி பெடல் எடுத்து விட்டார் . கிடார் வயலின் இசைப்பாடல்கள் ஆரோமலே , கண்ணுக்குள் கண்ணை வைத்து ஸ்பெஷல் . அனைத்து பாடல்களுமே சிறப்பு . மற்றைய பாடல்களும் அனைவருக்கும் இனி பிடிக்கலாம். பினனனியில் பியானோ , கிடார் இசைகள் பிளஸ் . ஆரோமலே புதிய இசை அறிமுகம் தரமாக .தாமரையின் வரிகள் பாடல்களுக்கு மேலும் மெருகு

முக்கியமாக கவுதம் படங்களில் கலை வடிவமைப்பாளர்கள் முக்கியமாக பாராட்ட பட வேண்டியவர்கள். ஒவ்வொரு காட்ச்சிகளும் சரி , நாயகன் ,நாயகி உடை வடிவமைப்புகளும் சரி அனைத்துக்கும் ஒரு சபாஷ் . கலை ரஜீவன் . ஆடை வடிவமைப்பு நளினி சிறிராம் . சிறந்த கற்ப்பனை . பொருத்தமான எளிமையான வடிவமைப்பு .நாயகி திரிஷா(ஜெசி )
இது வரைக்கும் பார்த்திராத திரிஷா . எளிமையான உண்மையான நடிப்புக்கு பாராட்டுக்கள். இவ்வளவு அழகாக யாரும் திரிஷாவை சேலைகளில் காட்டியது கிடையாது .

நாயகன் சிம்பு (கார்த்திக் )
சிம்புவும் இதுவரை யாரும் பார்க்காத சிம்பு தான். கூடுதலானோருக்கு சிம்புவை பிடிக்கலாம். மிகவும் அமைதி ,எளிமை . எளிமையான தோற்றம் . கலக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். உடை வடிவமைப்புகளுக்கு முக்கிய பாராட்டுகள்.

கே எஸ் ரவிக்குமார் , சிம்புவுடன் இருக்கும் இயக்குனர் போன்றோரே வெளியானவர்களில் படத்தில் அடையாளம் காட்ட கூடியவர்கள். வேறு ஒருவரும் மனதில் நிற்க்கவில்லை.

சில வசனங்கள் ஜொலிக்கின்றன . திரிஷா காதலுக்கு சமயம் , மொழி ,அப்பா காரணம் காட்ட கடைசியா உன்னை எனக்கு பிடிக்கணும் என ஒரு காரணத்தையும் திரிஷா சொல்ல. இது காரணம் என்று சொல்லும் இடம் அருமை . தனக்கு திருமணம் நிச்சயித்து இருக்கு என்ன பண்ணட்டும் கார்த்திக் என்று திரிஷா சொல்ல " நீ ஒன்னும் பெர்மிஷன் கேட்டு வரேல்லையே பொய் கல்யாணம் பண்ணிக்க ஜெசி " என்று சொல்லி அனுப்பது மிக அருமை .கவுதம் மேனனுக்கு எங்கிருந்து தான் இவளவு அருமையான ரசனைகளோ தெரியைல்லை. அவருக்கு அமையும் ஒளிப்பதிவாளர்கள் கலை வடிவமைப்பாளர்களுமோ தெரியவில்லை . ரகுமானின் இசை , ஓளிப்பதிவு, யதார்த்தம் , கவுதமின் அருமையான படைப்பு . இவை அனைத்தும் விண்ணை தாண்டி வருவாயா ஒரு படமல்ல யதார்த்தமான அழகான கண்ணீர் கவிதை என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் .

படத்தை பார்த்தால் கண்ணீரும் புன்னகையும் ஒரு நிறைவும் இருக்கும் .
மற்றைய இயக்குனர்களின் காதல் படங்கள் முழுவதும் பொய் என்றால் கவுதமிடம் யதார்த்தம் இருக்கும் .உண்மையான யதார்த்தமான காதலையும் காதலர்களையும் காட்டிய கவுதமிட்க்கு பாராட்டுக்கள் . சினிமா காதலையும் யதார்த்தத்தையும் சேர்த்த விதம் அருமை .

உண்மையில் விண்ணை தாண்டி வருவாயா தமிழ் சினிமா காதல்களில் மனதில் நிற்க்கும். விண்ணை உண்மையாக தாண்டிய கவுதமிட்க்கும் , ரகுமானுக்கும் வாழ்த்துக்கள் . ஒரு சபாஷுடன்....

பையா :

karthikeyan


 
நிறைய காலமா பதிவு ஒண்டும் போடேல்ல. பையா படம் பாத்திட்டு சூட்டோட சூடா  எழுதும் விமர்சனம்  . ஆனா படம் சுட்ட படமா சுடாத படமா எண்டு பாப்பம் .


விண்ணைத்தாண்டி  வருவாயாக்கு   பிறகு தியேட்டருக்கு போகலாம் எண்டு முடிவு பண்ண படம் . வந்த ஸ்டில்கள் , முக்கியமா இசைக்காக கட்டாயம் போகணும் எண்டு முடிவு பண்ணிய படம் .( டாடா சுமோ ரவுடீசை ஸ்டில்கள்ள  நான் பாக்கேல்லையே )


வழமையான தமிழ் சினிமா . காதல் படத்துக்குள் கொஞ்ச ஆக்க்ஷன்  எண்டு  போனா ஒரு ஆக்க்ஷன் படத்துக்குள்ள காதலை வேணும் எண்டே புகுத்தின மாதிரி இருக்கு . ஒரே வார்த்தையில் சொன்னா வழமையான தமிழ் சினிமா பாணியில் (முக்கியமா லிங்குசாமி பாணி ) அமுல் பேபி ஹீரோக்களை எருமைமாடுகள் போல இருக்கும் சும்மா ஒரு முப்பது பேரை அடிக்க வைப்பார் . சும்மாவா மாதவனையே ( ரன் ) அடிக்க வைச்சவர் ஆச்சே .

இது தானுங்க கதை . சுருக்கமா சொல்ல போனா வெட்டியா இருக்கும் நம்ம ஹீரோ கார்த்தி (சிவா ) க்கு பார்த்த உடனே காதல் . தமன்னா(சாரு ) மேல தான் .சந்தர்ப்ப வசத்தால கண்ணீர் சிந்தும் தமன்னாவை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து மும்பைக்கு பிரயாணம் ஆரம்பிக்கிறது . இடையிடையே  சுவாரசியங்கள் . நகைச்சுவை இல்லாத குறையை சிலர் நிவர்த்தி  செய்கின்றனர் . மும்பையில் இருக்கும் நண்பன் நகைச்சுவை கொஞ்சம் ரசிக்கலாம் ( வேற யாரும் இல்ல  அயனில் சூர்யாவுக்கு துணையாக இருப்பவர் பெயர் யாபகம் இல்லை ). கடைசீல சேருவாங்களா இல்லையா இது தான் கதை . மிகுதியை போய் தியேட்டர்ல பாருங்க .


 அட சரி பிரயாணம் தொடங்குதே இடையில  ரொமாண்டிக்கா ஏதாவது இல்லாட்டி வித்தியாசமான அணுகு முறையோ  எண்டு ஒக்காந்தா வழமையான ரவுடீஸ். அதே வெட்டாத முடியோட . ஒவ்வொருத்தரும்  ஆறு அடி .  பிரயாணம் முழுக்க பின்னால துரத்திறாங்க . அப்புறம் எங்க படத்திலை அமைதி . காதல் . ஒரே சத்தம் .

படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே என்ன முடிவுன்னும் தெரிஞ்சு போச்சில்லை. அடுத்து என்ன என்ன சீன்ன்னும் கண்டு பிடிச்சிட்டோம்ல . எத்தனை தமிழ் சினிமா பாத்திருப்பம் . 

கார்த்தி நீண்ட காலத்துக்கு பிறகு அழகா .. கொஞ்சம் சிரிக்கிறார் . இன்னும் பருத்தி வீரன் முரட்டு தன்மை போகேல்ல போல . தமன்னா வழமை போல நடிப்பில் அருமை . ரொம்ப அழகா இருகாங்க வேற . இந்த முறை லிங்குசாமி உடைகள் இடங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் .

முக்கியமா ஒளிப்பதிவாளர் மதி பாராட்ட பட வேண்டியவர் . அருமையான ஒளிப்பதிவு . ஆக்க்ஷன் சீன்களிலும் சரி , கார் சேசிங் சீன்களிலும் பின்னி எடுத்திட்டார் . அந்தோனி யோட எடிட்டிங்கும் கைகொடுத்திருக்கிறது . எடிடிங்க்ல ரவுடீஸ் எண்ணிக்கைய குறைக்க முடியாதா  ( நம்பும் விதமாக ) அன்டனி  சார் . சண்டை காட்ச்சியில் ஹீரோ  பறக்கும் சீன்களை சமாளிச்சு இருக்கீங்க எண்டு தெரியுது . 
பாம்பே வில்லன் இந்த படத்துக்கு பிளஸ் . சிம்பிளாக மிரட்டியிருக்கிறார் .


படத்தில் மிகப்பெரிய பிளஸ் யுவன் ஷங்கர் ராஜா சார் . எப்பவுமே கலக்கல் தான் . கோவா இசை எதிர் பார்ப்போட போனா , அதை விட அசத்தியிருக்கிறார் . எல்லா பாடல்களும் அருமை . அதுவும் "ஏதொ ஒன்று உன்னை கேட்க்க" திரையில் கேட்க்க மிக அருமை.  பின்னணி இசையும் அருமை . புதிதாக சேர்த்த பாடல் போல . ஒரே வார்த்தை மிக மிக அருமையான பாடல் . 


 "துளி துளி ", "அடடா மழை டா"," என் காதல் சொல்ல நேரம் இல்லை " போன்ற பாடல்கள் ஏற்க்கனவே ஹிட் . பிளஸ் "சுத்துதே சுத்துதே பூமி ".

கிளைமாக்ஸில் ஒரு சிறு மனதை தொடும் காட்சி . வழமையாக பிரயாணமோ வாழ்க்கையோ  நம்முடன் வருபவர்கள்  சிரிப்பாங்க  பழகுவாங்க  திடீரென சொல்லாமல் போயிடுவாங்க . அழகாக காட்டியிருப்பார் லிங்குசாமி . அந்த கற்பனைக்கு  பாராட்ட வேண்டும் .  அதற்க்கு "ஏதொ ஒன்று என்னை தாக்க " பின்னணியில் ஒலிக்கும் . 

காதலை கொஞ்சம் பயணத்தோடு அழுத்தமாக காட்டி இருக்கலாம் . பயணத்தை அழகாக காட்டி இருக்கலாம் . அனால் இந்த படத்தில் கொஞ்சம் லோகேஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் . சாலையோர நீர்  வீழ்ச்சி தேடி பிடித்திருக்கிறார் . 

ஆனால் காதல் என்ற விஷயத்துக்குள் ரத்தம் சிந்தவில்லை ,அதனால் பொறுத்துக்கொள்ளலாம் . சந்தர்ப்பங்கள் துரத்துகிறது எதிரியாகிறது . 

ஆக்க்ஷன், இசை  ரசிகர்களை திருப்தி செய்யும்  பையா . சுவாரசியமாக ஒரு முறை பார்க்கலாம் படம் . சில யதார்த்தம் இல்லாத விஷயத்தை யோசிக்காம விட்டால்... ( 30 பேரை ஒரு 6 சந்தர்ப்பத்திலை அடிச்சிருப்பரு ஹீரோ ).

பையா ஸ்டில்கள் மட்டும் நல்லம் .  கொஞ்சம் ரசனையோட காதலை கொஞ்சம் காட்ட முயற்ச்சி  பண்ணியிருக்கிறார் . ஆங்காங்கே தெரிகிறது . வாழ்த்துக்கள் .

ரவுடீஸ் விமர்சனம் 

பறக்கும் டாடா சுமோக்கள். வெட்டாத முடி . ஒரு கோழியை அப்பியே வேற சாபிடுறாங்க. வாகனத்தை விட்டு எட்டி பார்த்து கத்திக்கொண்டு வேற  . நாங்க பயந்துட்டோம்ல .... பாத்து பாத்து மரத்துப்போச்சு சார் ...

இன்னும் நிறைய இந்த மாதிரி படங்கள் லயின் ல நிக்கிறது தான் கவலை. சிங்கம் வரப்போகுதாம்ல . என்ன கொடுமை ?. ஸ்டில்களே கொடுமை !!!!!

அங்காடித்தெரு -

karthikeyan


  ஒரு மாதிரியாக அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தாகிவிட்டது. சில கேவலமான விமர்சனங்களும் நல்ல விமர்சனங்களும் வாசித்தாகி விட்டது . என்னத்தை சொல்லுறது விண்ணைத்தாண்டி வருவாயா போல உயர்ந்த ரசனை உழைப்புடன் அழகான நல்ல படம் வந்தாலும்(மேல்தட்டு வர்க்கமாம் !!) பிடிக்கேல்ல . அங்காடி தெரு(கீழ்த்தட்டு  வர்க்கமாம் !!) போல எளிமையான உருக்கமான உண்மையை கூறும் கதை வந்தாலும் பிடிக்கேல்ல எண்டா என்ன தான் பண்ணுறது ..(எத்தனை தமிழ் படம் எடுத்தாலும் திருந்த மாட்டானுங்க )


எவ்வளவோ திரைப்படங்கள் வந்தாலும் சில படங்கள் தான் மனதை தொடும் . அங்காடித்தெரு நிலைத்திருக்கிறது . உணர்வை தொடும் படம் . அனைவரும் பார்க்க வேண்டிய படம் .


மிக மிக நெஞ்சை தொட்ட வசனம் . "மனுஷங்க தான் தீட்டு பாப்பாங்க  கடவுள் இல்லை "
என்று நாயகன் சொல்லும் இடம் அருமை . ஆச்சாரியமான மாமியும் கொடுமை பண்ணுது ஓய். தான் மந்திரம் பூஜைகள் செய்வதாகவும் வேலை பார்க்கும் வயதுக்கு வந்த சிறுமியை( நாயகியின் தங்கை ) வீட்டிற்க்குள் வைத்திருக்காமல் நாய் கூட்டிட்க்குள் வைத்திருப்பது கொடுமை . ( ஆனா உண்மை ).

வசந்தபாலன் ஏற்க்கனவே வெயிலில் அசத்தியவர் . சிறந்த இயக்குனர்களை இயக்குனர் ஷங்கர்   ஊக்குவிப்பது உண்டு . இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளி வந்த படம் தான் வெயில் . ஒவ்வொரு உறவுகளின் உணர்வுகளையும் சரியாக பிரதிபலித்த படம் . அங்காடி தெருவில் எவ்வாறு அந்த கடை மேற்பார்வையாலரோ அதே போல வெயிலில் நாயகர்கள்  தந்தை .

கொஞ்சம் அருவருப்பான வில்லன்(  நல்ல படங்களை  வரவேற்காதவர்கள் ) பாத்திரங்களாக இருந்தாலும் இவ்வாறான  பாத்திரங்கள் நிஜத்திலும் உலாவுகின்றன. 

அங்காடித்தெரு போலவே கொழும்பிலும் பல தெருக்கள் உண்டு . பணக்கஷ்டம் குடும்ப கஷ்டம் காரணமாக எத்தனையோ பேர் இவ்வாறான  நெரிசலான கடைகளில் ( புடவைக்கடைகள் , நகைக்கடைகள் )  வேலை பார்க்கின்றனர்.  பல நண்பர்களும் தெரிந்தவர்களும் அங்கு இருப்பதால் இவ்வாறு பெரிதாக துன்புறுத்தல் நடப்பதில்லை என்பது அறிந்த உண்மை . ஆனால் சுரண்டல்கள் இல்லை என்று அடித்து கூற முடியாது . முதலாளி வர்க்கங்கள் (சிலர் ) உழைப்பாளிகளை சுரண்டி உண்பதுண்டு . எம்மிடம் அரசாங்கம் சுரண்டுவது வேறு விஷயம் . இடங்கள் வேறு ஆனால் விஷயம் ஒன்று தான் . மனித உரிமைகள் இல்லை . சுரண்டல்கள் உண்டு .

இந்த படம் வந்த பின்பு பல மனித உரிமை அமைப்புகள் கடைகளில் தேடுதல் நடத்தியதாகவும் பலர் பிடி பட்டதாகவும் கேள்விப்பட்டேன் . இயக்குனருக்கு வாழ்த்துக்கள் .அன்றாட வாழ்விட்க்காக கஷ்டப்படும் உழைப்பாளி வர்க்கத்தினரின் கதை . சன நெரிசல் மிக்க கடைத்தொகுதிகளில் வேலை பார்ப்பவர்களின் கஷ்டங்கள்.  தனியே  கொடுமைகளுடன் காட்டாமல் இடையில் காதல் ,சிறு சிறு கதைகள் வைத்து திரைக்கதையை தொய்வில்லாது கொண்டு சென்றுள்ளார் வசந்தபாலன் . 

முக்கியமாக இந்தப்படத்தில் வந்த சிறு சிறு பாத்திரகளின் நிகழ்ச்சிகள் நெருக வைத்தன. நம்பிக்கை ஊட்டிய அந்த பாத்திரங்கள் மனதில் நிற்க்கிறது .

பழைய ஆடைகளை துவைத்து அயன் செய்து பத்து ரூபாயிட்க்கு விற்கும் இளைஜன் என நிறை அயிடியா  வேறு .
 பசியால் வாடும் ஒருவன் கழிப்பறையை சுத்தம் செய்து வெளியில் இருந்து 1 ரூபாய் பணம் சேகரிப்பது . சரியில்லாத நடத்தை கொண்ட பெண் குள்ளமான ஒருவரை(  அவளது பாதையை மாற்றியவரை ) திருமணம் செய்து வாழ்வது . அவர்களுக்கு ஊனமாக( மாற்றுத்திறன் உள்ளவர்கள் ) குழந்தை பிறக்கிறது. அதை பார்த்து தாய் சந்தோஷப்படுவது ஓகே . ஆனால் அந்த குழந்தை வாழ்க்கை என்னாவது ?? இவ்வாறான   சில கேள்விகளுக்கு விடை தேடினால் கருணைக்கொலை நல்லது எனப்படும் .

நாயகன் வாழும் இடம் , வேலை செய்யும் கடையில் உணவு பரிமாறல் போன்றன மற்றயது அந்த மேற்ப்பார்வையாளர் பண்ணும் அதி பயங்கர கொடுமைகள் என காட்ச்சிகளை தான் சிலர் மிகைப்படுத்தப்பட்டு உள்ளது என்கிறார்களோ. என்னுடைய கணிப்பின் படி உண்மை தான் காட்டப்பட்டுள்ளது . ஆனால் எல்லோரிடமும் அந்த கொடூரமான  முதலாளித்துவம் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.


நாயகன் தனது எளிமையான நடிப்பால் அசத்தியுள்ளார் . பக்கா  கிராமத்து பையன். அவனுடைய நண்பனாக வரும் கனாக்காலும் காலங்களில் நடித்த பாண்டி நகைச்சுவையில் கலக்கல் . சில இடங்களில் நடிப்பும் பிரமிக்க வைக்கிறது . உருக்கமான காட்ச்சிகளில் அசத்தியுள்ளார் . 

நடிகையிடம் ஒரு குறும்புத்தனம் ஒட்டியபடியே இருந்தது . பின்னர் உருக்கமான காட்ச்சிகளில் சற்று நடித்துள்ளார் . இருக்கிற நடிகைகளின் நடிப்பை விட பெட்டெர் என்றே தோனுகிறது . 

இடையில் நாயகன் நாயகியின் தோழர்களுக்கு இடையே நடக்கும் காதல் சூபர்வயிசருக்கு
 தெரியவர சூபர் விசர்( சாரி சூபர்வயிசர்) பண்ணும் அட்டகாசம் தாங்க முடியேல்ல . தைரியமாக இருக்கும் பெண் , கோழைத்தனமாக ( குடும்ப கஷ்டததாலயாம் ) தான் காதலிக்கவில்லை என்று சூபர் வயிசருக்கு பயந்து சொல்லும் இடம் , உடனே அந்த பெண்ணின் நடிப்பு வசனங்கள் போன்றன யதார்த்தம் .

பெண்களுடன் தரக்குறைவாக நடக்கும் சூபர் வயிசறை பழி வாங்க நாயகனும் பாண்டியும் 
 மாடியில் இருந்து பொதியை போடும் காட்சி ஜாலி . எமக்கும் சந்தோசம் தான் .
பாண்டி காதல் கடிதம்( கடவுள் வாழ்த்து  ) எழுதி ஒரு பென்னிட்ட்கு கொடுப்பது ரசிக்க வைத்தது . கவிதை எழுத படும் பாடு . பாண்டியின் முக பாவங்கள் அருமை .

இதில் ஒன்றும் யாரும் வாழ்க்கையில் சொல்லாத வசனங்கள்  இல்லை . அருவருப்பான வசனங்கள் பாவிக்கப்படுவதால் அப்படியே காட்டப்பட்டுள்ளது . என்ன குடும்பமா போன முகம் சுளிக்க  வைக்கும் . குறைச்சிருக்கலாம் .

இறுதியாக காதலி (கவி ) ஊனமாகிய பின்னும் ,, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம என்ற இடம் கலங்க வைக்கிறது . 


பின்னணி இசையை விஜய் அந்தோனி கொஞ்சம் அள்ளி தெளிச்சிருக்கலாம் . படத்தில் பெரிய குறை பின்னணி  இசை. உணர்வுகளை இன்னும் ஆழமாக பிரதிபலித்திருக்கும் .

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ஏற்க்கனவே ஹிட் . உன் பேரை சொல்லும் போதே பாடல் எளிமையான அருமை . பாடல்கள் இரண்டும் தூக்கி நிறுத்துகிறது .

இடையில் ஸ்னேஹா வேற வந்து போறாங்க ( எதிர்பாக்கேல்லீங்கோ ).

பெரிய சந்தேகம் ???? முருகன் ஸ்டோர்ஸ் ( முருகனுக்கு ஒத்த பெயரா உள்ள வேற கடையா ) 
ஸ்னேஹா  விளம்பரம் ??? 
முதலாளி விளம்பர படம் எடுக்க அயிடியா கொடுக்கும் இடங்கள் எல்லாம் ஸ்னேஹாவே   நடந்ததை சொல்லி இருப்பாவோ ??    

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்- விமர்சனம்


  நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு ஒழுங்கான மகிழ்ச்சியான(வயிறு குலுங்க ) திரைப்படம் பார்த்த அனுபவம் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் . உண்மையிலேயே வைச்ச குறி தப்பேல்ல மாமு .வழமையாக நகைச்சுவையுடன் கருத்துக்களை அள்ளி வழங்கும் இயக்குனர் சிம்புதேவன் படங்கள் வரிசையில்(23 ஆம் புலிக்கேசி , அறை எண் 305 இல் கடவுள் )  இன்னொரு வெற்றிப்படம். அரசியல் கருத்துக்கள் , தமிழர் பிரச்சனைகள் பற்றிய வசனங்களும்  பஞ்சமில்லை.

பிரபல முன்னணி நடிக நடிகைகள் மனோரமா , டெல்லி கணேஷ் , நாசர் , வி.எஸ் ராகவன் போன்றோரும் நமக்கு வழமையாகவே பிடித்த எம் எஸ் பாஸ்கர் , வையாபுரி , ரமேஷ் கண்ணா என பெரிய நகைச்சுவைப்பட்டாளம். இவர்களுடன் லாரென்ஸ் ,சந்தியா , பத்மப்ரியா , லட்சுமி ராயும் பாத்திரங்களில் நிறைவு . இடையில் வி எஸ் ராகவனை மட்டும் காணவில்லை.

36 வருடங்களுக்கு பிறகு ஒரு கௌபாய் திரைப்படம். ஜெய்சங்கர் இதற்க்கு முதல் ஒரு கௌபாய் படம் நடித்திருந்தார். இந்த கௌபாய் கதை நடக்கும் இடத்தின் பெயர் ஜெய் ஷங்கர் புறம் . ஆரம்பத்தில் கௌபாய் வரலாறு சினிமா நடிகர்களை வைத்து கூறுவது அருமை.


படத்தின் கதை(ஒரு புனை  கதையாக ) என்று பார்த்தால் கௌவ் பாய்(தமிழ்)  காலத்தில் நடக்கிறது .லாரென்ஸ் வைரம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு செல்லும் போது சிலரால்(வேறு கௌபாய் குழு ) காப்பாற்றப்படுகிறார். காரணம் அவர்கள் இனத்தலைவன் சிங்கம் போன்றவன். அந்த  இனத்தலைவனை
 இழந்து துடிக்கும் மக்கள்  வலுவிழந்து இரும்புக்கோட்டையில் இருக்கும் கிழட்டிடம் (நாசர் ) அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர் . அதனால் அம்மக்களை புரடச்சிகொண்டு எழ வைக்க(இரும்புக்கோட்டைக்கு எதிராக ) சிங்கம் போலவே உள்ள லாரென்சிடம் நீ சிங்கமாக நடித்தால் அதே போல உள்ள வைரத்தை தருகிறோம் என்கின்றனர் . உண்மையான சிங்கம் வீரன் அவளவு தான் வித்தியாசம் . இறுதியில் இரும்புக்கோட்டைக்கும் முரட்டு சிங்கத்திட்க்கும் நடக்கும் யுத்தம் இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதை கலகலப்பாக காட்டியுள்ளார் சிம்புதேவன் .


திரைக்கதையில் இரண்டாம் பாகத்தில் சில நீட்ச்சிகள் தெரிந்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து இல்லாமல் பண்ணி விடுகின்றனர் . அதுவும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மக்களுக்கு தேவையான கருத்துகளில் பின்னி பெடல் எடுத்து விட்டார் சிம்புதேவன் .

பின்னணி இசையை  ஜி வி பிரகாஷ் சரியாக செய்துள்ளார் . பாடல்கள் ஒன்றும் பெரிதாக ஹிட் ஆகா விட்டாலும் காட்ச்சியுடன் கேட்ப்பதட்க்கு நன்றாக உள்ளது . ஒளிப்பதிவாளர் அழகப்பன் குதிரைகளில் செல்லும் காட்ச்சிகள் , லாறேன்சின் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் போன்றவற்றில் நான்றாக செய்துள்ளார் .

விஷுவல்  பீட்டர் போல் . துப்பாக்கி சுடும் காட்சி , கார்ட்ஸ் விளையாடும் காட்சி என விஷுவலில்  விளையாடி உள்ளார் .

பாஸ்கர் செவ்விந்திய தலைவனாக வருகிறார். சந்தியா அவர் மகள் . பாஸ்கர் க்கு மொழி பெயர்ப்பாளர் ஆக வருபவர்( ஜாவா சுந்தறேசனாக  அறை எண் 305 இல் வருபவர் ) மொழி பெயர்ப்பில் பாஸ்கர் போலவே உடல் அசைவையும் மொழி பெயர்க்கும் போது  சொல்வது அசத்தல் .


3 நடிகைகள் வந்தாலும் இந்த உடைகளில் மிகவும் அழகு. பதம்ப்ப்ரியா லாறேன்சின் காதலியாக வருகிறார் . லட்சுமி ராய் நாசருடன் இருக்கிறார் . இடையில் சந்தியாவையும் சந்திக்கிறார் . நாயகிகளுக்கு பஞ்சமில்லை .வயிறு குலுங்க சிரிக்க , சிந்திக்க வைத்த வசனங்கள் தான் படத்தின் பிளஸ். சென்சார்ல தியேட்டர் ல இருக்கிற ரீலை எடுத்து வெட்டாமை விட்டா சரி டோய் . ஏகப்பட்ட மறைமுக நக்கல்கள் . அரசியல் வாதிகள் மக்களின் நிலையை புட்டு வைச்சிடாருப்பா.

நின்றய காட்ச்சிகளும் கூட.. போய் பார்க்கும் போது உற்று கவனிக்கவும் .

ஐயருக்கு கௌபாய் தொப்பி ரொம்ப ஜில்லாலங்கிடி .. குறும்பு சிம்புதேவன் . அதுவும் குகை திறக்கும் வாசலில் கல்லில் ஜவுளிக்கடை விளம்பரம் இட்டிருப்பது கடியோ கடி .

படத்தில் புதையல் எடுப்பதற்க்கு குகைக்குள் செல்வதற்க்கு துண்டு சீட்டில் கேக்கப்பட்டிருக்கும் கேள்விகளும் பதிலும் .

தமிழில் எத்தனை எழுத்துக்கள் ? -
லட்ச்சுமி ராய் - 33
அந்த அம்மா சொல்லுறது நடக்காது டோய் .. ( 33 %  இட ஒதுக்கீடு.. லொள் )

 பொங்கு தமிழனுக்கு   பிரச்சனை வந்தால் என்ன செய்வோம் ?
A . ஆக்ரோஷமாக கிரிக்கெட் பார்ப்போம்
B . சினிமாவுக்கு போய் பாலாபிஷேகம் பண்ணுவோம்
C . டீக்கடையில் ஒக்காந்து வெட்டி பேச்சு
D .கலக்கப்போவது யாரு

இடையில் வரும் வாசங்களும் பஞ்ச் :
 நாசர் பேசும் வசனங்கள்  :- "தமிழனுக்கு பிடிக்காத வார்த்தை சுய உரிமை "  

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை புரட்சி  என்பன செம கடி .


தமிலன்ல ஒருத்தனுக்கு பிரச்சனைனா இன்னொருத்தன் வர மாட்டான் .. அது தெரிஞ்சு தானே இரும்புக்கோட்டையை   இங்க கட்டியிருக்கேன் என நாசர் சொல்லுமிடம் சூபர் .

மொத்தத்தில் சொல்ல  வந்ததை சொல்லி முடித்திருக்கிறார் சிம்புதேவன் . மனுஷன் பெருசா கதைக்காட்டியும் செயல்ல காடீடுப்பா ..karthikeyan

சிங்கம் - திரை விமர்சனம்

karthikeyan


  நிறைய நாட்களாக ஒரு நல்ல கமெர்ஷியல் படம் பார்க்கவில்லை என்கிறவர்களுக்கு ஹரி கொடுத்திருக்கும் இன்னொரு மெகா ஹிட் திரைப்படம் சிங்கம் . சனி,  ஞாயிறு தமிழ்  ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இந்த படம் அமையும் . சன் பிக்சர்ஸ் க்கும் ஐங்கரனுக்கும் இன்னொரு 200/100 நாள் திரைப்பட வரிசையில் இணையும் .ஒரே கதையோ அல்லது ரவுடி கதைகளோ அதில் திரைக்கதை என்பது  மிக மிக முக்கிய பங்கு என நிரூபித்திருக்கும் ஒரு படம் . ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இருந்த இடத்தை விட்டு எழும்ப விடாமல் வைத்திருக்கும் அளவு திரைக்கதை சுவாரசியம் . இடை வேளையின்  பின்பு திரைக்கதையின் வேகம் இன்னமும் அதிகம் . அது ஹரியின் ரகசியம் . 

முதல் ஆரம்ப காட்ச்சியிலேயே எதுக்கு துவக்கு வைச்சு கொண்டு சண்டை பிடிக்கிறார், ரவுடிகள் பறக்கிறான்களே என்று கேள்வி எழுந்தாலும் அந்த படத்திற்கு அவர் உடலை தயார் செய்திருக்கும் விதம் பார்க்க இவரு அடிக்கலாம் என்று எண்ணத்தோன்றும் .

போலீஸ் வேலையிலேயே விருப்பமில்லாத ஊர் மக்களுடன் அன்பாக இருக்கும் சூர்யா  (துறை சிங்கம் ) எவ்வாறு நெல்லூரில்(கிராமம் ) இருந்து திருவான்மியூர், ஆந்திரா வரை செல்கிறார் , இறுதியில் எப்படி ஸ்பெஷல் அதிகாரி ஆகிறார்  என்பது இயக்குனரின் கைவண்ணம். இது கதையின் கரு. இவருக்கு இடையில்  என்ன என்ன பிரச்சனை வருகிறது , அதற்க்கு யார் காரணம் என  மிகுதியை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .


இந்த படத்தை திரைக்கதையோடு சேர்த்து தூக்கி நிறுத்த சூர்யாவின் உழைப்பு படத்தில் பார்த்தால் தெரியும்  . அந்த கம்பீரமும் , வீரமும் போலீசுக்கு உரிய ஸ்டையிலில் பின்னி இருக்கிறார் . இளைஞர்கள் மனதில்  இன்னொரு மூன்று முகம்  ரஜனி வந்துவிட்டார் என்று எண்ணத்தோன்றும் . 

சூர்யாவுடன் சேர்ந்து படத்தை தூக்கி நிறுத்திய பங்கு நாசர் , பிரகாஷ் ராஜ் க்கு போய் சேரும். கில்லியில் பார்த்த அதே முகம், கோபம், நடிப்பு பிரகாஷ்ராஜை மகா நடிகனாக்குகிறது .  

முக்கியமாக நாசர்(அனுஷ்காவின் அப்பா ) போலீஸ் கானுக்கு பொன்னை கட்டி கொடுக்க மாடன் என முரட்டு பிடிவாதம் கவுரவம் பார்க்கும் இடங்களில் சபாஷ் போடலாம். என்ன ஒரு நடிப்பு . அதுவும் நீங்க கொடுத்த லயிசன்ஸ் காலாவதி ஆகிரிச்சாம் என்று அனுஷ்கா  சொல்லும் இடத்தில் கொடுப்பார் ஒரு ரி ஆக்க்ஷன். பின்னணியில் நாயகன் நீங்கள் நல்லவரா கெட்டவரா? டியூன் ஒலிக்கும் . ரசித்த காட்சி. 

லாஜிக்கில் பிழை இல்லாமல் அவளவு ரவுடிகளையும்  ஒரேயடியாக அடிக்காமல் பிளான் போட்டு தூக்குவதில் இயக்குனரும் ,அவரின்  திட்டமும், சூர்யாவின் நடிப்பும்  மிக மிக அருமை .காட்சிகள் அனைத்தும் திரைக்கதையின் வேகத்துடன் கச்சிதமான பொருத்தம் . முக்கியமாக எப் ஐ ஆரை கிழித்து போட கேட்க்கும் ரவுடியுடன் தானே எப் ஐ ஆரை கிழித்து போட்டு விட்டு எதுக்குடா எப் ஐ ஆரை கிழிச்சா ? என்று கேட்க்கும் இடம் கைதட்டல் .


தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை முதலில் கேட்க்க பிடிக்கவில்லை . தியட்டரின் காதல் வந்தாலே க்கு கிடைத்த ரெஸ்போன்ஸ் சூபர் . சிங்கம் போல நடந்து வரும் போது போடும் பின்னணி பாடல் "சிங்கம்" காட்ச்சியுடன் உண்மையில் சிங்கம் போலவே இருப்பார் சூர்யா  . வேறு எந்த பாடலும் தூக்கி நிறுத்தவில்லை . 

விவேக்கின் காமெடி ரெட்டை வசனங்களை(ஏன் இப்பிடி மாறினார் ) கொண்டு வந்தாலும்   சிரிக்க வைக்கிறார். போர்ட்டர் வேலைக்கா படிக்கிறீங்க இவளவு சுமை சுமக்கிறீன்களே என பை கொளுவிச்செல்லும் பிள்ளையை பார்த்து விவேக் கேட்ப்பார். அங்கு மட்டும் தான் பழைய விவேக் தெரிந்தார் . 


அனுஷ்கா கவர்ச்சிக்காக வந்தாலும் புப்ளிக்கிலை இருக்கிற வரவேற்ப்பு எப்பா . 

இருந்தாலும் திரைக்கதையால் கட்டிப்போட்ட சிங்கம் . தைரியமாக மாபெரும் வெற்றி என்று சொல்லலாம் . ஹரி , சூர்யா , பிரகாஷ்ராஜ் இன் உழைப்பு தெரிகிறது . ஒரு படத்தை கொண்டு சேர்க்க தாய் உணர்ந்து நடிக்க வேண்டும் என நிரூபித்துள்ளனர். நல்லதொரு கமேர்ஷால் படம் . 

இராவணா

  

  விசில், ஆரவார கூட்டம்  இல்லாத நாளா போய் ராவணா பாக்க வேணும்னு கிழமை நாட்கள்ல போய் பார்ப்போம்  என்று இன்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .

கதை உலகத்துக்கே தெரிந்த கதை தான் . வெளிநாட்டு கதைகளை சுட்டு சினிமா எடுப்பதை விட எமது வரலாற்று கதையை எடுத்து அதை வெளிநாடுகளுக்கு நவீன முறையில் மாற்றி கொண்டு போய் சேர்த்த மணிக்கு முதல் வாழ்த்துக்கள் .

ஆனா இன்னும் ராமாயண கதை முழுதாக தெரியாத கூட்டம் கூட இருக்குன்னு தியேட்டர் கமெண்ட்ஸ்  சொல்லியது .அப்படி அப்படியே பாத்திர படைப்புகள் . ராமனாக பிரிதிவ் ராஜ் , சீதையாக ஐஸ்வர்யா ராய் , ராவணன் விக்ரம் ,அனுமான் கார்த்திக் , கும்பகர்ணன் பிரபு , விபீஷணன் - பெயர் தெரியாது,   சூர்ப்பனகை - பிரியாமணி . அதே இயல்புகளுடனும் படைக்கப்பட்டுள்ளது . ஆட்டை குழம்பு வைச்சு சாப்பிட சொல்லு சாபிடுறன், மற்றையது அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் ராவணனுக்கு தவறு என சுட்டிக்காட்டிக்கொண்டு இருப்பார் . அவர் தான் விபீஷணன் .

படத்தின் சிறப்பு  - (இப்பிடி சொன்னாலே  நிச்சயம் மறை கருத்தும்  இருக்கும்) 

மணி கதையை(அதே கதை ) கையாண்ட விதம் மிக அருமை . கதையின் மையக்கருவையும் கோணத்தையும் மாற்றி வரலாற்றையே மாற்றி விட்டது. ராவணன் பற்றி வரலாறு  கூறிய பொய்யை போட்டு உடைத்தது நவீன ராவணன் . எத்தனை குழுக்கள்  கொடி தூக்க போகுதோ ?

ஒளிப்பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது  போல என்னையும் கவர்ந்தது . மனோஜ் பரமஹம்ச க்கு பிறகு சந்தோஷ் சிவனை அடையாளம் காட்டியுள்ளது . உயிரே க்கும் அருமையாக பண்ணியிருப்பார் . நீர்வீழ்ச்சி மற்றும் காடுகளில் கமெராவை வைத்த விதம் அருமை .

கள்வரே கள்வரே பாடல்  காட்சி அமைப்பு பாராட்டுக்குரியது . அவ்வளவு அழகு . ஐஸ்வர்யாவும் காட்ச்சியும் .

ராவணனின் பாத்திரத்தை மாற்றி அமைப்பதில் எளிமையான வெற்றியை கண்டிருக்கிறார் . ராமன் மனதில் நிற்க்கவில்லை , ராவணன் தான் வாழ்கிறான் . படத்திலும் வாழ்ந்தான் .

ராவணனை சிவன்  பக்தனாக காட்டிய வரலாறு. ஹரியை ஹீரோவாக காட்டியது . எம்மை இழிவாக காட்டுவதே வேலையாக போய் விட்டது . மணியின்  காவியம் சிந்திக்க வைக்கும் .

படத்தின் எதிர் மறை(மயினஸ் ) 

முக்கியமாக மணியின் பழைய படங்களில் இருந்த சிறப்பு இதில் இல்லை . காரணம் ஒரு வகையில் சுகாசினியின்  எழுத்தாகவும் இருக்கலாம் . மணி  சொல்ல வரும் ,காட்ட நினைக்கும் காட்ச்சிகள் வசனத்தில் பஞ்சத்தை காட்டியது . சில இடங்களை தவிர. சுஜாதாவை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லையோ ? சுஜாதா மணியின் படங்களின் சிறப்பு எனலாம் .

இந்த கெமிஸ்ட்ரி எனும் விடயம் ஐஸ்வர்யா ராய்க்கும் , விக்கிரமுக்கும் இடையில் இல்லை . சில இடங்களில் பார்வையில் மாத்திரம் தெரிகிறது . ஒரு வேளை சீதையையும் ராவணனையும்  நெருக்கமாக காட்டினால் குழுக்கள் கொடி பிடிக்கும் என்று பயந்திருக்கலாம். ஆனால்  அந்த குறையே இறுதி காட்ச்சியில்  மனதை நிரப்பாத ஒரே காரணம் .

என்னைப்பொருத்த வரை மோசமான எடிட்டிங் ..

காட்டு சிறுக்கி பாடலையும் காணவில்லை . ராவணனோடு டூயட் பாட கூடாது என்றோ ?

வசனங்களில் ஆங்காங்கே சுகாசிநியினியை  அடையாளம் காட்டுகின்றன. விக்ரம் ஐஸ் இடம் கேட்க்கும்  " அவரு எப்பிடி சிவப்பா இருப்பாரோ ? ஆமா சாமின்னா சிவப்பா தானே இருப்பாரு ? " " நாம எல்லாம் அரக்கர்கள் அழுக்கு தீண்டப்படாதவர்கள் " போன்ற வசனங்கள் ஹயிலயிட் . சுஜாதாவின் எழுத்தையும் ஞாபகப்படுத்தியது  . எனக்கு திராவிடர்கள் வரலாற்றில் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது மனதில் தோன்றியது .

ஐஸ்வர்யா ராயின் நடிப்பு மட்டுமே பாராட்ட கூடியது . கார்த்திக்கும் சிறப்பாக பண்ணியிருப்பார் . ஆனால் விக்ரம் நடிப்பை சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் காணவில்லை .

மணி மாற்றியமைக்க நினைத்த வரலாறு , படைக்க இருந்த காவியம் எழுத்தாளர் சுஜாதாவின் இழப்பாலும் , போர்க்கொடிகளாலும் காணாமல் போய் விட்டது . இவை இல்லாமல் சாதாரண தரத்தில் திருப்தியடைய வைத்திருக்கிறது ராவணா .

நல்ல படத்தை  தூக்கி நிறுத்தியது ஒளித்தொகுப்பும் மணியுமே !!

"வரலாற்றை மாற்றி அமைத்த காவியம் " - வாழ்ந்திருக்கிறான் . 


எனது பார்வை பிடித்திருந்தா மறக்காம  ஓட்டையும் karthikeyan

சினிமா திரை

karthikeyan 


இன்றும் ஒரு தகவலுடன் ஆனால் கொஞ்சம் உங்களுக்கு பிடித்த தகவல் தான் .கூடுதலாக சிலர் திரைப்படங்களை தவறாமல் பார்ப்பதுண்டு . ஆனால் ப்ரொஜெக்டர் போன்றன திரைப்படம் ஓடுவதற்கு காரணம் என நாம் நினைப்பதுண்டு .

திரை பார்ப்பதற்கு வெறுமையானதாகவே இருக்கும் . அதனாலோ என்னவோ அதன் சிறப்பு அறிந்திருப்பதில்லை . திரை சிறந்த தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டது  .அதை பற்றி பார்ப்போம் ..

திரைக்குபின்னால் இருந்து பார்க்கும்போது ..திரைக்கு முன்னால் இருந்து பார்க்கும் போது ...


திரை அதில் பட்டு தெறிக்கும் வெளிச்சத்தை  வைத்து வகைப்படுத்தப்படுகிறது .


Matte white: < 5 % குறைவான ஒளித்தெறிப்பு மிக கடுமையான சாம்பல் நிற படங்கள் , மங்கலான வெளிச்சம் காணப்படும். 


Pearlescent: 15 % ஒளித்தெறிப்பு . கடுமையான  சாம்பல் நிறமும். தெளிவான வெளிச்சமும் காணப்படும் . கூடுதலாக தியேட்டர்களில் பொதுவாக பாவிக்கப்படும் திரை .தெறிப்படையும் வர்ணபூச்சுகள்  பூசப்படும் .


Silver: 30 % ஒளித்தெறிப்பு , நடுத்தரமான சாம்பல் நிற, மிக மிக தெளிவான படம் , கடுமையான நிறங்கள் மங்கலாக தெரியும் .


Glass bead: 40   %  அல்லது அதற்க்கு மேலான ஒளித்தெறிப்பு . சாதுவான சாம்பல் நிற படங்கள் . நல்ல தெளிவான படம் .
இது பல சிறிய மாபிள்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு பார்க்க கண்ணாடி போல பூச்சு மென்மையாக பூசப்படும் . 


வெறுமனே பெரிய படத்தை மாத்திரம் கொண்டு அவை வடிவமைக்கப்படுவதில்லை . அவை ஒலிப்பதையும் சத்தத்தையும் கொண்டும் தீர்மானிக்கப்படுகின்றன . 


சாதாரண  தியேட்டர்களில் இடது பக்கத்தில் தொலைவில் ஒரு ஸ்பீகரும் நடுவில் ஒன்றும் . வலது  பக்கத்தில் தொலைவில் ஒன்றும் இருக்கும் . அவை தான் நாம் உண்மையான சூழலில் இருந்து சத்தத்தை உணருவது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தும் . அதை தான் DTS சவுண்ட் என்கிறோம் .
மூன்றுவகைகளின் அவற்றின் தெறிப்புக்கு ஏற்ப்ப திரைகளை தெரிவு செய்கின்றனர் .


Flat screen - தட்டையான திரை 


இதில் மேலே படத்தில் உள்ளவாறு நடுப்பகுதியை ஒளி விரைவாக வந்தடைந்துவிடும். கரைப்பகுதிகளுக்கிடையான தூரம் கூடவாக இருக்கும் . அதனால் இதில் கரையில் சற்று பெரிதாக உருவங்கள் தோன்றும் . இதனை நிவர்த்தி செய்யவே வளைந்த திரை வந்தது . 


Horizontal-curve screen - வளைந்த நீளமான திரை 
வளைந்த திரை இரு புறமும் வளைந்திருக்கும் . இதனால் இறுதி முனைகள் முன்னோக்கி வந்திருக்கும் . ஆகையால் ஒரே நேரத்தில் ஒளி திரையில் படும் . 


Torex ஸ்க்ரீன் 


இவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் விதமாக உருவாகியதே டோரெக்ஸ் ஸ்க்ரீன் . இது இரு புறமும் மட்டுமல்லாது மேலேயும் கீழேயும் வளைந்திருக்கும் . அதனால் முழு ஒளியும் ஒரே நேரத்தில் திரையில் படும் .