திங்கள், 15 ஜூன், 2015

எப்போது வருவாய் என் மகளென்ற முகவரியாய்விழிக்கும் முன்


       விழித்திருப்பாய்!

உண்ணும் வரை

      காத்திருப்பாய்!

பேசும் வரை

      மௌனமாய் இருப்பாய்!

ஆனந்த மானால்

      ஆர்ப்பரிப்பாய்!

எடுக்கும் முடிவுக்கு

      என்றும் ஆதரவு அளிப்பாய்!

கோபத்தின் கொட்டத்தை

      கொதிப்போடு அடக்குவாய்!

எல்லை யில்லா ஆசைக்கு

       அளவு கோலா யிருந்தாய்!

பேரின்பத்தை

      பெருந்திரளாய் கொடுத்தாய்!

ஆ வென அலறும் போது

      அன்போடு அணைத்தாய்!

இனிமையாய் எல்லாவற்றையும்

      இயன்றவரை எடுத்துரைத்தாய்!

எட்டு திக்கு எங்கு போனாலும்

      எனக்காக ஏங்கினாய்!

பைத்திய காரனாய் செய்த தவறுகளை

      பணிவுடன் பொறுத்தாய்!

என் தனை ஆள என்னுள்

     என்றும் குடி கொண்டாய்!

எமக்குள் இருந்த அறியாமையை

     அலை போல அழித்தாய்!

ஆண் என்று பெண் என்று

     அவதாரம் காட்டினாய்!

ஆண்மையையும்

     உணர்த்தினாய்!

பெண்மையையும்

 உணர்த்தினாய்!

எம் தந்தை யானாய்!

என் தாயு மானாய்!

எம் நண்பன் ஆனாய்!

எம் ஆசான் ஆனாய்!

எல்லாமும் ஆனாய்!

என்னவளாய் இருந்தாய்

   இரு வருடம் முன்பு வரை!

அடியே எங்கு சென்று விட்டாய்

   முகவரி கூட கொடுக்காமல்

உன் மகளாக வருவேன்

   என்றாயே

எப்போது வருவாய்


   என் மகளென்ற முகவரியாய்!!!!!


       ------  காத்திருக்கிறான்  உம் மகன் கார்த்திகேயன் .

2 கருத்துகள்: