செவ்வாய், 2 ஜூன், 2015

கை கொடுத்த அனைவருக்கும் நன்றி

கடந்த வருடம் நவம்பர் மாதம் பிற்பகுதியில் நடந்த விபத்தில் சிக்கிய எனக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  இந்த எலும்பு முறிவுக்கு  அறுவை சிகிச்சை செய்யாமல் நாட்டு வைத்தியத்தின் மூலம் பச்சிலை மருந்துகளை பயன்படுத்தி நாட்டு கட்டு போடப்பட்டு இப்போது இரண்டாக உடைந்த எலும்பு முழுவதுமாக கூட வைக்க பட்டுள்ளது ....


இதற்கான காலம் அதிகம் என்றாலும் இது  ஒரு பெரிய விசயம் .  ஏனென்றால் 6 மாதமாக எனக்கு பொறுமையாக சித்த வைத்தியர் அய்யா அவர்கள் என் மீது அக்கறை எடுத்துகொண்டு கவனித்து கொண்டார் ..  வைத்தியம் செய்வது அவர் தொழில் என்றாலும் நோயாளிகள் மீது ஒரு அக்கறை எடுத்துக்கொண்டு பார்ப்பதற்கு பெரிய மனது வேண்டும்.

இரண்டாக உடைந்த எனது வலது கையை சரிசெய்து என் வலது கையாலே என்னை சாப்பிட வைத்த வைத்தியர் அய்யா வுக்கு உயிர் உயிர் இருக்கும் வரை நன்றிக் கடன் பட்டு உள்ளேன்...

இந்த 6 மாத காலமாக என்னை சிறு குழந்தை போல பாவித்து எனக்கு சாப்பாடு ஊட்டி குளிக்க வைத்து , மலம் கழிக்க அழைத்து சென்று பின் அதை சுத்தம் செய்து விட்டு, சிறிதும் மனம் கோணாமல் எனக்கு பணிவிடை செய்து எனக்கு தாயாக இருந்து என்னை பார்த்து கொண்ட என் அப்பா திரு.ஆறுமுகம் அவர்கள் ..  தெய்வம் யா நீ தெய்வம்..   நான் உனக்கு மகனாக பிறந்தது என் பாக்கியம் ...

நான் விழுந்ததும் என்னை தூக்கி காப்பாற்றியவர்கள், மருத்துவமனைக்கு உடன் வந்தவர்கள், வலி தெரியாமல் இருக்க ஊசி போட்ட செவிலியர்கள், கட்டு போட உதவிய உதவியாளர்கள், தக்க சமயங்களில் வாகனம்  எடுத்து வந்த தம்பி "இளையராஜா", என்  தந்தை இல்லாத நேரங்களில் எனக்கு சாப்பாடு கொடுத்து கவனித்து கொண்ட தங்கை "பிரியா" ,  பல உதவிகளை தேவையான போது செய்து கொடுத்த "எங்கள் தெரு நல் உள்ளங்களுக்கு ", என்னை சந்தித்து ஆறுதல் கூறியவர்கள், என்னை நேரில் சந்தித்தும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டும் எனக்கு ஆறுதல் சொல்லிய நண்பன் "தேவா ", வலது கைக்கு பயிற்சி கொடுத்த பெரியப்பா "பூங்காவனம்",


வலது கையில் சாப்பிட சொல்லி ஊக்கம் கொடுத்த தங்கை "தாட்சாயினி", வலது கையில் சாப்பிட பயிற்சி கொடுத்து உற்சாக மூட்டிய அண்ணன் "லிங்கேசன்", மருந்து சாப்பிட ஒவ்வொரு வாரமும் இலவசமாக சுத்தமான பசும் பால் கொடுத்த, என் உடம்பில் இருந்த முட்களை சிரமம் பார்க்காமல் எடுத்து கொடுத்த, சொந்தம் இல்லையென்ராலூம் சொந்தமாக பாவித்து என்னை பார்த்துகொண்ட அக்கா "லஷ்மி" மற்றும் அவரது கணவர்அண்ணன் "பாண்டியன்",

தர்மபுரியில் தேவையான உதவிகளை செய்து கொடுத்த செவ்வாடை உறவினர்கள் , தொண்டர்கள் , இப்படியான கஷ்ட காலத்திலும்  வந்து பார்க்காமல் கல் நெஞ்சத்துடன் இருந்து தங்களின் நிலை, அக்கறை, பாசம், பந்தம், ஆகியவற்றை உணர்த்திய சொந்தங்களே

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்  ....


தாங்கள் செய்த இந்த உதவி என் உயிர் உள்ளவரை உங்களுக்கு நன்றி கடன் பட்டு உள்ளது.

2 கருத்துகள்: