வியாழன், 18 ஏப்ரல், 2013

பள்ளி மாணவியின் ஆண்டுக் கவிதை



மழை:

முத்தான   மழையே


யாருமில்லா நேரம் பார்த்து


மண்ணில் விழுந்த அதிசயம் என்ன


உன்னை காணும் ஒரு சில நொடியும்


என்னைத் தொட்டு போவதுண்டு


இயற்கையாகவே!


கவிதையாக மாறும் உன்னை


கற்பனை செய்ய முடியும்


மழைத்துளியாக மாறும் உன்னை


மவுனமாக காண முடியும்


கனவு காணும் காலங்கள் யாவும்


உண்மையாக மாறும்


இயற்கையாகவே !

-   கோ . ப்ரியா
-   முதலாம் ஆண்டு
-   அரசு மேல்நிலைப்பள்ளி சாத்தனூர்.


ஆசிரியர்:

கல் போன்ற விதை நாங்கள் 


அதை சிற்பமாக்கும் சிற்பியாக நீங்கள்


வேலை செய்யும் இயந்திரம் போன்று நாங்கள்


அதை கடினபட்டு உருவாக்கும் அறிஞர் நீங்கள்


சிறு சிறு பூக்களாக நாங்கள்


மலர்ந்து மனம் வீச செய்யும் மாண்பாலாரகா நீங்கள்


குறும்பு செய்யும் குழந்தையாக நாங்கள்



அதை திருத்தும் தாயாக நாங்கள் .

-   கோ . ப்ரியா
-   முதலாம் ஆண்டு
-   அரசு மேல்நிலைப்பள்ளி சாத்தனூர்.
 

2 கருத்துகள்:

  1. அருமை...

    கனவு காணும் காலங்கள் யாவும் உண்மையாக மாறும்...

    வாழ்த்துக்கள்... (சகோதரியிடம் சொல்லி விடுங்கள்)

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி நண்பரே
    நிச்சயமாக சகோதரியிடம் சொல்லி விடுகிறேன்

    பதிலளிநீக்கு