வெள்ளி, 15 மார்ச், 2013

பாலாவின் பரதேசி விமர்சனம்

இந்த படத்தை சாமானிய மனம் படைத்த எல்லாராலும் பார்க்க முடியாது  
அந்த அளவுக்கு இந்த படத்தில் பாலா  சோகத்தை  கசக்கி பிழிந்து  எடுத்து இருக்குறார் ....

1939- இல்  நடக்கிறது அல்லது ஆரம்பிக்கிறது கதை . ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை அதர் வா தன திறமையான நடிப்பில்   நம்மை சீட்டிலேயே உட்கார வைக்கிறார் ...

செம நடிப்பு . ஒவ்வொரு பாத்திரமும் கண கச்சிதமாக  நடித்து  இருக்கிறார்கள் .கங்கானி முதல் உண்மையாண  டாக்ராக வரும் அனைவரின் நடிப்பும் செம...
விடுதலை போராட்ட காலம் முதலே தமிழனுக்கு எப்படி தமிழனே துரோகம் செய்து இருக்கிறான் என்பதை பார்க்கும் போது தானாக கண்ணில் நீர் துளிகள் எட்டிபார்க்கிறது...

அதர்வா.. கல்யாண வீட்டில் பசியுடன் சாப்பாட்டுக்கு ஏங்கும் போதும்.. அனைவரும் அவரை உதாசினபடுத்தும் போது அவர் அழும் போதும் தியேடேடரில் பெரும் அமைதி .. என் பக்கத்தில் அமர்ந்து இருந்த நடுத்தர வயது நபர் தனது கர்ச்சிப்பால் கண்ணை துடைப்பதை காணமுடிகிறது...



படம் ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் செய்யும் ஆரவாரம் போக போக எல்லாரும் அமைதியாகி படத்தில் ஒன்றிப் போவது படத்திற்கு பெரும் பலம் இது படத்திற்கு வெற்றியை தேடித்தரும் என்பதில் நிச்சயம்....

கதை எல்லாருக்கம் தெரிந்தது என்றாலும் ( நான் படம் பார்க்கும் முன்னரே கதையை பற்றி தெரி்துகொண்டேன் கிளைமேக்ஸ் தவிர) எந்த ஒரு காட்சியிலும் சலிப்பு ஏற்படவில்லை....

இந்த படத்தில் கிளைமேக்ஸ் இல்லை என்பது பெரும் ஏமாற்றம்...  திடிரென பாலா படத்தை முடித்துவிட்டார்... a film by bala என போடும் போது எல்லாரும்  முழு திருப்தியில்லாமல் எழுந்தனர்...


வேதிகா கொஞ்சம் அவ்வப்போது பிதாமகன் லைலா வை ஞாபகபடுத்துகிறார் ஒரு சில காட்சிகளில் மட்டும்... மற்றபடி செமயான நடிப்பு.. எதிர்பாராமல் தேயிலை தோட்டத்துக்கு கொத்தடிமையாக வேலைக்கு வரும் போது அதர்வா வை விட பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்குதான் செமயான அதிர்ச்சி... புலம்ப வைத்துவிட்டார்..
ஒரு சில தமி்ழ் பண்ணாடைகள் எப்படி எல்லாம் வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்கி இருக்கிறானுங்க என்று காணொளியாக பார்க்கும் போது அந்த காலத்தில் நம் முன்னோர்கள் இவர்களின் தந்திர வலையில் சிக்கி எப்படி எல்லாம் கஸ்டப்பட்டு இருப்பார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை...

படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அதர்வாவின் பாட்டி தீர்த்து வைக்கிறார்... செம பஞ்ச் கொடுக்குறார்...


தன்ஷிகா விற்கு காட்சிகள் குறைவு இருந்தாலும் முடிந்த அளவுக்கு முழுமையாக நடித்து இருக்கிறார்... வேதிகா, தன்ஷிகாவை இந்தக் கோலத்தி்ல் பார்க்க ரொம்ப பாவமாக இருக்கு.....

இந்த படத்தில் நீங்கள் ஒரு கமர்ஷியல் கிளைமாக்ஸை எதிர்பார்த்தால் நிச்சயம் நீங்கள் ஏமாறுவீர்கள்....

மீண்டும் பாலா தன்னை நிருபித்து உள்ளார்...
பிண்ணனியில் பின்னி பெடல் எடுக்கிறார் பிரகாஷ்குமார்...
ஒளிப்பதிவு... பக்கா..

ஒரு சில காட்சிகளை தவிர அனைத்தும் நம்மை ரசிக்க வைக்கிறது....
அவன் இவணில் வருவது போல இதிலும் கிராம நடைமுறை வார்த்தைகள் வருகிறது...

மகாத்மா காந்தியை இகழ்ந்தும் புகழ்ந்தும் தள்ளுகிறார்கள்



பாலா வின் பரதேசி அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய முழுமை பெறாத காவியம்....  வாழத்துக்கள் பாலா மற்றும் குழுவிற்கு...

2 கருத்துகள்:

  1. இன்னும் என்னால் உறங்க முடியவில்லை அந்த படம் பார்த்தபிறகு.
    கிளைமாக்ஸ் காட்சியில் பாலா நெஞ்சில் இடியயே இறக்கியிருப்பார்..

    கீழே எனது விமர்சனம் உள்ளது,
    பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.
    http://dohatalkies.blogspot.com/2013/03/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி நான் படித்த பரதேசியின் முதல் விமர்சனம்ம உங்களுடையதுதான்

      நீக்கு