ஞாயிறு, 31 மார்ச், 2013

உங்கள் பாஸ்வேர்டை திருட 10 நிமிடம் போதும்

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரிய தாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான்.
உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று  புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எழுத்துக்களில் Abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?
இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.

6 எழுத்துக்கள்:
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்
7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்
8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்
9 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்


thanks_____ 

Anas Abbas

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!


உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய முதற்தாய் மொழிவாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1.
தொலைமேற்கில் கிரேக்க நாடு
2.
மேற்கில் எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3.
வடமேற்கில் மென் ஆப்பிரிக்கா
4.
தொலை கிழக்கில் சீன நாடு
5.
கிழக்கில் பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6.
தெற்கில் நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் இறையனார் அகப்பொருள்என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள தென்மதுரையில்கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம்நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் தொல்காப்பியம்மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில்கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்றுத் தேடல் தொடரும்..!


திங்கள், 25 மார்ச், 2013

நமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை!


நமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை!

மார்ச் 25: ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.

கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி  வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால்  Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள்.


பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்!

thanks:
தொடர்புகளுக்கு:
sinthikkavum@yahoo.com
puthiyathenral@gmail.com

செவ்வாய், 19 மார்ச், 2013

இவர் எனக்கும் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டார்...

கடந்த 4 நாட்களாக எனக்கு காலில் சுலுக்கு ஏற்பட்டு நடக்க முடியாமல் எழ முடியாமல் போய்விட்டது..... சனிக்கிழமை மாலை அருகில் இருந்த ஒரு பாட்டியிடம் சென்று காண்பி்த்தேன்.. ஏதோ மூலிகை தழைகளை கொண்டு உருவிவிட்டார்கள்,,,, செம வலி  தாங்க முடியல....


மறு நாள் சரியாகிவிடும் என்று கூறி வீட்டுக்கு அனுப்பினார்கள்...

மறுநாள் காலை எழவே முடியல... அப்போது எங்கள் வீட்டிற்கு வந்த ஒரு பாட்டியின் மூலம் ஒரு பெரியவர் அறிமுகமானார்....

அவரிடம் சென்று உறுவி விட்டாள் சரியாகிவிடும்  என்று சொல்லவே 50 மில்லி விளக்கு எண்ணெயுடன் சென்று அவரை பார்த்தேன்.....


சும்மா சொல்லக்கூடாது.. மணுசன் சரியான ஆள்... ஸ்ஸ்ஸப்பா முடியல பெண்டெடுத்தார்.....


இ்ங்கு நான் சொல்லவந்து இந்தக்க தை அல்ல... இந்த மனிதரை பற்றி தான்... நான் தொடர்ச்சியாக 3 நாள் உறுவ சென்றேன்.. ஆனால் கொஞ்சம் கூட சலித்துக்கொள்ளாமல் அவர் எனக்கு அக்கரையுடன் உறுவி விட்டார்...


நேற்று மாலை நான் உறுவ செல்லவில்லை.. ஆனால் அவர் என்னை தேடி என் வீட்டுக்கே வந்துவிட்டார்...

இன்று மாலை 99 சதவிகிதம் சரியாகிவிட்டது..


அவர் நாளை முதல் வழக்கமான பணிகளை செய்ய சொல்லிவி்ட்டார்....

இந்த 4 நாள் வைத்தியத்துக்கு அவர் சல்லி பைசா கூட வாங்கவில்லை.. ஏன் என்று தெரியவில்லை..

அம்மாவிடம் கேட்டதற்கு.. இதை அவர்கள் பெரும் புண்ணியமாக நினைத்து செய்வதால் பணம் வாங்குவதில்லை என்று கூறினார்...

ஆனால் இதற்கு கைமாறாக அவருக்கு நான் தக்க சமயத்தில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்....


நான் யோசித்து பார்த்தேன்.. இதுவே ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தால் பல சோதனைகள் செய்து பார்த்து கடைசியில் சுலுக்கு பேண்டேஜ் ஒன்றை ஒட்டி விட்டு பணத்தை கறந்துவிடுவார்கள் அந்த படித்த வைத்தியர்கள்...


ஆனால் இவர்கள் தங்கள் முன்னோர் மூலமாகவோ அல்லது அல்லது இவரை போல சமுக மனப்பாண்மை கொண்டவர் மூலமாக கற்றுக்கொண்டிருப்பார்கள்...


இதனை கற்றுக்கொண்டதால் இது வரை எதுவும் சம்பாதிக்கவில்லை... ஆனாலும் யாரேனும் உதவி என வந்தால் முகம் சுழிக்காமல் உதவுகிறார்கள்...


இவர் எனக்கும் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டார்...

வெள்ளி, 15 மார்ச், 2013

பாலாவின் பரதேசி விமர்சனம்

இந்த படத்தை சாமானிய மனம் படைத்த எல்லாராலும் பார்க்க முடியாது  
அந்த அளவுக்கு இந்த படத்தில் பாலா  சோகத்தை  கசக்கி பிழிந்து  எடுத்து இருக்குறார் ....

1939- இல்  நடக்கிறது அல்லது ஆரம்பிக்கிறது கதை . ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை அதர் வா தன திறமையான நடிப்பில்   நம்மை சீட்டிலேயே உட்கார வைக்கிறார் ...

செம நடிப்பு . ஒவ்வொரு பாத்திரமும் கண கச்சிதமாக  நடித்து  இருக்கிறார்கள் .கங்கானி முதல் உண்மையாண  டாக்ராக வரும் அனைவரின் நடிப்பும் செம...
விடுதலை போராட்ட காலம் முதலே தமிழனுக்கு எப்படி தமிழனே துரோகம் செய்து இருக்கிறான் என்பதை பார்க்கும் போது தானாக கண்ணில் நீர் துளிகள் எட்டிபார்க்கிறது...

அதர்வா.. கல்யாண வீட்டில் பசியுடன் சாப்பாட்டுக்கு ஏங்கும் போதும்.. அனைவரும் அவரை உதாசினபடுத்தும் போது அவர் அழும் போதும் தியேடேடரில் பெரும் அமைதி .. என் பக்கத்தில் அமர்ந்து இருந்த நடுத்தர வயது நபர் தனது கர்ச்சிப்பால் கண்ணை துடைப்பதை காணமுடிகிறது...படம் ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் செய்யும் ஆரவாரம் போக போக எல்லாரும் அமைதியாகி படத்தில் ஒன்றிப் போவது படத்திற்கு பெரும் பலம் இது படத்திற்கு வெற்றியை தேடித்தரும் என்பதில் நிச்சயம்....

கதை எல்லாருக்கம் தெரிந்தது என்றாலும் ( நான் படம் பார்க்கும் முன்னரே கதையை பற்றி தெரி்துகொண்டேன் கிளைமேக்ஸ் தவிர) எந்த ஒரு காட்சியிலும் சலிப்பு ஏற்படவில்லை....

இந்த படத்தில் கிளைமேக்ஸ் இல்லை என்பது பெரும் ஏமாற்றம்...  திடிரென பாலா படத்தை முடித்துவிட்டார்... a film by bala என போடும் போது எல்லாரும்  முழு திருப்தியில்லாமல் எழுந்தனர்...


வேதிகா கொஞ்சம் அவ்வப்போது பிதாமகன் லைலா வை ஞாபகபடுத்துகிறார் ஒரு சில காட்சிகளில் மட்டும்... மற்றபடி செமயான நடிப்பு.. எதிர்பாராமல் தேயிலை தோட்டத்துக்கு கொத்தடிமையாக வேலைக்கு வரும் போது அதர்வா வை விட பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்குதான் செமயான அதிர்ச்சி... புலம்ப வைத்துவிட்டார்..
ஒரு சில தமி்ழ் பண்ணாடைகள் எப்படி எல்லாம் வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்கி இருக்கிறானுங்க என்று காணொளியாக பார்க்கும் போது அந்த காலத்தில் நம் முன்னோர்கள் இவர்களின் தந்திர வலையில் சிக்கி எப்படி எல்லாம் கஸ்டப்பட்டு இருப்பார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை...

படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அதர்வாவின் பாட்டி தீர்த்து வைக்கிறார்... செம பஞ்ச் கொடுக்குறார்...


தன்ஷிகா விற்கு காட்சிகள் குறைவு இருந்தாலும் முடிந்த அளவுக்கு முழுமையாக நடித்து இருக்கிறார்... வேதிகா, தன்ஷிகாவை இந்தக் கோலத்தி்ல் பார்க்க ரொம்ப பாவமாக இருக்கு.....

இந்த படத்தில் நீங்கள் ஒரு கமர்ஷியல் கிளைமாக்ஸை எதிர்பார்த்தால் நிச்சயம் நீங்கள் ஏமாறுவீர்கள்....

மீண்டும் பாலா தன்னை நிருபித்து உள்ளார்...
பிண்ணனியில் பின்னி பெடல் எடுக்கிறார் பிரகாஷ்குமார்...
ஒளிப்பதிவு... பக்கா..

ஒரு சில காட்சிகளை தவிர அனைத்தும் நம்மை ரசிக்க வைக்கிறது....
அவன் இவணில் வருவது போல இதிலும் கிராம நடைமுறை வார்த்தைகள் வருகிறது...

மகாத்மா காந்தியை இகழ்ந்தும் புகழ்ந்தும் தள்ளுகிறார்கள்பாலா வின் பரதேசி அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய முழுமை பெறாத காவியம்....  வாழத்துக்கள் பாலா மற்றும் குழுவிற்கு...

செவ்வாய், 12 மார்ச், 2013

தென்பெண்ணையிலும் கைவைத்த கர்நாடகா-விவசாயிகள் அதிர்ச்சி

தெண்பெண்ணை ஆற்றில், மின்மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி, மெகா குழாய் மூலம், 130 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை, கர்நாடகா அரசு துவங்கி உள்ளது. இதனால், தென்பெண்ணையாற்றை நம்பியுள்ள, ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படையும் நிலையுள்ளது.

கர்நாடகா மாநிலம், "நந்தி ஹில்ஸ்' மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலம் ஒசகோட்டா, முகுலப்பள்ளி வழியே, தமிழக எல்லையில் சிங்கசாதனப் பள்ளி என்னும் இடத்தில் நுழைந்து, பெலத்தூர், பாகலூர் வழியாக ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில், தேக்கி வைக்கப்படுகிறது.இந்த அணையின் நீர் மட்டத்தை பொறுத்து, தென்பெண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அங்கிருந்து, பாரூர் ஏரி வழியாக, திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு சென்று, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வழியாக கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. இந்த ஆறு தமிழகத்தில், 360 கி.மீ., பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றை நம்பி, ஓசூர் கெலவரப்பள்ளி அணை மூலம், 8,000 ஏக்கர், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மூலம், 9, 200 ஏக்கர், பாரூர் ஏரி மூலம், 2,500 ஏக்கர், சாத்தனூர் அணை மூலம், 23 ஆயிரம் ஏக்கர் உள்ளிட்ட, 43 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

காவிரி, பாலாற்றை போல், கடந்த காலங்களில் தென்பெண்ணையாற்றிலும், கர்நாடகா அரசு, அணை கட்ட ஆய்வு மேற்கொண்டது. இதற்கு, தமிழக அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தால், அணை கட்டும் முடிவை அம்மாநில அரசு கைவிட்டது.ஓசூர் அடுத்த தமிழக எல்லைக்கு முன், கர்நாடகா எல்லையான முகளூர் தத்தனூரில், தென்பெண்ணை ஆற்றில் குடிநீர் குழாய் மூலம், மின் மோட்டார்களை பயன்படுத்தி, அம்மாநிலத்தில் உள்ள, 130 ஏரிகளை நிரப்பும் புதிய குடிநீர் திட்டத்தை ஓசையில்லாமல், கர்நாடகா அரசு துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக இந்த திட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில், 24 மணி நேரமும் தண்ணீர் உறிஞ்சி, முகளூரில் தரைமட்ட கீழ் தொட்டியில் தண்ணீரை தேக்கி, அங்கிருந்து மண்ணுக்கு அடியில் குழாய் பதித்து, 11 கி.மீ., தொலைவில் உள்ள, 150 ஏக்கர் பரப்பில் உள்ள லக்கூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.படிப்படியாக, இந்த திட்டம், 129 ஏரிகளுக்கு விரிவுப்படுத்தி தண்ணீர் நிரப்ப கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இரு நாட்களுக்கு முன் அந்த திட்டத்தை துவங்கியதாக கேள்விப்பட்டோம். அந்த திட்டத்தை அரசு செய்யவில்லை. எம்.எல்.ஏ., கிருஷ்ணாசெட்டிதான் சொந்தமாக செய்துள்ளார். அதனால், தென்பெண்ணை ஆற்றில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விரைவில் அந்த திட்டத்தால் எந்தளவு பாதிப்பு என ஆய்வு செய்யப்படும்' என்றனர்.


தென்பெண்ணையாறு மூலம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, மழையில்லாத காலத்தில், சராசரியாக, 300 கன அடியும்; மழைக் காலத்தில், 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் கன அடியும் தண்ணீர் வரத்து இருக்கும்.கர்நாடகா தென்பெண்ணை ஆற்றில் நீர் உறிஞ்சப்படுவதால், நேற்று, 120 கன அடியாக நீர் வரத்து குறைந்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அணை கட்டாமல் தொடர்ந்து இந்த நீர் உறிஞ்சும் திட்டத்தை, கர்நாடகா அரசு விரிவுப்படுத்தினால், தமிழகத்துக்கு வரும் தென்பெண்ணை ஆறு, வறண்டு விடும் எனவும், கர்நாடகா அரசு ஆதரவின்றி, எம்.எல்.ஏ. கிருஷ்ணாசெட்டி அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என, தமிழக விவசாயிகள் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் ஓசூர் அருகே கர்நாடகா எல்லையான முகளூரில் நடந்த இந்த புதிய குடிநீர் திட்டத்தை மாலூர் பா. ஜ.,- எம்.எல்.ஏ., கிருஷ்ணா செட்டி திறந்து வைத்து பேசுகையில், ""கர்நாடகா அரசு ஒத்துழைக்காவிட்டாலும், நான் என்னுடைய சொந்த செலவில் இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவேன். இதற்காக நான் எதையும் சந்திக்க தயராக உள்ளேன்,'' என்றார்.இந்த நிகழ்ச்சியில், அம்மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நன்றி தினமலர்... மின்இதழ்

திங்கள், 11 மார்ச், 2013

உங்கள் போராட்டம் இதோடு நிற்காமல் தொடர என் ஆதரவுகள்...

இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து அந்நாட்டின் மீது பொருளாதார தடைவிதிக்க கோரி கடந்த 4 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து லயோலா கல்லூரி மாணவர்களை இன்று அதிகாலை தமிழக அரசின் காவல்துறை மாணவர்களின் உடல்நிலையை காரணம் காட்டி அவர்களை கைது செய்து கட்டாயடுத்தி  சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்..


உடன் இருந்த சக மாணவர்களை சமுதாய நல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்....  8 மாணவர்களின் உயிர் காக்கப்பட்டது சந்தோசமான விசயம் தான் ஆனால் இதை காவல்துறை நேற்று பகலில் செய்யாமல் இரவோடு இரவாக அப்புறபடுத்தியதன் அவசியம் என்ன...


அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலிகளை போலிஸார் அடித்து உடைத்தாக மாணவர்கள் கூறுவதாக செய்திகள் கூறுகின்றன.  இதை பார்க்கும் போது எங்கோ இடிக்கிறது...  இந்த 4 நாட்களாக மாணவர்களின் உண்ணா போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவு ஆட்சியாளர்களுக்கு பீதியை கிளப்பி இருக்குமோ என தெரியவில்லை... எது எப்படியோ 4 மாணவர்களின் உயிர் காப்பாற்றபட்டுள்ளது..

மாணவர்கள் மீண்டும் இது போன்ற போராட்டங்களை கைவிட்டுவிட்டு  வேறு போராட்டங்களை நடத்தலாம்.. தயவு செய்து உண்ணா போராட்டத்தை மீண்டும் கையில் எடுக்காதீர்கள்..  இந்த கைது ஒரு வகையில் அரசுக்கு உங்கள் மீது இருக்கும் அக்கரையாக தோன்றுகிறது.. போக போக உண்மை தெரியவரும்...
உங்கள் போராட்டம் இதோடு நிற்காமல் தொடர என் ஆதரவுகள்...