ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சாட்டை - சிறப்பு விமர்சனம்!

சாட்டை - சிறப்பு விமர்சனம்!


சமூக அக்கறையும் சமரசமில்லாத திரைக்கதையும் இயல்பான பாத்திரங்களுமாய் வந்து அவ்வப்போது மனதை வெல்லும் படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம், சாட்டை.

 

saattai movie review


ஓரிரு இடங்களில் சினிமாத்தனமான உணர்ச்சிக் குவியலாய் காட்சிகள் அமைந்தாலும், அவற்றில் பெரிதாக நெருடலேதும் இல்லாததால், படத்துடன் ஒன்ற முடிகிறது.

ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்து வந்த அரசுப் பள்ளி, ஆசியர்களின் அக்கறையின்மை, சோம்பேறித்தனம், ஒழுங்கின்மையின் உச்சத்தால் உருப்படாமல் போகிறது. புதிதாக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் இளம் ஆசிரியர் தயாளன். ஒரே ஆண்டில் அந்தப் பள்ளி ஒழுக்கம், கட்டுப்பாடு, கலைகள், விளையாட்டு என அனைத்திலும் மேன்மை பெற்று மாவட்டத்திலேயே முதலாவது பள்ளியாக வருகிறது...

எப்படி இது சாத்தியமானது? இந்தக் கேள்விக்கான விடையை ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்... குறிப்பாக பெற்றோர்களும் தவறாமல் பார்த்துத் தெளிய வேண்டியது இன்றைய அவசியம்!

நேர்மை, ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை, எதற்கும் கலங்காத நேரிய சிந்தனை கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி. சற்றும் அலட்டிக் கொள்ளாத, நடிப்பென்று சொல்ல முடியாத நடிப்பு.

ஒழுங்கீனமான மாணவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வெல்வதும், கடைசி வரை ஒத்துழைக்க மறுக்கும் சக ஆசிரியர்கள், கடைசியில் தங்களை அறியாமலேயே கற்றுத் தருதலில் மகா ஆர்வத்துடன் இயங்கச் செய்வதும், அந்த ஸ்போர்ட்ஸ் மீட்டை அவர் நடத்தும் விதமும்... ஒரு பள்ளியின் நிகழ்வுகளை அசலாகக் கண்முன் நிறுத்தின.

அரசுப் பள்ளிகளில் படித்த ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு தயாளனைச் சந்தித்திருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒன்றிரண்டல்ல.. குறைந்தது அரை டஜன் சிங்கப்பெருமாள்களாவது (தம்பி ராமய்யா) ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் இருக்கவே செய்கிறார்கள். தங்கள் பள்ளிக்கு ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தும் அந்தஸ்தைப் பெற்றுத் தந்த தயாளனுக்காக தலைமையாசிரியர் கைத்தட்டச் சொல்லும் இடத்தில் தம்பி ராமையா ஒரு பாவம் காட்டுகிறாரே... க்ளாஸ்!

உள்ளே போவதும் வருவதுமாக இருக்கும் அந்த அழுக்கு சாக்ஸ்.. அழுத்தமான குறியீடு!

தன் காலத்தில் பள்ளி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பாதா... என்ற ஆதங்கமும், சக ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த முடியாத இயலாமையும் சதா முகத்தில் இழையோட வரும் தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. மனதை நெகிழ்த்துகிறார்.

இந்தக் கதையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் - மாணவி காதலும் உண்டு. அந்தக் காட்சி வரும்போதெல்லாம் மனசு பதறுகிறது. நல்ல வேளை, அந்தக் காதலின் முடிவு யாருக்கும் பாதகமில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதில் ஒரு நிம்மதி. இந்தப் பாத்திரங்களில் நடித்துள்ள யுவன், மகிமா இருவருமே ப்ளஸ் டூ மாணவர்களுக்கே உரிய உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளனர். கருத்த பாண்டி வரும் காட்சிகள் கலகல!

சாட்டையில் ஓட்டைகளும் உண்டு. ஒரே பாடலில் பணக்காரனாவது போன்ற க்ளீஷேக்கள் இந்தப் படத்திலும் உண்டு. ஒட்டுமொத்தப் பள்ளியும் ஒரு ஆசிரியரை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டுவது கொஞ்சம் சினிமாத்தனமான மிகைதானே! மன்னிப்பும் அளவு கடந்த நம்பிக்கையும் சில நேரங்களில் பிழையாகப் போகவும் வாய்ப்பிருக்கிறதல்லவா..

ஆனால் இன்றைக்கு மோசமாக உள்ள அரசுப் பள்ளி ஒவ்வொன்றும் இந்தப் படத்தில் வரும் பள்ளி மாதிரி திருந்தி உயர்ந்தால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம், அந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்ள வைக்கிறது என்பதே உண்மை. பேதமில்லாத கல்விதான் நோக்கம் எனும்போது, அது அரசுப் பள்ளிகளிலேயே கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு இந்த பாழாய்ப் போன மிடில்கிளாஸ் என்றைக்குதான் வருமோ?

இமானின் இசை சுமார். இந்தப் படத்துக்கு அது ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். ஜீவனின் ஒளிப்பதிவு, கதையின் யதார்த்தத்தை மீறாமல் அமைந்திருக்கிறது.

புதிய இயக்குநர் அன்பழகன் தன் கதையில் எந்த வணிகத் திணிப்புகளுக்கும் இடம் கொடுக்காதது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

படைப்புகள் படைப்பாளிகளுக்கானவை அல்ல, சமூகத்துக்கானவை என்பதை உணர்ந்து புதிய இயக்குநருக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர்கள் சமுத்திரக்கனி, பிரபு சாலமனுக்குப் பாராட்டுகள்.

 

thanks;  online news website one india

நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை

திங்கள், 17 செப்டம்பர், 2012

சுந்தர பாண்டியன் – நண்பர்களின் துரோகம்


சுந்தர பாண்டியன்நண்பர்களின் துரோகம்

நாயகன் ச சிகுமார், நண்பன் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த நாடோடிகள் படம் பார்த்த பிறகு நண்பர்களின் மீது நெருக்கம் அதிகமானது...

நாயகன் ச சிகுமார்  தன் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடித்த இந்த சுந்தர பாண்டியன் நண்பர்களை சந்தேகப் பட வைக்கிறான்...

ஒரு பெண்ணுக்காக மூன்று நண்பர்கள் சேர்ந்து, அந்த மூன்று நண்பர்கள் மீது அதிக நம்பிக்கை, பாசம் வைத்திருக்கும் நண்பனுக்கு செய்யும் துரோகம் தான் இந்த சுந்தரபாண்டியன் படத்தின் ஒன் லைன்....

ஓபனிங்லே உசிலம்பட்டி காரங்க பற்றி சொல்லிவிடுவதால் , ஹூரோ ஹூரோயினை லவ்வும் போதே நமக்கு ச சிகுமார் எப்படி அவர்களை சமாளிப்பார் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு வந்து விடுகிறது...

ச சிகுமார் ரஜினி ரசிகனாக வருகிறார். இதற்காக அவர் பண்ணும் ஸ்டைல்கள் ரஜினியை ஞாபகப்படுத்துகின்றன.

முதன் முதலாக காதல் சொல்லும் இடம், கடைசியாக காதல் சொல்லும் இடம், இவ்விடங்களில் அவரின் உடை நாகரிகம் அருமை..

நண்பனின் காதல் செட் செய்ய அவர் தரும் ஐடியாக்கள் நிஜ வாழ்க்கைக்கும் பொருத்தமானது.

ஹீரோயின் புதுமுகம், இதை மறைக்கும் இவரின் நடிப்பு திறமை அபாரம். இடது கண்ணுக்கு கீழ் இருக்கும் தழும்பு தான் அவரின் அழகை கெடுக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ இவர் இதயத்தில் இடம் பெற அதை அவரின் முகமே காட்டி கொடுப்பது அருமை.

காதலை காதலினிடம் தைரியாமாக சொல்லும் போதும், அப்பா காதலுக்கு சம்மதம் சொல்லும் போதும், அம்மா சித்தி இருக்கும் போது தைரியமாக காதலனுக்கு போனில் பேசும் போது ரசிக்க வைக்கிறார்.

ஹீரோவின் நண்பர்கள் அவர் அவர் வேலைய கச்சிதமாக செய்துள்ளனர். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் கோபத்தை அப்புகுட்டி அழகாக வெளிகாட்டுகிறார்.. அவரிடம் ச சிகுமார் பஸ்ஸில் சண்டை போடுவது ஹீரோவின் ரெளடியிசத்தை காட்டுகிறது. ஒரு அப்பாவியை அப்படியா பேருந்தில் அத்தனை பேர் சேர்ந்து அடிப்பது.

ஒரு நண்பன் செய்யும் துரோகத்துக்கு சொல்லும் காரணம் ஏற்க கூடியதாக இருக்கிறது-அது தன் நண்பனை கொலை செய்தவனை பழிவாங்குவது-ஓகே.

அந்த ஹீரோயினியின் அக்கா புருஷன் தம்பி ஹீரோவுக்கு நண்பன் எனச் சொல்லி, இவரும் ஹீரோவுக்கு துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், அவர் ஹீரோவை கொல்ல முடிவு செய்வதே ஒரு நண்பனா இருந்து கொண்டு தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்து நினைத்து தான்.

ஆனால் இவரும் ஹீரோவும் சந்திக்கிற மாதிரி படத்தில் ஒரே காட்சி மட்டும் தான் வைத்திருக்கிறார்கள்.. இன்னும் கொஞ்சம் சீன் வைத்திருக்கலாம்.

சின்ன வயதில் இருந்தே ஒன்றாக இருக்கும் மற்றொரு நண்பன் கிளைமேக்ஸில் எடுக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போது இந்த முடிவு எடுத்த்தற்கு பதில் ஹீரோயின் ஹீரோவை காதலிப்பதாக ஹீரோ இவரிடம் சொல்லும் போதே எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்... ஹீரோ நண்பர்களுக்கு உதவக்கூடிய ஆள் என்பதால் பலன் கிடைத்திருக்கும்.. கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டுக்காக இயக்குனர் மாற்றிவிட்டார் போல.

பொதுவா ஜெயிலுக்கோ இல்ல போலிஸ் ஷ்டேசனுக்கோ போயிட்டு வந்தா வீட்டுக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு தான் செல்லுவார்கள். ஆனால் படத்தில் இத்தனை பெருசுங்க இருந்தும் சுந்தர பாண்டியனை வீட்டில் விட்டு ஆற அமர அழுதுவிட்டு அப்புறம் சுந்தர பாண்டியன் அப்பா சொன்னதுக்கு பிறகு தான் செய்கிறார்கள்.

ஹீரோவுக்கு தலையில் பலமாக அடி விழுகிறது ,பின் எல்லாம் சுபமாக முடிகிறது. ஆனால் தலையில் இவ்வளவு பலமாக அடிவிழுந்து இருக்கிறதே இது எதிர்காலத்தில் ஹீரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதை தெளிவாக சொல்லவில்லை.

தன் மகளுக்கா தான் ஹீரோ ஜெயிலுக்கு போனதால் அவருக்கு பெண் தர சம்மதிக்கும் பெண்ணின் அப்பா, ஏன் மாப்பிள்ளைக்கு எந்த வேலையும் இல்லை என்பதை பற்றி கவலை படவில்லை.

மாப்பிள்ளைக்கோ எந்த தொழிலும் இல்லை, ஆனால் கல்யாணம் ஆனதும் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு எங்கு போறார் என்பதை தெளிவாக சொல்லவில்லை.. எங்கயோ போறாங்க......

படத்திற்கு நன்மைகள்

படம் ஆரம்பித்த்தில் இருந்து முடியும் வரை எதிர்பார்ப்போடு நம்மை வைத்திருப்பது..

முதல் பாதி முழுவதும் வரும் காதல் கலாட்டாக்கள், முக்கியமாக அந்த பஸ்ஸில் நடக்கும் காதல் கூத்துக்கள்..

விறுவிறுப்பான திரைக்கதை..

ச சிகுமாரின் காமெடி கலாட்டா பிளஸ் காதல் காட்சிகள்....

நாடோடிகள் போல நண்பர்களின் கதை.....

இடைவேளைக்கு பிறகு வரும் திருப்பங்கள்....

ச சிகுமார் அண்ட் நண்பர்கள் செய்யும் காமெடி காட்சிகள்...

படத்திற்கு எதிரான தீமைகள்:

ஓபனிங் பாடல் தவிர மற்றவை சொல்லும் படியாக இல்லை..

ஹீரோ ஹீரோயின் டூயட் சாங் நல்லா கண்கள் இரண்டால் மாதிரி காதலோடு இல்லாமல் இருப்பது...

பிண்ணனி இசை சுத்த மோசம்.. கொஞ்சம் கூட நல்லா இல்லை... கிளைமேக்ஸ் பைட்டில் எப்படி பின்னி பெடலெடுத்து இருக்கலாம்..  யாருப்பா இசை அமைத்தவர் போங்கபா வேஸ்ட் பண்ணிட்டிங்க...

படத்தை பற்றிய விளம்பரம் குறைவு... போஸ்டர் கூட குறைவாகத்தான் ஒட்டியிருக்கிறார்கள்...

சரியாக விளம்பரம் படுத்த படாத இந்த படத்தை திருவண்ணாமலையில் உள்ள இரண்டு முக்கிய தியேட்டரிகளிலும் போட்டது....

தீர்ப்பு:

சுந்தரபாண்டியன் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் வகையில் உள்ளது..

படம்  சூப்பர் சூப்பர்