வியாழன், 19 ஜூலை, 2012

குடியரசு தலைவரின் அதிகாரங்கள், பொறுப்புகள் பற்றிய ஒரு பார்வை




இந்தியாவின் முதல் குடிமகன், நாட்டின் உயரிய பொறுப்பாக கருதப்படும் குடியரசு தலைவருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள், அவரின் பொறுப்புகள் குறித்து தெரிந்துகொள்வோம்.


பிரிட்டன் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, குடியரசு தலைவர் பதவி, பிரிட்டன் அரசருக்கு நிகரானது. இந்திய அரசின் தலைமை நிர்வாகியான குடியரசு தலைவரின் பெயரில் தான் மத்திய அரசு இயங்குகிறது. மேலும் குடியரசு தலைவர் முப்படைகளின் தலைவராகவும் இருப்பார்.


பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றே மத்திய அரசு, நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்களை நியமிக்கவும், நீக்கவும் செய்கிறது.


நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகே சட்டமாகிறது.
முக்கிய ஒப்புந்தங்களுக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவை. கைதிகளின் தண்டனையை குறைக்கவும், தண்டனையை ரத்து செய்யவும் குடியரசு தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு. மத்திய அரசையும், மாநில அரகளையும் நீக்கும் அதிகாரமும் குடியரசு தலைவருக்கு உள்ளது.


குடியரசு தலைவரின் பெயரால் மத்திய அரசு செயல்பட்டாலும், தனியாக முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் அவருக்கு இல்லை. சட்டங்கள் இயற்றுவது முதல் அரசின் முடிவுகள் அனைத்துமே அமைச்சரவையை சார்ந்ததே. அதே சமயம், மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நேரங்களில் குடியரசு தலைவரின் முடிவு முக்கியமானது.


அரசு அமைக்க உரிமை கோருபவர்களில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை முடிவு செய்வதில் குடியரசு தலைவரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் முடிந்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் குடியரசு தலைவர் முக்கியமான முடிவை எடுத்த வரலாற்று பதிவுகளும் இந்தியாவில் உண்டு.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைமை பொறுப்பு என்ற பெருமையையும் குடியரசு தலைவர் பெற்றிருக்கிறார்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பில்லா டேவிட் பில்லா - பில்லா 2 விமர்சனம்..

பில்லா டேவிட் பில்லா  - பில்லா 2 விமர்சனம்..

பிளிஷ் உங்க பொன்னான நேரத்தை இந்த படத்துக்காக வீணாக்க வேண்டாம்...

படம் பார்க்க உள்ளே நழையும் போது இருக்கும் சந்தோசம்  மன நிம்மதி படம் முடியும் போது இல்லை...

தல வலி கழுத்து வலி தான் வருது...

டி்க்கெட் 70 ரூபா   தல வலி கழுத்து வலி மாத்திரைக்கு 150 ரூபா செலவு  இவ்ளோ செலவு பண்ணதுக்கு அப்புறம்தான் வலி எல்லாம் போச்சி.....

படம் சின்ன படம்ங்க... இரண்டு மணிநேரம்தான் ஓடுது...

படம் போட்டதுல இருந்து தல அஐித் சுட்டுகிட்டே இருக்காருங்க... எத்தனை பேர சுட்டார் என்பதை நம்ம செந்தில் அண்ணனிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

படம் முடிஞ்சுதுனு தியேட்டர் காரன் லைட் போட்டதுக்கு அப்புறம் தான்  எனக்கு நிம்மதியா இருந்தது....   எழுந்து வெளியே வந்து கேட்ட தாண்டும் போது கூட டுமில் டுமில்னு சுடர சத்தம் கேட்குதுங்க   இவங்க இம்ச  தாங்க முடியல....

படத்தோட கத நல்லா தான் ஆர்வமா இருக்கு..  ஆனா இன்னும் கொஞ்சம் தெளிவா விரிவா சொல்லி இருக்கலாம்...   

டேவிட் பில்லா எப்படி  இன்டர்போல் தேடும் மிகப்பெரிய டான் ஆகுறான் என்பதுதான் கதை....

நிறைய எதிர்பார்த்து போனேன்  ஏமாந்து வந்தேன்.....

இன்று காலைக் காட்சிக்கே தியேட்டரில்  கூட்டம் இல்லை.. இத்தனைககும் இன்று படம் வெளியான மூன்றாவது நாள்...

நான் பில்லா 1 யும் இதே மூன்றாவது நாள் காலைக்காட்சிதான் பார்த்தேன்..   செம கூட்டம்....

தியேட்டருக்கு கூட்டத்தை வரவைக்க இரண்டு வழிதான் இருக்கு
1. பில்லா 2 ஓடும் தியேட்டர் கேண்டினில் இனி தலைவலி மாத்திரை இலவசமாக கொடு்க்கப்படு்ம்னு அறிவிக்கலாம்...

2. சென்சாரில் கட் பண்ண சீன்களை இடைவேளையில் ஒளிபரப்பலாம்...

பாடல்கள் ஒனறு கூட நல்லா இல்லை...  கேங்ஸ்டர் பாடலை நான் நிறைய எதிர்பார்த்தேன்...  படத்தில் அந்த பாட்டே இல்லை..   படம் முடிந்த பிறகு தான் ஒளிபரப்புகிறார்கள்...

பிண்ணனி இசை சுமார்......

ஒளிப்பதிவு.. வசனம்.... எடிட்டிங் ...  சூப்பர்

அஐித் ஸ்டைல்  நச்.....
திருவண்ணாமலையில் 4 தியேட்டரிகளில் ஓடுகிறது...  கூட்டத்த தான் காணோம்.....




வெள்ளி, 6 ஜூலை, 2012

பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்:சுப.வீ விழாவில் கலைஞர்



புத்தக வெளியீட்டு விழாக்கள் என்பவை அரசியல் பரபரப்புக்கிடையே தனக்குக் கிடைக்கும் இளைப்பாறல் என்று சொல்வார் கலைஞர்.

2ஜி வழக்கில் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த மே 15ந் தேதி, கலைஞருக்கு கூடுதல் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் வகையில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது பேராசிரியர் சுப.வீ எழுதிய வானவில் புத்தகாலயத்தின் 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா.

திராவிடத்தால் எழுந்தோம் என்ற வரலாறு, குறள் வானம் என்ற இலக்கியம், கவிதா என்ற நாவல், வந்ததும் வாழ்வதும் என்ற சுயசரிதை, பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற தத்துவ விளக்கம் என 5 வகை புத்தகங்களைக் கலைஞர் வெளியிட, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார்.
வழக்கம்போலவே வைணவத் தமிழ்ப்பாடல்களைக் கலைஞர் பாசுரங்களாக்கி பாராட்டைக் கொட்டி, அரங்கத்திலிருந்தவர்களின் கைதட்டல்களை அள்ளினார் ஜெகத்ரட்சகன்.  

புத்தகங்களைப் பற்றி பேசச்சொல்லுங்க என்று மேடையிலிருந்தவர்களிடம் தெரிவித்தார் கலைஞர். பேராசிரியர் அப்துல்காதர், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரின் உரைக்குப் பிறகு, நட்பின் அடிப்படையில் மேடைக்கு வந்த கவிஞர் வைரமுத்து, கல்லூரிக் காலத்திலிருந்து தனக்கும் சுப.வீக்குமான நட்பையும் அவரது கொள்கைப் பற்றையும் எடுத்துக் கூறினார்.
திராவிட இயக்கம் தனது நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவால்களையும், இதை இப்படியேவிட்டால் மீண்டும் நம் நெற்றியில் சூத்திரன் என்று பச்சைக் குத்திவிடும் ஆரியம் என்றும் அண்மைக்கால பத்திரிகை செய்திகளை ஆவணங்களாக எடுத்துவைத்து உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

இது எனது 27 ஆண்டுகால கனவு என நெகிழ்ச்சியுடன் ஏற்புரையாற்றிய சுப.வீ, திராவிட இயக்கத்திற்காக உழைக்கவேண்டும் என்பதைத்தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றார் நன்றிப்பெருக்குடன்.
கலைஞரின் சிறப்புரை முழுவதும் தமிழீழம் பற்றியே அமைந்திருந்தது. விரைவில் சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்த கலைஞர், பிரதமராக ராஜீவ் இருந்தபோது தன்னை டெல்லிக்கு அழைத்து, பிரபாகரனை brave man   என்று குறிப்பிட்டதுடன் நீங்களும் மாறனும் வைகோவும் கொழும்புக்குச் சென்று அங்குள்ள நிலவரங்களைச் சொல்லுங்கள்.
தமிழீழம் அமைய நான் உதவுகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்ததையும், பின்னர் அந்த வாய்ப்பு தவறிப்போனதற்கான காரணங்களை இப்போது சொல்லி விவகாரமாக்கவில்லை என்றார். தமிழீழம் அமைவதற்காக அறவழியில் டெசோ அமைப்பு தொடர்ந்து போராடும் என்று தன் பேச்சை நிறைவு செய்தார் கலைஞர்.
விழா முடிந்து வெளியேறிய பார்வையாளர்கள் பலரது கைகளிலும் சுப.வீயின் திராவிடத்தால் எழுந்தோம் என்ற புத்தகத்தைக் காண முடிந்தது.


thanks nakkheeran ilakkiyam