ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சாட்டை - சிறப்பு விமர்சனம்!

சாட்டை - சிறப்பு விமர்சனம்!


சமூக அக்கறையும் சமரசமில்லாத திரைக்கதையும் இயல்பான பாத்திரங்களுமாய் வந்து அவ்வப்போது மனதை வெல்லும் படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம், சாட்டை.

 

saattai movie review


ஓரிரு இடங்களில் சினிமாத்தனமான உணர்ச்சிக் குவியலாய் காட்சிகள் அமைந்தாலும், அவற்றில் பெரிதாக நெருடலேதும் இல்லாததால், படத்துடன் ஒன்ற முடிகிறது.

ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்து வந்த அரசுப் பள்ளி, ஆசியர்களின் அக்கறையின்மை, சோம்பேறித்தனம், ஒழுங்கின்மையின் உச்சத்தால் உருப்படாமல் போகிறது. புதிதாக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் இளம் ஆசிரியர் தயாளன். ஒரே ஆண்டில் அந்தப் பள்ளி ஒழுக்கம், கட்டுப்பாடு, கலைகள், விளையாட்டு என அனைத்திலும் மேன்மை பெற்று மாவட்டத்திலேயே முதலாவது பள்ளியாக வருகிறது...

எப்படி இது சாத்தியமானது? இந்தக் கேள்விக்கான விடையை ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்... குறிப்பாக பெற்றோர்களும் தவறாமல் பார்த்துத் தெளிய வேண்டியது இன்றைய அவசியம்!

நேர்மை, ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை, எதற்கும் கலங்காத நேரிய சிந்தனை கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி. சற்றும் அலட்டிக் கொள்ளாத, நடிப்பென்று சொல்ல முடியாத நடிப்பு.

ஒழுங்கீனமான மாணவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வெல்வதும், கடைசி வரை ஒத்துழைக்க மறுக்கும் சக ஆசிரியர்கள், கடைசியில் தங்களை அறியாமலேயே கற்றுத் தருதலில் மகா ஆர்வத்துடன் இயங்கச் செய்வதும், அந்த ஸ்போர்ட்ஸ் மீட்டை அவர் நடத்தும் விதமும்... ஒரு பள்ளியின் நிகழ்வுகளை அசலாகக் கண்முன் நிறுத்தின.

அரசுப் பள்ளிகளில் படித்த ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு தயாளனைச் சந்தித்திருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒன்றிரண்டல்ல.. குறைந்தது அரை டஜன் சிங்கப்பெருமாள்களாவது (தம்பி ராமய்யா) ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் இருக்கவே செய்கிறார்கள். தங்கள் பள்ளிக்கு ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தும் அந்தஸ்தைப் பெற்றுத் தந்த தயாளனுக்காக தலைமையாசிரியர் கைத்தட்டச் சொல்லும் இடத்தில் தம்பி ராமையா ஒரு பாவம் காட்டுகிறாரே... க்ளாஸ்!

உள்ளே போவதும் வருவதுமாக இருக்கும் அந்த அழுக்கு சாக்ஸ்.. அழுத்தமான குறியீடு!

தன் காலத்தில் பள்ளி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பாதா... என்ற ஆதங்கமும், சக ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த முடியாத இயலாமையும் சதா முகத்தில் இழையோட வரும் தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. மனதை நெகிழ்த்துகிறார்.

இந்தக் கதையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் - மாணவி காதலும் உண்டு. அந்தக் காட்சி வரும்போதெல்லாம் மனசு பதறுகிறது. நல்ல வேளை, அந்தக் காதலின் முடிவு யாருக்கும் பாதகமில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதில் ஒரு நிம்மதி. இந்தப் பாத்திரங்களில் நடித்துள்ள யுவன், மகிமா இருவருமே ப்ளஸ் டூ மாணவர்களுக்கே உரிய உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளனர். கருத்த பாண்டி வரும் காட்சிகள் கலகல!

சாட்டையில் ஓட்டைகளும் உண்டு. ஒரே பாடலில் பணக்காரனாவது போன்ற க்ளீஷேக்கள் இந்தப் படத்திலும் உண்டு. ஒட்டுமொத்தப் பள்ளியும் ஒரு ஆசிரியரை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டுவது கொஞ்சம் சினிமாத்தனமான மிகைதானே! மன்னிப்பும் அளவு கடந்த நம்பிக்கையும் சில நேரங்களில் பிழையாகப் போகவும் வாய்ப்பிருக்கிறதல்லவா..

ஆனால் இன்றைக்கு மோசமாக உள்ள அரசுப் பள்ளி ஒவ்வொன்றும் இந்தப் படத்தில் வரும் பள்ளி மாதிரி திருந்தி உயர்ந்தால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம், அந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்ள வைக்கிறது என்பதே உண்மை. பேதமில்லாத கல்விதான் நோக்கம் எனும்போது, அது அரசுப் பள்ளிகளிலேயே கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு இந்த பாழாய்ப் போன மிடில்கிளாஸ் என்றைக்குதான் வருமோ?

இமானின் இசை சுமார். இந்தப் படத்துக்கு அது ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். ஜீவனின் ஒளிப்பதிவு, கதையின் யதார்த்தத்தை மீறாமல் அமைந்திருக்கிறது.

புதிய இயக்குநர் அன்பழகன் தன் கதையில் எந்த வணிகத் திணிப்புகளுக்கும் இடம் கொடுக்காதது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

படைப்புகள் படைப்பாளிகளுக்கானவை அல்ல, சமூகத்துக்கானவை என்பதை உணர்ந்து புதிய இயக்குநருக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர்கள் சமுத்திரக்கனி, பிரபு சாலமனுக்குப் பாராட்டுகள்.

 

thanks;  online news website one india

நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை

திங்கள், 17 செப்டம்பர், 2012

சுந்தர பாண்டியன் – நண்பர்களின் துரோகம்


சுந்தர பாண்டியன்நண்பர்களின் துரோகம்

நாயகன் ச சிகுமார், நண்பன் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த நாடோடிகள் படம் பார்த்த பிறகு நண்பர்களின் மீது நெருக்கம் அதிகமானது...

நாயகன் ச சிகுமார்  தன் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடித்த இந்த சுந்தர பாண்டியன் நண்பர்களை சந்தேகப் பட வைக்கிறான்...

ஒரு பெண்ணுக்காக மூன்று நண்பர்கள் சேர்ந்து, அந்த மூன்று நண்பர்கள் மீது அதிக நம்பிக்கை, பாசம் வைத்திருக்கும் நண்பனுக்கு செய்யும் துரோகம் தான் இந்த சுந்தரபாண்டியன் படத்தின் ஒன் லைன்....

ஓபனிங்லே உசிலம்பட்டி காரங்க பற்றி சொல்லிவிடுவதால் , ஹூரோ ஹூரோயினை லவ்வும் போதே நமக்கு ச சிகுமார் எப்படி அவர்களை சமாளிப்பார் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு வந்து விடுகிறது...

ச சிகுமார் ரஜினி ரசிகனாக வருகிறார். இதற்காக அவர் பண்ணும் ஸ்டைல்கள் ரஜினியை ஞாபகப்படுத்துகின்றன.

முதன் முதலாக காதல் சொல்லும் இடம், கடைசியாக காதல் சொல்லும் இடம், இவ்விடங்களில் அவரின் உடை நாகரிகம் அருமை..

நண்பனின் காதல் செட் செய்ய அவர் தரும் ஐடியாக்கள் நிஜ வாழ்க்கைக்கும் பொருத்தமானது.

ஹீரோயின் புதுமுகம், இதை மறைக்கும் இவரின் நடிப்பு திறமை அபாரம். இடது கண்ணுக்கு கீழ் இருக்கும் தழும்பு தான் அவரின் அழகை கெடுக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ இவர் இதயத்தில் இடம் பெற அதை அவரின் முகமே காட்டி கொடுப்பது அருமை.

காதலை காதலினிடம் தைரியாமாக சொல்லும் போதும், அப்பா காதலுக்கு சம்மதம் சொல்லும் போதும், அம்மா சித்தி இருக்கும் போது தைரியமாக காதலனுக்கு போனில் பேசும் போது ரசிக்க வைக்கிறார்.

ஹீரோவின் நண்பர்கள் அவர் அவர் வேலைய கச்சிதமாக செய்துள்ளனர். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் கோபத்தை அப்புகுட்டி அழகாக வெளிகாட்டுகிறார்.. அவரிடம் ச சிகுமார் பஸ்ஸில் சண்டை போடுவது ஹீரோவின் ரெளடியிசத்தை காட்டுகிறது. ஒரு அப்பாவியை அப்படியா பேருந்தில் அத்தனை பேர் சேர்ந்து அடிப்பது.

ஒரு நண்பன் செய்யும் துரோகத்துக்கு சொல்லும் காரணம் ஏற்க கூடியதாக இருக்கிறது-அது தன் நண்பனை கொலை செய்தவனை பழிவாங்குவது-ஓகே.

அந்த ஹீரோயினியின் அக்கா புருஷன் தம்பி ஹீரோவுக்கு நண்பன் எனச் சொல்லி, இவரும் ஹீரோவுக்கு துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், அவர் ஹீரோவை கொல்ல முடிவு செய்வதே ஒரு நண்பனா இருந்து கொண்டு தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்து நினைத்து தான்.

ஆனால் இவரும் ஹீரோவும் சந்திக்கிற மாதிரி படத்தில் ஒரே காட்சி மட்டும் தான் வைத்திருக்கிறார்கள்.. இன்னும் கொஞ்சம் சீன் வைத்திருக்கலாம்.

சின்ன வயதில் இருந்தே ஒன்றாக இருக்கும் மற்றொரு நண்பன் கிளைமேக்ஸில் எடுக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போது இந்த முடிவு எடுத்த்தற்கு பதில் ஹீரோயின் ஹீரோவை காதலிப்பதாக ஹீரோ இவரிடம் சொல்லும் போதே எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்... ஹீரோ நண்பர்களுக்கு உதவக்கூடிய ஆள் என்பதால் பலன் கிடைத்திருக்கும்.. கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டுக்காக இயக்குனர் மாற்றிவிட்டார் போல.

பொதுவா ஜெயிலுக்கோ இல்ல போலிஸ் ஷ்டேசனுக்கோ போயிட்டு வந்தா வீட்டுக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு தான் செல்லுவார்கள். ஆனால் படத்தில் இத்தனை பெருசுங்க இருந்தும் சுந்தர பாண்டியனை வீட்டில் விட்டு ஆற அமர அழுதுவிட்டு அப்புறம் சுந்தர பாண்டியன் அப்பா சொன்னதுக்கு பிறகு தான் செய்கிறார்கள்.

ஹீரோவுக்கு தலையில் பலமாக அடி விழுகிறது ,பின் எல்லாம் சுபமாக முடிகிறது. ஆனால் தலையில் இவ்வளவு பலமாக அடிவிழுந்து இருக்கிறதே இது எதிர்காலத்தில் ஹீரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதை தெளிவாக சொல்லவில்லை.

தன் மகளுக்கா தான் ஹீரோ ஜெயிலுக்கு போனதால் அவருக்கு பெண் தர சம்மதிக்கும் பெண்ணின் அப்பா, ஏன் மாப்பிள்ளைக்கு எந்த வேலையும் இல்லை என்பதை பற்றி கவலை படவில்லை.

மாப்பிள்ளைக்கோ எந்த தொழிலும் இல்லை, ஆனால் கல்யாணம் ஆனதும் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு எங்கு போறார் என்பதை தெளிவாக சொல்லவில்லை.. எங்கயோ போறாங்க......

படத்திற்கு நன்மைகள்

படம் ஆரம்பித்த்தில் இருந்து முடியும் வரை எதிர்பார்ப்போடு நம்மை வைத்திருப்பது..

முதல் பாதி முழுவதும் வரும் காதல் கலாட்டாக்கள், முக்கியமாக அந்த பஸ்ஸில் நடக்கும் காதல் கூத்துக்கள்..

விறுவிறுப்பான திரைக்கதை..

ச சிகுமாரின் காமெடி கலாட்டா பிளஸ் காதல் காட்சிகள்....

நாடோடிகள் போல நண்பர்களின் கதை.....

இடைவேளைக்கு பிறகு வரும் திருப்பங்கள்....

ச சிகுமார் அண்ட் நண்பர்கள் செய்யும் காமெடி காட்சிகள்...

படத்திற்கு எதிரான தீமைகள்:

ஓபனிங் பாடல் தவிர மற்றவை சொல்லும் படியாக இல்லை..

ஹீரோ ஹீரோயின் டூயட் சாங் நல்லா கண்கள் இரண்டால் மாதிரி காதலோடு இல்லாமல் இருப்பது...

பிண்ணனி இசை சுத்த மோசம்.. கொஞ்சம் கூட நல்லா இல்லை... கிளைமேக்ஸ் பைட்டில் எப்படி பின்னி பெடலெடுத்து இருக்கலாம்..  யாருப்பா இசை அமைத்தவர் போங்கபா வேஸ்ட் பண்ணிட்டிங்க...

படத்தை பற்றிய விளம்பரம் குறைவு... போஸ்டர் கூட குறைவாகத்தான் ஒட்டியிருக்கிறார்கள்...

சரியாக விளம்பரம் படுத்த படாத இந்த படத்தை திருவண்ணாமலையில் உள்ள இரண்டு முக்கிய தியேட்டரிகளிலும் போட்டது....

தீர்ப்பு:

சுந்தரபாண்டியன் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் வகையில் உள்ளது..

படம்  சூப்பர் சூப்பர்

 

 

 

 

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பர்வதமலை-திருவண்ணாமலை

பர்வதமலை

 திருவண்ணாமலையிலிருந்து  சேலம் செல்லும் சாலையிலுள்ள செங்கம் சென்று அங்கிருந்து ஒரு கிராமம்(பெயர் மறந்துவிட்டதுதென்மாதிமங்கலம் என்று ஞாபகம்...) சென்று அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் காட்டு வழிதனில் நடந்து சென்று பார்த்தால் தூரத்தே உயரமாக நிமிர்ந்து சூழ்ந்திருக்கும் பல மலைகளுக்கு நடுவே தனித்துக் காட்சி தருவது பர்வதமலை.

இம்மலை பற்றி என் நாற்பது வயது வரை கேள்விப்பட்டதே இல்லை.அப்படியே கேள்விப்பட்டிருந்தாலும் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுத்திருக்கமாட்டேன் என்பது வேறுவிஷயம்.
திருச்சியில் தொழில்புரிந்தும் வசித்தும் வந்த எனக்குதெருவில் எதிர்வீட்டில் குடியிருந்த ஒரு குடும்பத்தோடு நட்பு நேரிட்டதுஒரு பெரியவர்அவரின் மனைவிநான்கு மகன்கள்இரண்டு மகள்கள் கொண்டு பெரிய குடும்பம்.படிப்பறிவு என்பது குடும்பத்தினர் அனைவருக்குமே உயர்நிலைப் பள்ளிவரைதான்ஆனால் தொழில் சம்பாத்தியம் என்பதில் எந்தக் குறைவுமில்லைஆளாளுக்கு சொந்தத்தொழில்தான்.
அக்குடும்பத்து மகன்களில் மூன்றாமவர் என்னிடம் நெருக்கமானார்வயது இருபத்தெட்டு இருக்கும்ஓவியர் மாருதி வரைந்த இளைஞன்போன்று முகத்தோற்றமும்உடற்கட்டும் முதலில் என்னைக் கவரக் காரணமாயிருந்தன

கூர்ந்த பார்வையும்சுருக்கமான பேச்சும் அடுத்து என்னைக் கவர்ந்தனஅனுபவம் தெறிக்கும் ஆன்மீகமும்தத்துவார்த்தமான பேச்சுக்களும் மேலும் கவர்ந்தனதமிழக மக்களில் பெரும்பாலோர் கார்த்திகை மாதத்தில் சுவாமி ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருக்கத் தொடங்குவார்கள்ஆனால் இந்த நண்பரோ மாதாமாதம் விரதமிருந்து அமாவாசையன்று ஏதோ ஒரு கோயிலுக்குச் செல்வதாகச் சொல்வார்.நம்குடும்பப்பெண்கள் வாரவாரம் மாதாமாதம் என எத்தனையோ விரதமிருப்பர்இவர் அப்படியுமில்லைவித்தியாசமாய் இருக்கிறதே என இவரிடம் விசாரித்தபோதுதான் பர்வதமலை’ பற்றி விளக்கினார்.மாதாமாதம் விரதமிருந்து அமாவாசையன்று செல்வது இந்த மலைக்குத்தான்.

 மக்களிடம் உள்ள கடவுள்’ வழிபாட்டுக்கும் இவரிடம் நான் கண்ட இறைவழிபாட்டுக்கும் உள்ள வித்தியாசமே என்னை இவரிடத்தில் நேசம் கொள்ள வைத்தது.
இறை என்பது நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் பெருவெளிஅந்த அகண்டத்தின் சுருக்கமே அணுஅணுவில் தொடங்கி அகண்டமாய் விரியும் பேரியக்கமே நாம் காணும் இந்த வாழ்க்கைதோற்றமும் அழிவும் நம் கையில் இல்லைபடைத்தலின் நோக்கம் அறியமுடியாததொன்றுநம் சிற்றறிவுக் கெட்டியவரை உண்மை’ உணர்ந்து கிடைத்த வாழ்வை சிறப்பாக்கிக்கொள்ளும் தேவை மனித உயிருக்கு இருக்கிறதுவாழ்வென்பது-அமைதியைத் தேடி அலையும் மனிதனுக்கு-ஓயாத போராட்டம்தான்.


இப்படியெல்லாம் எண்ணம்கொண்ட அவர் தனது பர்வதமலைப் பயணத்திற்கு என்னையும் அழைத்தார்இயற்கை நேசமும்மலைப் பயணமும் எனக்குப் பிடித்த விஷயம் என்றாலும்இவரிடம் பேசிக்கொண்டிருப்பது பிடிக்குமாதலால் இந்தப் பயணத்திற்கு ஒத்துக்கொண்டேன்.
திருச்சியிலிருந்து இரவு 12மணிக்குப் பேருந்தில் ஏறினால் 5.30க்குத் திருவண்ணாமலைஅங்கிருந்து சேலம் பேருந்து ஏறினால் அரைமணி நேரத்தில் செங்கம்அங்கு காலை டிபன் முடித்துவிட்டு மதியத்துக்கு பார்சல் பண்ணிக்கொண்டு தென்மாதிமங்கலம் கிராமத்திற்குப் பேருந்தில் சென்றால் அரைமணியில் போய்விடலாம்அங்கிருந்து மலைஏற நாலரைமணி நேரம்.அங்கு ஒரு மணிநேரம் தங்கி தரிசனம் செய்துவிட்டு மலையிறங்க இரண்டுமணிநேரம் ஆகும்அங்கிருந்து திருவண்ணாமலை வந்து கோயிலில் தரிசனம் செய்துவிட்டுஇரவு டிபனை அங்கேயே முடித்துவிட்டு பஸ் ஏறினால் அடுத்தநாள் விடியற்காலை திருச்சி வந்துவிடலாம்.
இது அவரது வழக்கமான பயணத்திட்டம்.


அதே திட்டத்தின்படியே பயணத்தைத் துவங்கினோம்.
செங்கம் வந்து இட்லிபூரி என டிபன் சாப்பிட்டுவிட்டுகையில் இரண்டு செட் பூரி வாங்கிக்கொண்டுகிராமத்துக்கு (தென்மாதிமங்கலம்டவுன்பஸ்ஸில் சென்று இறங்கிஅங்கு எலுமிச்சம்பழங்கள் ஆளுக்கொரு டஜன் வாங்கினார் நண்பர்அங்கிருந்த ஒரு கடையில் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு,நடக்கத் தொடங்கினோம்.(ஆமாம்மலை முழுக்க செருப்பில்லாமல்தான் ஏறி இறங்கினோம்(அதுதான் நல்லது என்று நண்பர் விளக்கமும் கொடுத்தார்.))வழியில் ஒரு குளம் வந்ததுஅங்கு குளித்து விட்டு(கலங்கலான தண்ணீர்.ஆனால் ஜில்லென்று இருந்தது..மனசும் ஜில்லென்று ஆகிவிட்டது)மாற்றுத்துணி அணிந்துகொண்டு நடக்கத்தொடங்கினால் சற்று நேரத்தில் பாரதிராஜா படங்களில் வருவதுபோன்ற காட்டுக்கோயில் ஒன்று தெரிந்தது.

பதினைந்து இருபதடி உயரங்களில் ஏழு முனீஸ்வரர்கள் பெரிய உருவச்சிலையாக பெரிய கண்களால் மிரட்டலாகப் பார்த்தனர்பச்சையம்மன் கோவிலாம்நண்பர் பயபக்தியுடன் அங்கிருந்த சூலாயுதத்தில் மூன்றுஎலுமிச்சம்பழங்களைக் குத்தினார்சற்று தூரம் நடந்த பின் வீரபத்திரர் சுவாமி ஆலயம்எல்லைக் காவல் தெய்வமாம்இங்கிருந்து பர்வதமலை எல்லை ஆரம்பம்.போய் தரிசனம் செய்து நல்லபடியாகத் திரும்பவேண்டித்தான் இங்கு வேண்டுதல் செய்து கொள்ளுவதுஇங்கிருந்து பார்த்தபோதுதான் தூரத்தில் தன் ஒருபக்க முழுத்தோற்றத்துடன் பர்வதமலை தெரிந்ததுஉச்சியில் லிங்கத்தைப் பதித்து வைத்ததுபோன்ற தோற்றத்தில் விரிந்து பரந்த மலை.அந்த மலை உச்சிக்குத்தான் போகப்போகிறோமா எனத் திகைப்பாக இருந்தது.

நண்பர் பல விஷயங்கள் பேசிக்கொண்டு வந்தார்அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலைபிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என்று சொல்வழக்கு உண்டாம்தென்கயிலாயம் என்ற பெயரும் உண்டாம்காஞ்சி பெரியவர் ஒருமுறை இம்மலையைக்காண வந்தபோது இம்மலையைத் தரிசித்து மெய்சிலிர்த்துசிவமே மலையாக இருக்கிறதெனமலையேறாமல்,அம்மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வணங்கிச் சென்றாராம்.

திருவண்ணாமலை
 பௌர்ணமி கிரிவலம்போல் இங்கும் பௌர்ணமி கிரிவலம் பிரசித்தமானதுஞான மார்க்கத்தில் செல்ல விரும்புபவர்கள் அமாவாசையன்று பர்வதமலை வருவார்கள் என்றும்லோகாதய வாழ்வில் சிறக்க பௌர்ணமியன்று வருவார்கள் என்றும்மொத்தத்தில் பௌர்ணமியன்றுதான் இம்மலையில் கூட்டம் அதிகமிருக்கும் என்றும் சொல்லிக்கொண்டு வந்தார்.
மலை ஏறஏற மனித சஞ்சாரமற்ற இயற்கையின் பேராட்சி ஆரம்பித்தது.சுற்றிலும் தெரிந்த மலைப் பிரதேசங்கள்நிலப் பரப்புகள்பரந்த வான்வெளி என மனம் பிரபஞ்ச வெளியில் லயிக்க ஆரம்பித்ததுஇதுவரை வாழ்ந்த வெளியிலிருந்து ஒரு தனித்த வெளிக்கு வந்திருப்பதை மனம் உணர்ந்து,அடுத்து என்ன என்று ஆர்வமுடன் நோக்கத் தலைப்பட்டதுஎது வந்தாலும் எதிர்கொள்ளும் எச்சரிக்கை மனமும் நானும் தயார் எனக் காத்திருந்தது.

தொடர்ந்து நடந்து வந்ததாலும்,படிகளற்ற பாறைகளினூடாக,மக்கள் நடந்து நடந்து அமைத்த பாதைகளில் ஏறி வந்ததாலும் மூச்சு இரைத்தது. "இந்த மலைப்பிரதேச மூலிகைக் காற்று உடம்பினுள் சென்று வருவதால்உடம்போடு உள்பாகங்கள் சுத்திகரிக்கப்பட்டு வலுவடைகின்றன.நாள்பூராவும் மூச்சுவிட நேரமின்றி உழன்று கொண்டிருக்கும் நமக்கு இது மாதிரி மலையேற்றம்தான் சரியான உடற்பயிற்சி.ஆரோக்கியமானதும்கூட’’என்று நண்பர் சொல்லிக் கொண்டு வந்தார்.
ஓரிருவர் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்வெளிநாட்டுக்காரர்கள் சிலரையும் கண்டேன்.அவர்களைப் பார்த்தபோது மனதுக்கு ஏனோ ஆறுதலாக இருந்தது.

மலையேறி இரண்டு மணிநேரம் ஆகியிருக்கலாம்மதியம் 12ஆகிவிட்டிருந்ததுமலையின் நடுப்பகுதிக்கு வந்திருந்தோம்அங்கிருந்து பார்த்தபோது மலை நந்தி உட்கார்ந்திருப்பதுபோன்ற’ அமைப்பில் இருந்தது.‘‘கைலாயமிருக்கும் திசையை நோக்கி உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்’’என்றார் நண்பர்ஆமாம்வடதிசை நோக்கித் தான் இருந்ததுஅப்போது மலையுச்சியில் பூஜை செய்வதுபோன்ற ஒலி கேட்டதுமத்தளம் முழங்க,சங்கொலி பரவ. . . ‘‘உச்சிக்கால பூஜை நடக்கிறதுஇப்ப பாருங்ககருடன் வரும்’’ என்று சொல்லிக்கொண்டே மேலே பார்த்தார்சொல்லி வைத்தாற்போல இரண்டு பருந்துகள் மலையைச் சுற்றி வந்தன‘‘என்ன இது ஆச்சரியமாக இருக்கிறதேதினமும் வருமா?’’ என்று கேட்டேன்

‘‘வரும்’’என்றார்‘‘திருவண்ணாமலைக்கு எத்தனையோ சித்தர்கள் வருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்பார்த்திருக்கிறோம்இந்தப் பர்வத மலையைச் சுற்றிலும் நிறைய சித்தர்கள் இருக்கிறார்கள்ஆனால் நம் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள்உயிர் கொண்டு உலவும் எந்தப் பிராணிகள் வடிவத்திலும் இருப்பார்கள்நீங்கள் அர்த்த ராத்திரியில் அமாவாசை இருட்டில்கூட இந்த மலைக்கு தனியாக வரலாம்மனித ரூபத்தில் சித்தர்களே உங்களை வழிநடத்திக் கூட்டிக் செல்வார்கள்எந்தப் பயமுமின்றி மலையுச்சி சென்று வழிபட்டு இறங்கிவரலாம்இருட்டில்கூட இயற்கையான வெளிச்சம் கிடைத்து வழிச்சிரமம் ஏதும் இருக்காது’’ என்று உறுதியான குரலில் தானே 


சென்று வந்ததைப்போலக் கூறினார்அதைக் குறிப்பிட்டுக் கேட்டபோது, ‘‘உண்மைதான்ஒரு தடவை இரவு தனியாக வந்திருக்கிறேன்என்னுடன் கூட யார் யாரோ வந்தார்கள்மலையுச்சி சென்று இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் பார்க்கும்போது அவர்கள் யாருமே கண்ணில் படவில்லைவேறு யார் யாரோ இருந்தார்கள்இதைப்போன்ற அனுபவம் எத்தனையோ பேருக்கு வாய்த்திருப்பதைக் கேட்டிருக்கிறேன்’’ என்றார்.
அப்போது எங்களை ஒட்டியே ஒருவர் தன் பெண்குழந்தையைத் தூக்கித் தோளில்வைத்துக் கொண்டு தன் கனத்த சரீரத்தையும் தூக்கிக் கொண்டு மூசுமூசென்று மூச்சிரைக்க ஏறிவந்தார்கையில் ஒரு பெரிய பை.எலுமிச்சம் பழங்கள் நிறைய இருந்தனஅவரும் மாதாமாதம் வந்துவிடுவாராம்நண்பரை அவருக்குத் தெரிந்திருந்ததுஅவர் இந்த மலையில் ஒரு காம்பில் ஏழுஇலைகளுள்ள வில்வ மரம் இருப்பதாகச் சொல்லி வழியில் அந்த மரத்தைக் காண்பித்தார்

ஆமாம்ஒரு காம்பில் ஏழு இலைகள் அடுக்காக இருந்தனமூன்றுஐந்துதான் அதிகபட்சம் இருக்குமாம்.அந்தமரத்தின் கீழே சூடம் ஏற்றி வணங்கிவிட்டு கொப்பை வளைத்து ஒடித்துக் கொண்டு வந்தார்இலைகளை உருவி ஆளுக்குக்கொஞ்சம் பிரசாதம் போல் தந்தார்‘‘இதை வீட்டுக்குக் கொண்டுபோய் எல்லோருக்கும் கொடுங்கநோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது.’’
மணி ஒன்றரை ஆகிவிட்டதுகால் வலித்ததுவெயில் கொளுத்தியது.காற்றும் வீசிக் கொண்டிருந்ததுவியர்வை பொங்கி வழிந்து கொண்டிருந்தது.மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்ததுநிழல்தேடி ஆங்காங்கே நின்று நின்று ஏற ஆரம்பித்தோம்கண்ணுக்கெட்டிய தூரம் மலைகள் மலைகள்.நல்ல உயரம்

இன்னும் ஒருமணி நேரமாகுமாம்வழியில் சின்னச் சின்னக் கடைகள் வைத்திருந்தார்கள்நீர்மோர்தேநீர்(அங்குக்கிடைக்கும் சுள்ளிகளை வைத்து நான்கு புறமும் சமமான கற்களை அடுப்பாகக் கொண்டு தீமூட்டி தயாரிப்பார்கள்)சுக்குக் காப்பி. . . (பான்பராக்பீடிசிகரட்புகையிலைகூடக் கிடைத்ததுபனை நொங்குகூடக் கிடைத்ததுபௌர்ணமியன்றுதான் வியாபாரம் அதிகமிருக்குமாம்இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது கடலாடி என்ற இடத்தின் வழியாக இந்த மலைக்கு மற்றுமொரு பாதை உண்டாம்செங்குத்துப் பாதையாம்அதன் வழியாகத்தான் வருவார்களாம்.
மலையின் உச்சிப்பகுதிக்கு வந்துவிட்டோம்.பெரும் கற்பாறைகள்ஏறுவதற்குப் பாதை இல்லைகடப்பாரைக் கம்பிகளைச் செருகிச் செருகி படிபோல் அமைத்திருந்தார்கள்.அதைப்பிடித்துக் கொண்டே பையப்பைய ஏறவேண்டும்காற்று வேறுகட்டியிருந்த வேட்டியைப் பிடுங்கியே தீருவதென்று பிடிவாதமாக இருந்ததுதோளில் தொங்கப்போட்டிருந்த பயணப்பையும் வேறு தொந்தரவாக இருந்தது.முதுகில் மாட்டிக்கொண்டேன்

வேறு சிந்தனையற்றுப் போனது.உருப்படியாக ஏறிச் சென்று இறங்க வேண்டுமே என்ற ஆதார பயம் பிடித்துக் கொண்டதுநம்மிடம் எஞ்சியிருக்கும் அல்லது மறைந்திருக்கும் ஆதார சக்தியின் வலிமையை இப்போதுதான் உணர்ந்தேன்கடப்பாரைப்படிகளைக் கடந்தபிறகு ஒரு பெரிய பாறையைச் சுற்றி இரும்பால்வெல்டுமெஸ் பாதை போட்டிருந்தார்கள்நண்பர் "கீழே பார்க்காதீர்கள்பாதையை மட்டும் பார்த்துக் கொண்டு நகருங்கள்என்று மறுபடியும் நினைவூட்டினார்.பாறையை ஒட்டியே மெதுவாக நடந்து சென்று கடந்து செல்ல வேண்டும்.பாறையின் எதிர்ப்பக்கம் பார்வையைத் திருப்பினால் அதலபாதாளத்தில் நிலப்பரப்பும் மலைத் தொடர்களும்

மனசு சலனமற்று ஆனால் உத்வேகத்துடன் சிவனைப் பற்றிக்கொண்டதுஎப்படியாவது உயிருடன் திரும்ப யாசித்தது.
உச்சி ஏறியாயிற்றுஎன்ன ஆச்சரியம்அங்கு இரண்டு கோவில் மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தனசுற்றுப் பாதைகள் இருந்தனஅங்கிருந்து பார்த்தபோது வானம் ஒரு பெரிய கொட்டாங்கச்சியைக் கவிழ்த்து வைத்ததுபோல் அரைக்கோள வடிவமாக இருந்ததுசுற்றிலும் மலைத்தொடர்கள்....தூரத்தில் தெரிந்த லிங்க வடிவ மலையைச் சுட்டிக் காட்ட அது திருவண்ணாமலைஎன்று நண்பர் சொன்னார்அடுத்த மலைத்தொடரை ஜவ்வாது மலைத் தொடர் என்று சொன்னார்வெண்மேகங்களும் கருமேகங்களுமாக எங்களைத் தழுவிச் சென்றபோது ...சந்தேகமேயில்லை இது வானுலகம்தான்

சற்று கீழே பார்த்தால் வயல் தோப்பு காடுகள் நடுநடுவே ஊர்கள்...நல்ல காற்று வந்ததுஒருமண்டபத்தில் நுழைந்தால் கிராமத்துச் சிவன் கோவிலுக்கு வந்திருப்பதுபோன்ற சூழல் இருந்ததுசிறிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததுஅம்மன் சிலைமுருகன்பிள்ளையார்நந்தி,வீரபத்திரர் முதலிய சிலைகள் வைக்கப்பட்டிருந்தனஇந்த உயரத்தில் எப்படி செங்கல்சுண்ணாம்புக்காரைமுட்டைதண்ணீர் கொண்டுவந்து கட்டடம் எழுப்பி இருப்பார்கள்கட்டடம் நன்னன்‘ என்ற மன்னனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாம்.

 ஒன்று புரிந்தது. . .தன்னலமற்று தன் வாழ்வையே பொதுப்பணிக்கு அர்ப்பணித்துக் காரியமாற்றும்போது எத்தகைய தடைகள் வந்தாலும் தகர்க்கும் மனோபலமும் வந்துவிடும்இதைத்தான் முயன்றால் முடியாதது இல்லைஎன்கிறார்கள்இத்தகு தன் சக்திக்கு மீறிய காரியங்கள் நடப்பது நம் ஆழ்மன ஆற்றலின் உந்துதலால்தான் என்பதும் புரிந்தது.
கர்ப்பகிரகத்தில் சிவலிங்கத்தின் முன் உட்கார்ந்து நண்பரே மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய ஆரம்பித்தார். ( பல ஆண்டுகளுக்குமுன் சிவத்தலங்களில் தாங்களே வழிபாடு செய்துகொள்வதுதான் மக்கள் வழக்கமாம்பிராமணர் மற்றும் அதிகார வர்க்க அரசியல் உள்ளே புகுந்தபின்னே வழிபாட்டிலும் இன்று காணும் மாறுதல் வந்ததுஇங்கும் அர்ச்சகர் ஒருவர் இருந்தார்வந்திருந்த ஒரு சிலரும் அர்ச்சனை செய்யச் சொல்ல அவரும் செய்தார்என் நண்பர்நாங்களே செய்துகொள்கிறோம் என்று கூறியபோது அவர் மறுக்கவில்லை.) வழிபாடு முடிந்தபின் அடுத்த மண்டபத்துக்கு வந்தால் அங்கு ஒரு ஆச்சரியம்


அந்த மண்டபத்தில் ஒரு சித்தர் தங்கியிருக்கிறார்இந்த மலைக்கு வந்து இருபத்தைந்து வருடங்களுக்குமேல் ஆகிவிட்டதாம்இதுவரை கீழே இறங்கவேயில்லையாம்வாய்திறந்து பேசவும் மாட்டாராம்மௌனச் சித்தர்ஆனால் இங்கு வருபவர்களுக்கு எல்லா நாட்களிலும் மதியத்தில் உணவு தருகிறார்எங்களுக்கும் அன்று சாம்பார் சாதம் கிடைத்ததுசாதம் தனி ருசி கொண்டிருந்ததுஅத்துடன் நாங்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தையும் பிரித்துச் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்தோம்.
ஒன்று நன்றாகப் புரிந்தது


மலையடிவாரத்தில் இருக்கும்போது வழக்கமான உலக நடப்புச் சிந்தனைகள் இருந்தனமலை ஏறஏற வழக்கமான பேச்சுகள்,சிந்தனைகளிலிருந்து விடுபட்டுவெட்ட வெளிச் சிந்தனையும் பேச்சுகளும்,தொடர்ந்து மேலேற அந்தச் சிந்தனைகள்கூட அற்றுப்போய் வெளியில் கரைந்த மனநிலை வாய்க்கப்பெற்றுதன்னை மீறிய இறை சக்தியில் சரணடைந்த மனோநிலை வாய்க்கப்பெற்றதை உணர முடிந்ததுபாரதியாரின்ஞானரதம்’ கதை படித்தபோது இத்தகு மனநிலை வாய்த்தது நினைவுக்கு வந்தது.
அங்கு சுமார் முப்பது நாற்பதுபேர் வந்திருந்தார்கள்பெரும்பாலோர் இரவு தங்குவார்களாம்


அது ரொம்ப விசேஷம் என்று நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார்எங்களுடன் வந்திருந்த அந்தப் பெரிய ஆகிருதி’, தான் பையில் கொண்டுவந்திருந்த எலுமிச்சம்பழங்களைக் கோர்த்து மாலையாக்கிக் கொண்டிருந்தார்.
சற்று தள்ளி நடந்தபோது ஓரிடத்தில் பெரிய்ய சூலாயுதம் ஒன்று பாறையில் நடப்பட்டிருந்ததுஅதன் பக்கத்தில் பாதங்கள் பாறையில் பதிந்திருந்தது.திருஅண்ணாமலையார் பாதம் என்றார்கள்நான்கு மணிக்கு இறங்க ஆரம்பித்தோம்.இரும்புப் படிக்கட்டுப்பாதை,கடப்பாரைப் பாதை என மறுபடி அதேபாதைஏறியதைவிட இறங்கும்போது சிரமமாக இருந்ததுகீழே அதல பாதாளம்ஆனால் இதுவரை யாருக்கும் இந்த மலையில் எந்தத் தீங்கும் நேர்ந்ததில்லையாம்கண் தெரியாத ஒருவர்கூட ஏறி இறங்கிச் சென்றிருக்கிறாராம்பக்தி இருந்தால் காரியம் சித்தியாகும் என்றார் நண்பர்உண்மைதான்.


இரண்டுமணிநேரத்தில் சரசரவென்று இறங்கி சமவெளி வந்து பச்சையம்மன் கோவிலை அடைந்தபோது அப்பாடா என்றிருந்தது.
கால்தான் சரியான வலிஊன்ற முடியவில்லைபாதம் பாளம் பாளமாகப் பிளந்து எரிந்ததுஅந்தக் கிராமம் வந்து செருப்பு அணியும்போதுதான் சற்று சுகமாக இருந்ததுபஸ் ஏறி திருவண்ணாமலை வந்து கோயில்முன் சூடம் ஏற்றி வணங்கிவிட்டு (விட்டால் நண்பர் கோயிலின் உள்ளே சென்று அண்ணாமலையானை வணங்கிவிட்டு வரத் தயாராக இருந்தார்நான்தான் கெஞ்சித் தடுத்தேன்அவ்வளவு கால் வலி.) ஓட்டலில் பூரி சப்பாத்தி என்று சாப்பிட்டபின் திருச்சி பஸ் ஏறி உட்கார்ந்ததுதான் தெரியும்அடுத்தநாள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்தபோது கண்டக்டர் எழுப்பிவிட்டார்.ஆட்டோ வைத்து வீடு வந்து சேர்ந்து அடுத்த மூன்று நாள் ஓய்வெடுத்தபின் உடம்பு சகஜநிலைக்கு வந்தது.
அன்றிலிருந்து எந்த உயரமான மலையைப் பார்த்தாலும் எனக்குத் தோன்றுவது இதுதான்எந்த உயரமும் அடையக்கூடியதே!

 thanks mr .pandiyan trichy 

வியாழன், 19 ஜூலை, 2012

குடியரசு தலைவரின் அதிகாரங்கள், பொறுப்புகள் பற்றிய ஒரு பார்வை
இந்தியாவின் முதல் குடிமகன், நாட்டின் உயரிய பொறுப்பாக கருதப்படும் குடியரசு தலைவருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள், அவரின் பொறுப்புகள் குறித்து தெரிந்துகொள்வோம்.


பிரிட்டன் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, குடியரசு தலைவர் பதவி, பிரிட்டன் அரசருக்கு நிகரானது. இந்திய அரசின் தலைமை நிர்வாகியான குடியரசு தலைவரின் பெயரில் தான் மத்திய அரசு இயங்குகிறது. மேலும் குடியரசு தலைவர் முப்படைகளின் தலைவராகவும் இருப்பார்.


பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றே மத்திய அரசு, நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்களை நியமிக்கவும், நீக்கவும் செய்கிறது.


நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகே சட்டமாகிறது.
முக்கிய ஒப்புந்தங்களுக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவை. கைதிகளின் தண்டனையை குறைக்கவும், தண்டனையை ரத்து செய்யவும் குடியரசு தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு. மத்திய அரசையும், மாநில அரகளையும் நீக்கும் அதிகாரமும் குடியரசு தலைவருக்கு உள்ளது.


குடியரசு தலைவரின் பெயரால் மத்திய அரசு செயல்பட்டாலும், தனியாக முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் அவருக்கு இல்லை. சட்டங்கள் இயற்றுவது முதல் அரசின் முடிவுகள் அனைத்துமே அமைச்சரவையை சார்ந்ததே. அதே சமயம், மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நேரங்களில் குடியரசு தலைவரின் முடிவு முக்கியமானது.


அரசு அமைக்க உரிமை கோருபவர்களில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை முடிவு செய்வதில் குடியரசு தலைவரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் முடிந்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் குடியரசு தலைவர் முக்கியமான முடிவை எடுத்த வரலாற்று பதிவுகளும் இந்தியாவில் உண்டு.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைமை பொறுப்பு என்ற பெருமையையும் குடியரசு தலைவர் பெற்றிருக்கிறார்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பில்லா டேவிட் பில்லா - பில்லா 2 விமர்சனம்..

பில்லா டேவிட் பில்லா  - பில்லா 2 விமர்சனம்..

பிளிஷ் உங்க பொன்னான நேரத்தை இந்த படத்துக்காக வீணாக்க வேண்டாம்...

படம் பார்க்க உள்ளே நழையும் போது இருக்கும் சந்தோசம்  மன நிம்மதி படம் முடியும் போது இல்லை...

தல வலி கழுத்து வலி தான் வருது...

டி்க்கெட் 70 ரூபா   தல வலி கழுத்து வலி மாத்திரைக்கு 150 ரூபா செலவு  இவ்ளோ செலவு பண்ணதுக்கு அப்புறம்தான் வலி எல்லாம் போச்சி.....

படம் சின்ன படம்ங்க... இரண்டு மணிநேரம்தான் ஓடுது...

படம் போட்டதுல இருந்து தல அஐித் சுட்டுகிட்டே இருக்காருங்க... எத்தனை பேர சுட்டார் என்பதை நம்ம செந்தில் அண்ணனிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

படம் முடிஞ்சுதுனு தியேட்டர் காரன் லைட் போட்டதுக்கு அப்புறம் தான்  எனக்கு நிம்மதியா இருந்தது....   எழுந்து வெளியே வந்து கேட்ட தாண்டும் போது கூட டுமில் டுமில்னு சுடர சத்தம் கேட்குதுங்க   இவங்க இம்ச  தாங்க முடியல....

படத்தோட கத நல்லா தான் ஆர்வமா இருக்கு..  ஆனா இன்னும் கொஞ்சம் தெளிவா விரிவா சொல்லி இருக்கலாம்...   

டேவிட் பில்லா எப்படி  இன்டர்போல் தேடும் மிகப்பெரிய டான் ஆகுறான் என்பதுதான் கதை....

நிறைய எதிர்பார்த்து போனேன்  ஏமாந்து வந்தேன்.....

இன்று காலைக் காட்சிக்கே தியேட்டரில்  கூட்டம் இல்லை.. இத்தனைககும் இன்று படம் வெளியான மூன்றாவது நாள்...

நான் பில்லா 1 யும் இதே மூன்றாவது நாள் காலைக்காட்சிதான் பார்த்தேன்..   செம கூட்டம்....

தியேட்டருக்கு கூட்டத்தை வரவைக்க இரண்டு வழிதான் இருக்கு
1. பில்லா 2 ஓடும் தியேட்டர் கேண்டினில் இனி தலைவலி மாத்திரை இலவசமாக கொடு்க்கப்படு்ம்னு அறிவிக்கலாம்...

2. சென்சாரில் கட் பண்ண சீன்களை இடைவேளையில் ஒளிபரப்பலாம்...

பாடல்கள் ஒனறு கூட நல்லா இல்லை...  கேங்ஸ்டர் பாடலை நான் நிறைய எதிர்பார்த்தேன்...  படத்தில் அந்த பாட்டே இல்லை..   படம் முடிந்த பிறகு தான் ஒளிபரப்புகிறார்கள்...

பிண்ணனி இசை சுமார்......

ஒளிப்பதிவு.. வசனம்.... எடிட்டிங் ...  சூப்பர்

அஐித் ஸ்டைல்  நச்.....
திருவண்ணாமலையில் 4 தியேட்டரிகளில் ஓடுகிறது...  கூட்டத்த தான் காணோம்.....
வெள்ளி, 6 ஜூலை, 2012

பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்:சுப.வீ விழாவில் கலைஞர்புத்தக வெளியீட்டு விழாக்கள் என்பவை அரசியல் பரபரப்புக்கிடையே தனக்குக் கிடைக்கும் இளைப்பாறல் என்று சொல்வார் கலைஞர்.

2ஜி வழக்கில் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த மே 15ந் தேதி, கலைஞருக்கு கூடுதல் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் வகையில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது பேராசிரியர் சுப.வீ எழுதிய வானவில் புத்தகாலயத்தின் 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா.

திராவிடத்தால் எழுந்தோம் என்ற வரலாறு, குறள் வானம் என்ற இலக்கியம், கவிதா என்ற நாவல், வந்ததும் வாழ்வதும் என்ற சுயசரிதை, பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற தத்துவ விளக்கம் என 5 வகை புத்தகங்களைக் கலைஞர் வெளியிட, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார்.
வழக்கம்போலவே வைணவத் தமிழ்ப்பாடல்களைக் கலைஞர் பாசுரங்களாக்கி பாராட்டைக் கொட்டி, அரங்கத்திலிருந்தவர்களின் கைதட்டல்களை அள்ளினார் ஜெகத்ரட்சகன்.  

புத்தகங்களைப் பற்றி பேசச்சொல்லுங்க என்று மேடையிலிருந்தவர்களிடம் தெரிவித்தார் கலைஞர். பேராசிரியர் அப்துல்காதர், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரின் உரைக்குப் பிறகு, நட்பின் அடிப்படையில் மேடைக்கு வந்த கவிஞர் வைரமுத்து, கல்லூரிக் காலத்திலிருந்து தனக்கும் சுப.வீக்குமான நட்பையும் அவரது கொள்கைப் பற்றையும் எடுத்துக் கூறினார்.
திராவிட இயக்கம் தனது நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவால்களையும், இதை இப்படியேவிட்டால் மீண்டும் நம் நெற்றியில் சூத்திரன் என்று பச்சைக் குத்திவிடும் ஆரியம் என்றும் அண்மைக்கால பத்திரிகை செய்திகளை ஆவணங்களாக எடுத்துவைத்து உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

இது எனது 27 ஆண்டுகால கனவு என நெகிழ்ச்சியுடன் ஏற்புரையாற்றிய சுப.வீ, திராவிட இயக்கத்திற்காக உழைக்கவேண்டும் என்பதைத்தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றார் நன்றிப்பெருக்குடன்.
கலைஞரின் சிறப்புரை முழுவதும் தமிழீழம் பற்றியே அமைந்திருந்தது. விரைவில் சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்த கலைஞர், பிரதமராக ராஜீவ் இருந்தபோது தன்னை டெல்லிக்கு அழைத்து, பிரபாகரனை brave man   என்று குறிப்பிட்டதுடன் நீங்களும் மாறனும் வைகோவும் கொழும்புக்குச் சென்று அங்குள்ள நிலவரங்களைச் சொல்லுங்கள்.
தமிழீழம் அமைய நான் உதவுகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்ததையும், பின்னர் அந்த வாய்ப்பு தவறிப்போனதற்கான காரணங்களை இப்போது சொல்லி விவகாரமாக்கவில்லை என்றார். தமிழீழம் அமைவதற்காக அறவழியில் டெசோ அமைப்பு தொடர்ந்து போராடும் என்று தன் பேச்சை நிறைவு செய்தார் கலைஞர்.
விழா முடிந்து வெளியேறிய பார்வையாளர்கள் பலரது கைகளிலும் சுப.வீயின் திராவிடத்தால் எழுந்தோம் என்ற புத்தகத்தைக் காண முடிந்தது.


thanks nakkheeran ilakkiyam

செவ்வாய், 22 மே, 2012

மின் ஊழியரின் அராஜகம்..... நேரடி ரிப்போர்ட்.இன்று காலை பிளஸ் டூ முடிவுகள் வெளியானது. வழக்கமா பத்தாவது பிளஸ் டூ போன்ற பொதுத்தேர்வுகளை காலை பத்து மணிக்கு தான் வெளிடுவாங்க. ஆனா இந்த வருசம் வித்தியாசமா காலை பதினோரு மணிக்குதான் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்கள். இது தெரியாமல் காலை எழுந்து பல்லை கூட விளக்காமல் தேர்வு முடிவுகளை பார்க்க இன்டர்நெட்டை ஓபன் செய்து ரிஜிஸ்டர் நம்பர்லாம் கொடுத்து எண்டர் கொடுத்தால ரிசல்ட் அன்நவுன் என வந்த து.
என்னடா இது வழக்கமா ஒன்பது மணிக்கு கட் ஆகுற கரண்ட் கூட இன்னிக்கி கட் ஆகல. ஆனா இன்னும் ரிசல்ட் வரலையேனு கடுப்பானேன். சரி எழுந்து பல்ல கூட வுட்காந்து இருக்கோமே போய் பல்ல விளக்கிட்டு காபி குடிச்சிட்டு வந்து பார்க்கலாமேனு கிளம்பி சென்று எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வந்து பார்த்தபோதுதான் நான் அந்த உண்மையை புரிந்துகொண்டேன்.
என்னை நானே திட்டிகொண்டு இருக்கும்போது பவர்கட் ஆனது. பவர் கட் ஆகும்போது சரியாக மணி பத்தே முக்கால். வழக்கமா கரண்ட் கட் ஆகிற நேரம் இல்லையாதலால் உடனடியாக வந்துவிடும் என எண்ணி சிஸ்டமை ஷட்டவன் செய்துவிட்டு காலை நாளிதழ் படிக்க ஆரம்பித்தேன். மணி பதிணொன்று, பதிணொன்னேகால் ஆகியும்  பவர் வரலை சரி பவர் ஷ்டாரை காண்டாக்ட் பண்ணலாம் என்றாலும் மொபைலில சார்ஜ் வேறு இல்லை. என்ன இன்னிக்கி எவ்வளோ முக்கியமான நாள் இன்னிக்கி போய் இப்படி கரண்ட் கட் பண்ணிட்டாங்களே என்ற வருத்த்த்துடன், என் அப்பா மூலம் ஈபி யை காண்டாக்ட் செய்து கேட்டபோதுதான் புது மாமியாரின் வில்லங்கம் புரிந்த து.
அதாவது என்ன ன்னா வழக்கமா பகல் பணிக்கு வரும் நபர் இன்று வரவில்லையாம். அதுமட்டும் இல்லாமல் எந்த ஒரு தகவலையும் கொடுக்கலையாம். இதனால் சர்க்கில் அதிகாரி இரவுப்பணி பார்த்தவரை ஒரு ஒருமணிநேரம் சேர்த்து பார்க்க சொல்லி இருக்கார். அவரும் இந்த டீலிங்குக்கு ஒப்புக்கொண்டு பணியை தொடர்ந்கிருக்கார். ஆனால் மணி பதினொன்றை நெருங்கியும் ஆள் வராத்தால் அவரு ரொம்ப கடுப்பு ஆகி பத்தே முக்காலுக்கெல்லாம் கரண்ட்டை கட் செய்துவிட்டு டாஷ்மார்கை ஏற்றிக்கொண்டு படுத்துவிட்டார்.
இதை அலுவலக ஊழியர் ஒருவர் எஸ் எஸுக்கு சென்றுபார்த்து விட்டு வந்து சொன்னது. எங்க ஊர் கிராம ம் என்பதால் யாரும் எதையும் கண்டுக்கவில்லை. இதனால் மிகவும் இன்று கஷ்டப்பட்டது பிளஸ் டூ பசங்கதான். ஒரு வழியா கரண்ட் வந்த பிறகு ரிசல்ட் பார்த்தேன். மூணு பாடம் புட்டுக்கிச்சி.  சத்தமில்லாமல் சம்பந்தபட்டவருக்கு போன் மூலம் தகவல் சொல்லிவுட்டு போனை ஸ்வுட்ச் ஆப் செய்துவிட்டு சிபி செந்தில் அண்ணாவின் சென்னை மெகா டுவிட் டப் படிக்க சென்றுவிட்டேன்

திங்கள், 21 மே, 2012

நாய் வளர்த்தால் அபராதமா ?

இன்று கலை ஒரு  பிரபல நாளிதழில்
வெளிவந்த செய்தி மிகவும் அதிர்ச்சியையும்  ஆச்சரியத்தையும் தந்தது . 
மிக முக்கியமான செய்தி என்பதால் படுக்கையில்  இருந்த படியே படித்தேன். 
 இத்தாலி அரசாங்கம்  மாநகர் மற்றும் நகரபகுதி வளர்ச்சிக்காக நிதி திரட்டும்
நோக்கத்தில்
நாய்கள், பூனைகளுக்கு புதிய வரி விதிக்க தீர்மானித்து இருக்கிறது .  பாராளுமன்ற ஆலோசனை குழு இந்த முடிவை அறிவித்து இருப்பதாகவும் ,
இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும்  எதிர்ப்பும் கிளம்பி இருப்பதாகவும் , இதனை அறிந்த இத்தாலி அரசாங்கம்  உடனடியாக அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுவிட்டதாகவும் சொல்லியது அந்த
நாளிதழ்.

நல்ல வேலை இந்த மாதிரியான கேணத்தனமான அறிவிப்பை நம்ம ஊர் வெள்ளை வேட்டி நாட்டாமைகள் யாரும் சொல்லவில்லை. இதனால் இப்போதைக்கு கொஞ்சம் நிம்மதியாக நாங்கள் நாய் வளர்ப்பில் ஈடுபடலாம் .
ஏன்னா அவங்களை போல நமக்குள் எந்த ஒரு ஒற்றுமையும் கிடையாது .
ரோட்டில் தான் உண்டு தன் வேலை உண்டு என சிவனேன்னு நடந்து செல்லும்
 நாயை கண்டாலே  கல்லெறியும் நம் மக்களை இந்த மாதிரி எந்த அறிவிப்பு வெளியானாலும் ஒன்னும்
செய்ய முடியாது. நமக்கென்ன அது நாய் வளர்க்கிரவங்களுக்கும் அவங்களுக்கும் உள்ள பிரச்சினை
என சொல்லி அவன்காவங்க வேலையை பார்க்க போய்டுவாங்க .