திங்கள், 2 ஆகஸ்ட், 2010

சங்கர் கையாண்டுள்ள Robot எந்த ரகத்தை சார்ந்தவையாக இருக்கும்.



எங்கு பார்த்தாலும் எந்திரன் பற்றிய பரபரப்புத்தான்.பொதுவாகவே சங்கர், ரஐனி, a.r.ரகுமான் என்றாலே எதிர்பார்ப்புகள் அதிகம்.இவர்கள் கூட்டணி அமைத்து விட்டால் சொல்லவா வேண்டும்.இவர்களுடன், அபிசேக்குடன் திருமணம் ஆனாலும் என்னால் மறக்க முடியாத அழகான  ஐஸ் Aunty வேற. 

பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக , திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன எந்திரன் படத்தின் திரை விமர்சனம் என்கிற பெயரில் தமக்கு பிடிக்காத கதாநாயகர்களையும்,கதாநாயகிகளையும் போட்டு தாக்கி ;பதிவை வாசிப்பவர்களின் உயிரையும் நான் எடுக்கப் போவதில்லை என்பதை நான் பெருமையுடன் சமர்ப்பிக்கின்றேன்.

எந்திரன் படம் வெளியாவதற்கு இன்னமும் சில நாட்களே இருக்கின்ற வேளையில்  எதிர்காலத்திலே விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படும் Robot கள் மனிதர்களிற்கு ஆப்பு வைக்கப் போகிறதா? அல்லது உதவி செய்ய போகிறதா? சங்கர் உருவாக்கி உள்ள எந்திரன் கூட இந்த இரண்டில் ஒன்றைத்தான் செய்யப் போகிறது. 
 
ஒரு 10 வருடங்கள் கழித்து நடக்க இருப்பதை இன்றே படங்களில் காட்டுவதில் வல்லவரான இவருடைய எந்திரனில்    ரஐனியுடன்  Robot  வருவதாக சொல்கிறார்கள்.

 
சங்கர் கையாண்டுள்ள Robot  எந்த ரகத்தை சார்ந்தவையாக இருக்கும்.

Personal Robot
 
இதை ஆண்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.பின்ன என்னங்க இது ஆண்கள் செய்ய வேண்டிய சமாச்சாரங்களையெல்லாம் சத்தமில்லாமல் செய்து முடிக்கிது.இந்த Robot பெண்களை கட்டியணைத்து உணர்ச்சியின் எல்லைகளை கடக்க செய்ய போகிறது. எதிர்காலத்தில நிச்சயமாக இது ஏடா கூடமாக அமைய போது.இந்த Robot கள் ஆண்களை வேட்டையாட போது

Personal Robot

இவை வேலைத் தளங்களில் மனிதர்களுடன் வேலை செய்ய போகின்றது.Robot களுடன் சேர்ந்து வேலை செய்வது எந்த அளவிற்கு மகிழ்ச்சியை தர போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.ஆனால் வேலையின் தரத்தில் எந்தவித குறைவும் இருக்க போவதில்லை.கதைத்து நேரத்தை வீணடிக்க போவதும் இல்லை.

Youth Robot (Girl)


எல்லா மனிதர்களிடமும் ஒரே ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது.அதுதாங்க இறுதி வரை இளமையுடன் இருக்க கூடாதா?.அதுவும் பெண்களிடத்தில் றொம்பவே அதிகம்.நம்மட எத்தனை Hero கள் "மாமி கல்யாணம் ஆயிட்டா நம்பவே முடியல என ளொள்ளு விடுறாங்க".ஆனால் இந்த Robot கள் இறுதி வரை இளமையோ இளமை. நம்ம  "ஐஸ்" மாதிரி.

Personal Robot

இந்த படத்திலே உள்ளவாறு, யார் இந்த chess போட்டியில் வெல்வார்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட Robot ஐ மனிதனாலே வெல்ல முடிவதில்லை.ஆனால் இந்த Robot களை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான ஒன்றாகும். இவை தங்களுடன்  விளையாடுகின்ற மனிதர்களின் மனநிலைக்கு ஏற்ப விளையாடுகிறது.

Personal Robot

இவை தொழில் நுட்ப வேலைகளில் ஈடுபடாது சற்று வித்தியாசமாகவே வீட்டு வேலைகளிலும் ஈடுபடுகிறது எந்த வித சலிப்பும் இல்லாமல்.மொத்தத்திலே இவை எங்களை சோம்பேறி (Lazy) ஆக்கப் போவதில்லை என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

morning Robot

நான் அதி காலையில் எழுந்தாலும் எமக்கு நித்திரை தூக்கம் கலைவது கிடையாது. நான் எழுந்தவுடன் ஒரு 10 நமிடமாவது ஒற்றை காலில் நின்ற வாறே நித்திரை கொள்வேன் தெரியுமா?.இவற்றிற்கு எல்லாம் இந்த Robot கள் முற்றுப் புள்ளி வைக்க போகிறது.இவை நமக்கு ஊற்றி தரப்போகும் Tea யில் சொர்க்கம் செல்ல போகிறோம்
karthikeyan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக