வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பத்தில் நான்கு இடம் எந்திரன் பாடல்களுக்கே!

தமிழ், தெலுங்கு [^], இந்தி [^] என இந்திய திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கின்றன சூப்பர் ஸ்டார் ரஜினி [^], நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள எந்திரன் படத்தின் பாடல்கள்.

தமிழில் டாப் 10 பாடல்களில் முதல் நான்கு இடங்களை எந்திரன் பாடல்களே பிடித்துள்ளன.

மியூசிக்வேர்ல்டு டாப் 10-ல் கிளிமாஞ்சாரே... பாடல் தொடர்ந்து இரு வாரங்களாக முதல் இடத்தில் உள்ளது. அரிமா அரிமா பாடல் இரண்டாவது இடத்திலும், காதல் அணுக்கள் மூன்றாம் இடத்திலும், இரும்பிலே ஒரு இதயம்... பாடல் நான்காம் இடத்திலும் உள்ளன.

மிர்ச்சி டாப் 10-ல் கிளிமாஞ்சாரோ முதல் இடத்திலும், மற்ற மூன்று பாடல்கள் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களிலும் உள்ளன.

இந்தியிலும் எந்திரன் பாடல்கள் புதிய சாதனைப் படைத்துள்ளன. வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் இதன் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியில் அரிமா அரிமா மற்றும் ரஹ்மான் பாடியுள்ள பாடல் பெரும் வெற்றியடைந்துள்ளன. ரஜினி நடித்த படம் ஒன்றின் பாடல்கள் இந்த அளவு இந்தியில் பேசப்படுவது இதுவே முதல்முறை. தெலுங்கில் ஏற்கெனவே பரபரப்பான விற்பனையில் உள்ளன எந்திரன் ஆடியோ சிடிக்கள்.

எந்திரனுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் தமிழில் எந்தப் படத்துக்கும் ஒப்பந்தமாகவில்லை. அவர் கைவசம் உள்ள இன்னொரு தமிழ்ப் படம் ரஜினியின் சுல்தான் தி வாரியர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கூட இந்த முறை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ் தமிழ்
தொகுப்பு கார்த்திகேயன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக