வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஏ எம் ரத்னத்துக்கு உதவும் விஜய்!

karthikeyan 
விஜய்யை வைத்து கில்லி, சிவகாசி என வெற்றிப் படங்களைத் தந்தவர் ஏ எம் ரத்னம். ஒரே நேரத்தில் 6 மெகா பட்ஜெட் [^] படங்களைத் தயாரித்தவர்.

ஆனால்.... அவருக்கும் அடி சறுக்கியது. தொடர் தோல்விகளால் பெரும் நஷ்டம் ஏற்பட, வட்டியாக மட்டுமே மாதம் ரூ 10 கோடி வரை அவர் கட்டுவதாக சமீபத்தில் ஒரு பட விழாவில் அன்பாலயா பிரபாகரன் [^] தெரிவித்தார்.

இப்போது அந்தக் கஷ்டத்திலிருந்து சற்றே மீள அவருக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது.

ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடிகர் [^] விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் விக்ரம் குமார். யாவரும் நலம் படத்தை இயக்கியவர்.

சில தினங்களுக்கு முன் விஜய்யிடம் ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா கதையைச் சொன்னாராம். கில்லி மாதிரி விறுவிறுவென திரைக்கதை இருக்க வேண்டும் என விஜய் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, அப்படியே ஆகட்டும் என்று சொன்ன விக்ரம், சாலிகிராமத்தில் உள்ள ரத்னம் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக ஸ்க்ரிட்டை பக்காவாக உருவாக்கி வருகிறாராம்.

த்ரீ இடியட்ஸ் ரீமேக் பற்றி தெளிவான ஒரு அறிவிப்பு வந்ததும், இந்தப் படத்தை அறிவித்துவிடலாம் என்று ரத்னத்துக்கு வாக்களித்துள்ளாராம் விஜய்!
thanks to: thats tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக