வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

'3 இடியட்ஸ்'-சிம்பு மறுப்பு?

karthikeyan
 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் நடிக்க சிம்பு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்தியில் மெகா ஹிட் ஆன படம் 3 இடியட்ஸ். இப்படம் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்காரர்களின் கையில் சிக்கியுள்ளது. இந்த தமிழ்- தெலுங்கு ரீமேக் படங்களில் ஹீரோக்களாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.

விஜய் நடிக்கிறார், சிம்பு நடிக்கிறார், மாதவன் நடிக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் மாதவன் நடிக்கும் ஐடியாவில் இல்லை என்று கூறி விட்டார். மன்மதன் அம்பு படத்தில் தற்போது அவர் பிசியாக உள்ளார். தமிழ் ரீமேக்கில் நடிக்கும் எண்ணமே இல்லை என்று அவர் தனது ட்விட்டர் தகவலில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிம்புவும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் இணைந்து நடிக்க சிம்புவுக்கு விருப்பம் இல்லையாம்.

விஜய்யாவது இதில் நடிப்பது உறுதியா என்றால் அதுவும் தெரியவில்லை.

படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பது மட்டுமே இப்போதைக்கு உறுதியான ஒன்றாக தெரிகிறது. அதேபோல படத்தை ஷங்கர் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது. அதுவும் கூட இதுவரை உறுதியாகத் தெரியவில்லை
thanks to: thats tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக