வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

3 இடியட்ஸ் ரீமேக்.. விஜய் ஜோடி தமன்னா?

karthikeyan
3 இடியட்ஸ் ரீமேக்கை ஷங்கர் இயக்குவதாகவும் அதில் விஜய், ஆர்யா, ஜீவா மூவரும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால் சம்பந்தப்பட ஷங்கரோ, தயாரிப்பு நிறுவனமான ஜெமினியோ அல்லது நடிகர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இன்னுமொரு செய்தி ... சுறா படத்துக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடி கட்டுகிறாராம் தமன்னா.

இந்த வாய்ப்புக்காக அவர் இயக்குநர் ஷங்கரை ரொம்பவே படுத்தி எடுத்துவிட்டாராம். சம்பளக் குறைப்பு, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் என வெகு தாராளத்தையும் ஷங்கரிடம் முன் வைக்க, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

தமன்னாவுடன் ஜோடி சேர்வதில் விஜய்க்கும் ஏக குஷியாம். பாத்ரூம் போகக் கூட செண்டிமென்ட் பார்க்கும் சினிமா உலகில், தமன்னாவுடன் ஜோடி சேர்ந்த முதல் படமான சுறாவுக்கு நேர்ந்த கதி பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லையாம்!
:thanks to thats tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக