செவ்வாய், 27 ஜூலை, 2010

அங்காடித்தெரு -

karthikeyan


  ஒரு மாதிரியாக அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தாகிவிட்டது. சில கேவலமான விமர்சனங்களும் நல்ல விமர்சனங்களும் வாசித்தாகி விட்டது . என்னத்தை சொல்லுறது விண்ணைத்தாண்டி வருவாயா போல உயர்ந்த ரசனை உழைப்புடன் அழகான நல்ல படம் வந்தாலும்(மேல்தட்டு வர்க்கமாம் !!) பிடிக்கேல்ல . அங்காடி தெரு(கீழ்த்தட்டு  வர்க்கமாம் !!) போல எளிமையான உருக்கமான உண்மையை கூறும் கதை வந்தாலும் பிடிக்கேல்ல எண்டா என்ன தான் பண்ணுறது ..(எத்தனை தமிழ் படம் எடுத்தாலும் திருந்த மாட்டானுங்க )


எவ்வளவோ திரைப்படங்கள் வந்தாலும் சில படங்கள் தான் மனதை தொடும் . அங்காடித்தெரு நிலைத்திருக்கிறது . உணர்வை தொடும் படம் . அனைவரும் பார்க்க வேண்டிய படம் .


மிக மிக நெஞ்சை தொட்ட வசனம் . "மனுஷங்க தான் தீட்டு பாப்பாங்க  கடவுள் இல்லை "
என்று நாயகன் சொல்லும் இடம் அருமை . ஆச்சாரியமான மாமியும் கொடுமை பண்ணுது ஓய். தான் மந்திரம் பூஜைகள் செய்வதாகவும் வேலை பார்க்கும் வயதுக்கு வந்த சிறுமியை( நாயகியின் தங்கை ) வீட்டிற்க்குள் வைத்திருக்காமல் நாய் கூட்டிட்க்குள் வைத்திருப்பது கொடுமை . ( ஆனா உண்மை ).

வசந்தபாலன் ஏற்க்கனவே வெயிலில் அசத்தியவர் . சிறந்த இயக்குனர்களை இயக்குனர் ஷங்கர்   ஊக்குவிப்பது உண்டு . இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளி வந்த படம் தான் வெயில் . ஒவ்வொரு உறவுகளின் உணர்வுகளையும் சரியாக பிரதிபலித்த படம் . அங்காடி தெருவில் எவ்வாறு அந்த கடை மேற்பார்வையாலரோ அதே போல வெயிலில் நாயகர்கள்  தந்தை .

கொஞ்சம் அருவருப்பான வில்லன்(  நல்ல படங்களை  வரவேற்காதவர்கள் ) பாத்திரங்களாக இருந்தாலும் இவ்வாறான  பாத்திரங்கள் நிஜத்திலும் உலாவுகின்றன. 

அங்காடித்தெரு போலவே கொழும்பிலும் பல தெருக்கள் உண்டு . பணக்கஷ்டம் குடும்ப கஷ்டம் காரணமாக எத்தனையோ பேர் இவ்வாறான  நெரிசலான கடைகளில் ( புடவைக்கடைகள் , நகைக்கடைகள் )  வேலை பார்க்கின்றனர்.  பல நண்பர்களும் தெரிந்தவர்களும் அங்கு இருப்பதால் இவ்வாறு பெரிதாக துன்புறுத்தல் நடப்பதில்லை என்பது அறிந்த உண்மை . ஆனால் சுரண்டல்கள் இல்லை என்று அடித்து கூற முடியாது . முதலாளி வர்க்கங்கள் (சிலர் ) உழைப்பாளிகளை சுரண்டி உண்பதுண்டு . எம்மிடம் அரசாங்கம் சுரண்டுவது வேறு விஷயம் . இடங்கள் வேறு ஆனால் விஷயம் ஒன்று தான் . மனித உரிமைகள் இல்லை . சுரண்டல்கள் உண்டு .

இந்த படம் வந்த பின்பு பல மனித உரிமை அமைப்புகள் கடைகளில் தேடுதல் நடத்தியதாகவும் பலர் பிடி பட்டதாகவும் கேள்விப்பட்டேன் . இயக்குனருக்கு வாழ்த்துக்கள் .அன்றாட வாழ்விட்க்காக கஷ்டப்படும் உழைப்பாளி வர்க்கத்தினரின் கதை . சன நெரிசல் மிக்க கடைத்தொகுதிகளில் வேலை பார்ப்பவர்களின் கஷ்டங்கள்.  தனியே  கொடுமைகளுடன் காட்டாமல் இடையில் காதல் ,சிறு சிறு கதைகள் வைத்து திரைக்கதையை தொய்வில்லாது கொண்டு சென்றுள்ளார் வசந்தபாலன் . 

முக்கியமாக இந்தப்படத்தில் வந்த சிறு சிறு பாத்திரகளின் நிகழ்ச்சிகள் நெருக வைத்தன. நம்பிக்கை ஊட்டிய அந்த பாத்திரங்கள் மனதில் நிற்க்கிறது .

பழைய ஆடைகளை துவைத்து அயன் செய்து பத்து ரூபாயிட்க்கு விற்கும் இளைஜன் என நிறை அயிடியா  வேறு .
 பசியால் வாடும் ஒருவன் கழிப்பறையை சுத்தம் செய்து வெளியில் இருந்து 1 ரூபாய் பணம் சேகரிப்பது . சரியில்லாத நடத்தை கொண்ட பெண் குள்ளமான ஒருவரை(  அவளது பாதையை மாற்றியவரை ) திருமணம் செய்து வாழ்வது . அவர்களுக்கு ஊனமாக( மாற்றுத்திறன் உள்ளவர்கள் ) குழந்தை பிறக்கிறது. அதை பார்த்து தாய் சந்தோஷப்படுவது ஓகே . ஆனால் அந்த குழந்தை வாழ்க்கை என்னாவது ?? இவ்வாறான   சில கேள்விகளுக்கு விடை தேடினால் கருணைக்கொலை நல்லது எனப்படும் .

நாயகன் வாழும் இடம் , வேலை செய்யும் கடையில் உணவு பரிமாறல் போன்றன மற்றயது அந்த மேற்ப்பார்வையாளர் பண்ணும் அதி பயங்கர கொடுமைகள் என காட்ச்சிகளை தான் சிலர் மிகைப்படுத்தப்பட்டு உள்ளது என்கிறார்களோ. என்னுடைய கணிப்பின் படி உண்மை தான் காட்டப்பட்டுள்ளது . ஆனால் எல்லோரிடமும் அந்த கொடூரமான  முதலாளித்துவம் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.


நாயகன் தனது எளிமையான நடிப்பால் அசத்தியுள்ளார் . பக்கா  கிராமத்து பையன். அவனுடைய நண்பனாக வரும் கனாக்காலும் காலங்களில் நடித்த பாண்டி நகைச்சுவையில் கலக்கல் . சில இடங்களில் நடிப்பும் பிரமிக்க வைக்கிறது . உருக்கமான காட்ச்சிகளில் அசத்தியுள்ளார் . 

நடிகையிடம் ஒரு குறும்புத்தனம் ஒட்டியபடியே இருந்தது . பின்னர் உருக்கமான காட்ச்சிகளில் சற்று நடித்துள்ளார் . இருக்கிற நடிகைகளின் நடிப்பை விட பெட்டெர் என்றே தோனுகிறது . 

இடையில் நாயகன் நாயகியின் தோழர்களுக்கு இடையே நடக்கும் காதல் சூபர்வயிசருக்கு
 தெரியவர சூபர் விசர்( சாரி சூபர்வயிசர்) பண்ணும் அட்டகாசம் தாங்க முடியேல்ல . தைரியமாக இருக்கும் பெண் , கோழைத்தனமாக ( குடும்ப கஷ்டததாலயாம் ) தான் காதலிக்கவில்லை என்று சூபர் வயிசருக்கு பயந்து சொல்லும் இடம் , உடனே அந்த பெண்ணின் நடிப்பு வசனங்கள் போன்றன யதார்த்தம் .

பெண்களுடன் தரக்குறைவாக நடக்கும் சூபர் வயிசறை பழி வாங்க நாயகனும் பாண்டியும் 
 மாடியில் இருந்து பொதியை போடும் காட்சி ஜாலி . எமக்கும் சந்தோசம் தான் .
பாண்டி காதல் கடிதம்( கடவுள் வாழ்த்து  ) எழுதி ஒரு பென்னிட்ட்கு கொடுப்பது ரசிக்க வைத்தது . கவிதை எழுத படும் பாடு . பாண்டியின் முக பாவங்கள் அருமை .

இதில் ஒன்றும் யாரும் வாழ்க்கையில் சொல்லாத வசனங்கள்  இல்லை . அருவருப்பான வசனங்கள் பாவிக்கப்படுவதால் அப்படியே காட்டப்பட்டுள்ளது . என்ன குடும்பமா போன முகம் சுளிக்க  வைக்கும் . குறைச்சிருக்கலாம் .

இறுதியாக காதலி (கவி ) ஊனமாகிய பின்னும் ,, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம என்ற இடம் கலங்க வைக்கிறது . 


பின்னணி இசையை விஜய் அந்தோனி கொஞ்சம் அள்ளி தெளிச்சிருக்கலாம் . படத்தில் பெரிய குறை பின்னணி  இசை. உணர்வுகளை இன்னும் ஆழமாக பிரதிபலித்திருக்கும் .

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ஏற்க்கனவே ஹிட் . உன் பேரை சொல்லும் போதே பாடல் எளிமையான அருமை . பாடல்கள் இரண்டும் தூக்கி நிறுத்துகிறது .

இடையில் ஸ்னேஹா வேற வந்து போறாங்க ( எதிர்பாக்கேல்லீங்கோ ).

பெரிய சந்தேகம் ???? முருகன் ஸ்டோர்ஸ் ( முருகனுக்கு ஒத்த பெயரா உள்ள வேற கடையா ) 
ஸ்னேஹா  விளம்பரம் ??? 
முதலாளி விளம்பர படம் எடுக்க அயிடியா கொடுக்கும் இடங்கள் எல்லாம் ஸ்னேஹாவே   நடந்ததை சொல்லி இருப்பாவோ ??    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக