செவ்வாய், 27 ஜூலை, 2010

சிங்கம் - திரை விமர்சனம்

karthikeyan


  நிறைய நாட்களாக ஒரு நல்ல கமெர்ஷியல் படம் பார்க்கவில்லை என்கிறவர்களுக்கு ஹரி கொடுத்திருக்கும் இன்னொரு மெகா ஹிட் திரைப்படம் சிங்கம் . சனி,  ஞாயிறு தமிழ்  ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இந்த படம் அமையும் . சன் பிக்சர்ஸ் க்கும் ஐங்கரனுக்கும் இன்னொரு 200/100 நாள் திரைப்பட வரிசையில் இணையும் .



ஒரே கதையோ அல்லது ரவுடி கதைகளோ அதில் திரைக்கதை என்பது  மிக மிக முக்கிய பங்கு என நிரூபித்திருக்கும் ஒரு படம் . ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இருந்த இடத்தை விட்டு எழும்ப விடாமல் வைத்திருக்கும் அளவு திரைக்கதை சுவாரசியம் . இடை வேளையின்  பின்பு திரைக்கதையின் வேகம் இன்னமும் அதிகம் . அது ஹரியின் ரகசியம் . 

முதல் ஆரம்ப காட்ச்சியிலேயே எதுக்கு துவக்கு வைச்சு கொண்டு சண்டை பிடிக்கிறார், ரவுடிகள் பறக்கிறான்களே என்று கேள்வி எழுந்தாலும் அந்த படத்திற்கு அவர் உடலை தயார் செய்திருக்கும் விதம் பார்க்க இவரு அடிக்கலாம் என்று எண்ணத்தோன்றும் .

போலீஸ் வேலையிலேயே விருப்பமில்லாத ஊர் மக்களுடன் அன்பாக இருக்கும் சூர்யா  (துறை சிங்கம் ) எவ்வாறு நெல்லூரில்(கிராமம் ) இருந்து திருவான்மியூர், ஆந்திரா வரை செல்கிறார் , இறுதியில் எப்படி ஸ்பெஷல் அதிகாரி ஆகிறார்  என்பது இயக்குனரின் கைவண்ணம். இது கதையின் கரு. இவருக்கு இடையில்  என்ன என்ன பிரச்சனை வருகிறது , அதற்க்கு யார் காரணம் என  மிகுதியை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .


இந்த படத்தை திரைக்கதையோடு சேர்த்து தூக்கி நிறுத்த சூர்யாவின் உழைப்பு படத்தில் பார்த்தால் தெரியும்  . அந்த கம்பீரமும் , வீரமும் போலீசுக்கு உரிய ஸ்டையிலில் பின்னி இருக்கிறார் . இளைஞர்கள் மனதில்  இன்னொரு மூன்று முகம்  ரஜனி வந்துவிட்டார் என்று எண்ணத்தோன்றும் . 

சூர்யாவுடன் சேர்ந்து படத்தை தூக்கி நிறுத்திய பங்கு நாசர் , பிரகாஷ் ராஜ் க்கு போய் சேரும். கில்லியில் பார்த்த அதே முகம், கோபம், நடிப்பு பிரகாஷ்ராஜை மகா நடிகனாக்குகிறது .  

முக்கியமாக நாசர்(அனுஷ்காவின் அப்பா ) போலீஸ் கானுக்கு பொன்னை கட்டி கொடுக்க மாடன் என முரட்டு பிடிவாதம் கவுரவம் பார்க்கும் இடங்களில் சபாஷ் போடலாம். என்ன ஒரு நடிப்பு . அதுவும் நீங்க கொடுத்த லயிசன்ஸ் காலாவதி ஆகிரிச்சாம் என்று அனுஷ்கா  சொல்லும் இடத்தில் கொடுப்பார் ஒரு ரி ஆக்க்ஷன். பின்னணியில் நாயகன் நீங்கள் நல்லவரா கெட்டவரா? டியூன் ஒலிக்கும் . ரசித்த காட்சி. 

லாஜிக்கில் பிழை இல்லாமல் அவளவு ரவுடிகளையும்  ஒரேயடியாக அடிக்காமல் பிளான் போட்டு தூக்குவதில் இயக்குனரும் ,அவரின்  திட்டமும், சூர்யாவின் நடிப்பும்  மிக மிக அருமை .காட்சிகள் அனைத்தும் திரைக்கதையின் வேகத்துடன் கச்சிதமான பொருத்தம் . முக்கியமாக எப் ஐ ஆரை கிழித்து போட கேட்க்கும் ரவுடியுடன் தானே எப் ஐ ஆரை கிழித்து போட்டு விட்டு எதுக்குடா எப் ஐ ஆரை கிழிச்சா ? என்று கேட்க்கும் இடம் கைதட்டல் .


தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை முதலில் கேட்க்க பிடிக்கவில்லை . தியட்டரின் காதல் வந்தாலே க்கு கிடைத்த ரெஸ்போன்ஸ் சூபர் . சிங்கம் போல நடந்து வரும் போது போடும் பின்னணி பாடல் "சிங்கம்" காட்ச்சியுடன் உண்மையில் சிங்கம் போலவே இருப்பார் சூர்யா  . வேறு எந்த பாடலும் தூக்கி நிறுத்தவில்லை . 

விவேக்கின் காமெடி ரெட்டை வசனங்களை(ஏன் இப்பிடி மாறினார் ) கொண்டு வந்தாலும்   சிரிக்க வைக்கிறார். போர்ட்டர் வேலைக்கா படிக்கிறீங்க இவளவு சுமை சுமக்கிறீன்களே என பை கொளுவிச்செல்லும் பிள்ளையை பார்த்து விவேக் கேட்ப்பார். அங்கு மட்டும் தான் பழைய விவேக் தெரிந்தார் . 


அனுஷ்கா கவர்ச்சிக்காக வந்தாலும் புப்ளிக்கிலை இருக்கிற வரவேற்ப்பு எப்பா . 

இருந்தாலும் திரைக்கதையால் கட்டிப்போட்ட சிங்கம் . தைரியமாக மாபெரும் வெற்றி என்று சொல்லலாம் . ஹரி , சூர்யா , பிரகாஷ்ராஜ் இன் உழைப்பு தெரிகிறது . ஒரு படத்தை கொண்டு சேர்க்க தாய் உணர்ந்து நடிக்க வேண்டும் என நிரூபித்துள்ளனர். நல்லதொரு கமேர்ஷால் படம் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக