செவ்வாய், 27 ஜூலை, 2010

பையா :

karthikeyan


 
நிறைய காலமா பதிவு ஒண்டும் போடேல்ல. பையா படம் பாத்திட்டு சூட்டோட சூடா  எழுதும் விமர்சனம்  . ஆனா படம் சுட்ட படமா சுடாத படமா எண்டு பாப்பம் .


விண்ணைத்தாண்டி  வருவாயாக்கு   பிறகு தியேட்டருக்கு போகலாம் எண்டு முடிவு பண்ண படம் . வந்த ஸ்டில்கள் , முக்கியமா இசைக்காக கட்டாயம் போகணும் எண்டு முடிவு பண்ணிய படம் .( டாடா சுமோ ரவுடீசை ஸ்டில்கள்ள  நான் பாக்கேல்லையே )


வழமையான தமிழ் சினிமா . காதல் படத்துக்குள் கொஞ்ச ஆக்க்ஷன்  எண்டு  போனா ஒரு ஆக்க்ஷன் படத்துக்குள்ள காதலை வேணும் எண்டே புகுத்தின மாதிரி இருக்கு . ஒரே வார்த்தையில் சொன்னா வழமையான தமிழ் சினிமா பாணியில் (முக்கியமா லிங்குசாமி பாணி ) அமுல் பேபி ஹீரோக்களை எருமைமாடுகள் போல இருக்கும் சும்மா ஒரு முப்பது பேரை அடிக்க வைப்பார் . சும்மாவா மாதவனையே ( ரன் ) அடிக்க வைச்சவர் ஆச்சே .

இது தானுங்க கதை . சுருக்கமா சொல்ல போனா வெட்டியா இருக்கும் நம்ம ஹீரோ கார்த்தி (சிவா ) க்கு பார்த்த உடனே காதல் . தமன்னா(சாரு ) மேல தான் .சந்தர்ப்ப வசத்தால கண்ணீர் சிந்தும் தமன்னாவை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து மும்பைக்கு பிரயாணம் ஆரம்பிக்கிறது . இடையிடையே  சுவாரசியங்கள் . நகைச்சுவை இல்லாத குறையை சிலர் நிவர்த்தி  செய்கின்றனர் . மும்பையில் இருக்கும் நண்பன் நகைச்சுவை கொஞ்சம் ரசிக்கலாம் ( வேற யாரும் இல்ல  அயனில் சூர்யாவுக்கு துணையாக இருப்பவர் பெயர் யாபகம் இல்லை ). கடைசீல சேருவாங்களா இல்லையா இது தான் கதை . மிகுதியை போய் தியேட்டர்ல பாருங்க .


 அட சரி பிரயாணம் தொடங்குதே இடையில  ரொமாண்டிக்கா ஏதாவது இல்லாட்டி வித்தியாசமான அணுகு முறையோ  எண்டு ஒக்காந்தா வழமையான ரவுடீஸ். அதே வெட்டாத முடியோட . ஒவ்வொருத்தரும்  ஆறு அடி .  பிரயாணம் முழுக்க பின்னால துரத்திறாங்க . அப்புறம் எங்க படத்திலை அமைதி . காதல் . ஒரே சத்தம் .

படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே என்ன முடிவுன்னும் தெரிஞ்சு போச்சில்லை. அடுத்து என்ன என்ன சீன்ன்னும் கண்டு பிடிச்சிட்டோம்ல . எத்தனை தமிழ் சினிமா பாத்திருப்பம் . 

கார்த்தி நீண்ட காலத்துக்கு பிறகு அழகா .. கொஞ்சம் சிரிக்கிறார் . இன்னும் பருத்தி வீரன் முரட்டு தன்மை போகேல்ல போல . தமன்னா வழமை போல நடிப்பில் அருமை . ரொம்ப அழகா இருகாங்க வேற . இந்த முறை லிங்குசாமி உடைகள் இடங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் .

முக்கியமா ஒளிப்பதிவாளர் மதி பாராட்ட பட வேண்டியவர் . அருமையான ஒளிப்பதிவு . ஆக்க்ஷன் சீன்களிலும் சரி , கார் சேசிங் சீன்களிலும் பின்னி எடுத்திட்டார் . அந்தோனி யோட எடிட்டிங்கும் கைகொடுத்திருக்கிறது . எடிடிங்க்ல ரவுடீஸ் எண்ணிக்கைய குறைக்க முடியாதா  ( நம்பும் விதமாக ) அன்டனி  சார் . சண்டை காட்ச்சியில் ஹீரோ  பறக்கும் சீன்களை சமாளிச்சு இருக்கீங்க எண்டு தெரியுது . 
பாம்பே வில்லன் இந்த படத்துக்கு பிளஸ் . சிம்பிளாக மிரட்டியிருக்கிறார் .


படத்தில் மிகப்பெரிய பிளஸ் யுவன் ஷங்கர் ராஜா சார் . எப்பவுமே கலக்கல் தான் . கோவா இசை எதிர் பார்ப்போட போனா , அதை விட அசத்தியிருக்கிறார் . எல்லா பாடல்களும் அருமை . அதுவும் "ஏதொ ஒன்று உன்னை கேட்க்க" திரையில் கேட்க்க மிக அருமை.  பின்னணி இசையும் அருமை . புதிதாக சேர்த்த பாடல் போல . ஒரே வார்த்தை மிக மிக அருமையான பாடல் . 


 "துளி துளி ", "அடடா மழை டா"," என் காதல் சொல்ல நேரம் இல்லை " போன்ற பாடல்கள் ஏற்க்கனவே ஹிட் . பிளஸ் "சுத்துதே சுத்துதே பூமி ".

கிளைமாக்ஸில் ஒரு சிறு மனதை தொடும் காட்சி . வழமையாக பிரயாணமோ வாழ்க்கையோ  நம்முடன் வருபவர்கள்  சிரிப்பாங்க  பழகுவாங்க  திடீரென சொல்லாமல் போயிடுவாங்க . அழகாக காட்டியிருப்பார் லிங்குசாமி . அந்த கற்பனைக்கு  பாராட்ட வேண்டும் .  அதற்க்கு "ஏதொ ஒன்று என்னை தாக்க " பின்னணியில் ஒலிக்கும் . 

காதலை கொஞ்சம் பயணத்தோடு அழுத்தமாக காட்டி இருக்கலாம் . பயணத்தை அழகாக காட்டி இருக்கலாம் . அனால் இந்த படத்தில் கொஞ்சம் லோகேஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் . சாலையோர நீர்  வீழ்ச்சி தேடி பிடித்திருக்கிறார் . 

ஆனால் காதல் என்ற விஷயத்துக்குள் ரத்தம் சிந்தவில்லை ,அதனால் பொறுத்துக்கொள்ளலாம் . சந்தர்ப்பங்கள் துரத்துகிறது எதிரியாகிறது . 

ஆக்க்ஷன், இசை  ரசிகர்களை திருப்தி செய்யும்  பையா . சுவாரசியமாக ஒரு முறை பார்க்கலாம் படம் . சில யதார்த்தம் இல்லாத விஷயத்தை யோசிக்காம விட்டால்... ( 30 பேரை ஒரு 6 சந்தர்ப்பத்திலை அடிச்சிருப்பரு ஹீரோ ).

பையா ஸ்டில்கள் மட்டும் நல்லம் .  கொஞ்சம் ரசனையோட காதலை கொஞ்சம் காட்ட முயற்ச்சி  பண்ணியிருக்கிறார் . ஆங்காங்கே தெரிகிறது . வாழ்த்துக்கள் .

ரவுடீஸ் விமர்சனம் 

பறக்கும் டாடா சுமோக்கள். வெட்டாத முடி . ஒரு கோழியை அப்பியே வேற சாபிடுறாங்க. வாகனத்தை விட்டு எட்டி பார்த்து கத்திக்கொண்டு வேற  . நாங்க பயந்துட்டோம்ல .... பாத்து பாத்து மரத்துப்போச்சு சார் ...

இன்னும் நிறைய இந்த மாதிரி படங்கள் லயின் ல நிக்கிறது தான் கவலை. சிங்கம் வரப்போகுதாம்ல . என்ன கொடுமை ?. ஸ்டில்களே கொடுமை !!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக