செவ்வாய், 27 ஜூலை, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்- விமர்சனம்


  நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு ஒழுங்கான மகிழ்ச்சியான(வயிறு குலுங்க ) திரைப்படம் பார்த்த அனுபவம் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் . உண்மையிலேயே வைச்ச குறி தப்பேல்ல மாமு .வழமையாக நகைச்சுவையுடன் கருத்துக்களை அள்ளி வழங்கும் இயக்குனர் சிம்புதேவன் படங்கள் வரிசையில்(23 ஆம் புலிக்கேசி , அறை எண் 305 இல் கடவுள் )  இன்னொரு வெற்றிப்படம். அரசியல் கருத்துக்கள் , தமிழர் பிரச்சனைகள் பற்றிய வசனங்களும்  பஞ்சமில்லை.

பிரபல முன்னணி நடிக நடிகைகள் மனோரமா , டெல்லி கணேஷ் , நாசர் , வி.எஸ் ராகவன் போன்றோரும் நமக்கு வழமையாகவே பிடித்த எம் எஸ் பாஸ்கர் , வையாபுரி , ரமேஷ் கண்ணா என பெரிய நகைச்சுவைப்பட்டாளம். இவர்களுடன் லாரென்ஸ் ,சந்தியா , பத்மப்ரியா , லட்சுமி ராயும் பாத்திரங்களில் நிறைவு . இடையில் வி எஸ் ராகவனை மட்டும் காணவில்லை.

36 வருடங்களுக்கு பிறகு ஒரு கௌபாய் திரைப்படம். ஜெய்சங்கர் இதற்க்கு முதல் ஒரு கௌபாய் படம் நடித்திருந்தார். இந்த கௌபாய் கதை நடக்கும் இடத்தின் பெயர் ஜெய் ஷங்கர் புறம் . ஆரம்பத்தில் கௌபாய் வரலாறு சினிமா நடிகர்களை வைத்து கூறுவது அருமை.


படத்தின் கதை(ஒரு புனை  கதையாக ) என்று பார்த்தால் கௌவ் பாய்(தமிழ்)  காலத்தில் நடக்கிறது .லாரென்ஸ் வைரம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு செல்லும் போது சிலரால்(வேறு கௌபாய் குழு ) காப்பாற்றப்படுகிறார். காரணம் அவர்கள் இனத்தலைவன் சிங்கம் போன்றவன். அந்த  இனத்தலைவனை
 இழந்து துடிக்கும் மக்கள்  வலுவிழந்து இரும்புக்கோட்டையில் இருக்கும் கிழட்டிடம் (நாசர் ) அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர் . அதனால் அம்மக்களை புரடச்சிகொண்டு எழ வைக்க(இரும்புக்கோட்டைக்கு எதிராக ) சிங்கம் போலவே உள்ள லாரென்சிடம் நீ சிங்கமாக நடித்தால் அதே போல உள்ள வைரத்தை தருகிறோம் என்கின்றனர் . உண்மையான சிங்கம் வீரன் அவளவு தான் வித்தியாசம் . இறுதியில் இரும்புக்கோட்டைக்கும் முரட்டு சிங்கத்திட்க்கும் நடக்கும் யுத்தம் இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதை கலகலப்பாக காட்டியுள்ளார் சிம்புதேவன் .


திரைக்கதையில் இரண்டாம் பாகத்தில் சில நீட்ச்சிகள் தெரிந்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து இல்லாமல் பண்ணி விடுகின்றனர் . அதுவும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மக்களுக்கு தேவையான கருத்துகளில் பின்னி பெடல் எடுத்து விட்டார் சிம்புதேவன் .

பின்னணி இசையை  ஜி வி பிரகாஷ் சரியாக செய்துள்ளார் . பாடல்கள் ஒன்றும் பெரிதாக ஹிட் ஆகா விட்டாலும் காட்ச்சியுடன் கேட்ப்பதட்க்கு நன்றாக உள்ளது . ஒளிப்பதிவாளர் அழகப்பன் குதிரைகளில் செல்லும் காட்ச்சிகள் , லாறேன்சின் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் போன்றவற்றில் நான்றாக செய்துள்ளார் .

விஷுவல்  பீட்டர் போல் . துப்பாக்கி சுடும் காட்சி , கார்ட்ஸ் விளையாடும் காட்சி என விஷுவலில்  விளையாடி உள்ளார் .

பாஸ்கர் செவ்விந்திய தலைவனாக வருகிறார். சந்தியா அவர் மகள் . பாஸ்கர் க்கு மொழி பெயர்ப்பாளர் ஆக வருபவர்( ஜாவா சுந்தறேசனாக  அறை எண் 305 இல் வருபவர் ) மொழி பெயர்ப்பில் பாஸ்கர் போலவே உடல் அசைவையும் மொழி பெயர்க்கும் போது  சொல்வது அசத்தல் .


3 நடிகைகள் வந்தாலும் இந்த உடைகளில் மிகவும் அழகு. பதம்ப்ப்ரியா லாறேன்சின் காதலியாக வருகிறார் . லட்சுமி ராய் நாசருடன் இருக்கிறார் . இடையில் சந்தியாவையும் சந்திக்கிறார் . நாயகிகளுக்கு பஞ்சமில்லை .வயிறு குலுங்க சிரிக்க , சிந்திக்க வைத்த வசனங்கள் தான் படத்தின் பிளஸ். சென்சார்ல தியேட்டர் ல இருக்கிற ரீலை எடுத்து வெட்டாமை விட்டா சரி டோய் . ஏகப்பட்ட மறைமுக நக்கல்கள் . அரசியல் வாதிகள் மக்களின் நிலையை புட்டு வைச்சிடாருப்பா.

நின்றய காட்ச்சிகளும் கூட.. போய் பார்க்கும் போது உற்று கவனிக்கவும் .

ஐயருக்கு கௌபாய் தொப்பி ரொம்ப ஜில்லாலங்கிடி .. குறும்பு சிம்புதேவன் . அதுவும் குகை திறக்கும் வாசலில் கல்லில் ஜவுளிக்கடை விளம்பரம் இட்டிருப்பது கடியோ கடி .

படத்தில் புதையல் எடுப்பதற்க்கு குகைக்குள் செல்வதற்க்கு துண்டு சீட்டில் கேக்கப்பட்டிருக்கும் கேள்விகளும் பதிலும் .

தமிழில் எத்தனை எழுத்துக்கள் ? -
லட்ச்சுமி ராய் - 33
அந்த அம்மா சொல்லுறது நடக்காது டோய் .. ( 33 %  இட ஒதுக்கீடு.. லொள் )

 பொங்கு தமிழனுக்கு   பிரச்சனை வந்தால் என்ன செய்வோம் ?
A . ஆக்ரோஷமாக கிரிக்கெட் பார்ப்போம்
B . சினிமாவுக்கு போய் பாலாபிஷேகம் பண்ணுவோம்
C . டீக்கடையில் ஒக்காந்து வெட்டி பேச்சு
D .கலக்கப்போவது யாரு

இடையில் வரும் வாசங்களும் பஞ்ச் :
 நாசர் பேசும் வசனங்கள்  :- "தமிழனுக்கு பிடிக்காத வார்த்தை சுய உரிமை "  

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை புரட்சி  என்பன செம கடி .


தமிலன்ல ஒருத்தனுக்கு பிரச்சனைனா இன்னொருத்தன் வர மாட்டான் .. அது தெரிஞ்சு தானே இரும்புக்கோட்டையை   இங்க கட்டியிருக்கேன் என நாசர் சொல்லுமிடம் சூபர் .

மொத்தத்தில் சொல்ல  வந்ததை சொல்லி முடித்திருக்கிறார் சிம்புதேவன் . மனுஷன் பெருசா கதைக்காட்டியும் செயல்ல காடீடுப்பா ..karthikeyan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக