சனி, 23 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில் :;\




ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில் :;\
 முதலில் இந்த படத்தை எடுத்த டைரக்டர் செல்வா வுக்கு எனது முதல் வாழ்த்துக்கள்.
மற்றும் இந்த படத்தின் ஹீரோ நடிகை ரீமா சென்னுக்கும் எனது வாழ்த்துகள்.
முழுக்க முழுக்க செல்வாவின் திறமையினால் உருவான இக்கதை என்னவென்றால் ........அக்காலத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடக்கும் சண்டையில் சோழர்கள் தோல்வியை தழுவ ,சோழமன்னன் தன வாரிசயும் ,மக்களையும் ,இன்ன பிற செல்வங்களுடன் பாண்டியர்களின் குல தெய்வ சிலையையும் சேர்த்து அநிப்பி விடுகிறார் .அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை சோழர்களை தேடி சென்றவர்கள் யாரும் திரும்பி வாரவில்லை இதில் aantriya அப்பா வும் அடங்குவார் .
      தொலைந்து போன அப்பாவை தேட ரீமா சென்னுடன் கைகோர்க்கிறார் .அவர்களுடன்  ஒரு சிறிய மிலிடரி படையும் ,அவர்களுக்கு உதவி புரிய குப்பத்து மனிதனான கார்த்தியும் ,அவரது சகாக்களும் வருகிறார்கள். வியட்நாம் அருகில் உள்ள வாயில் நுழையாத ஒரு தீவுக்கு போகிறார்கள். அந்த தீவில் சென்றவுடன் படம் பயங்கர விறு விருப்பாகிறது.
       கடல்கள், பழங்குடி மக்கள் , போர் வீரர்கள், பாம்புகள், பசி, தாகம் ,புதை குழி என எழு கண்டங்கள் உள்ளன .ஒவ்வொரு கண்டங்களை தாண்டும் போதும் பல பேர் மரணத்தை சந்திக்கிறார்கள் .அதில் ரீமா, கார்த்தி, antriya மட்டும் தப்பித்து செல்கிறார்கள் .பிறகு சோழர்கள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்து அங்கே மூவரும் டான்ஸ் ஆடி பாடுகிறார்கள்.பாடல் முடிவில் அதி பயங்கர சத்தத்தை கேட்டு பித்து பிடித்து பிறகு மாமுனியின் சோதனைக்கு பிறகு உள்ளே செல்லும் பொது கார்த்தி மட்டும்  பார்த்திபனிடம்  செல்கிறார் .(அதன் பிறகு வரும் சீன்கள் எல்லாம் தூய தமிழ் தெரிந்தவர்கள் (சிறிது தெரிந்தாலும் போதும்) மட்டுமே குழம்பாமல் பார்கிறார்கள் .மற்றவர்கள் தூய தமிழ் தெரியாமல் படக்காட்சிகளை யும் ,பின்னனி மியூசிக் யும் ரசிக்கிறார்கள் .) காரணம் அந்நிய தேசம் போகும் சோழர்கள் தூதுவன் வந்த பிறகு ,தங்கள் நாடு திரும்ப வேண்டும் என்பது முன்னோர் அறிவுரை .அனால் தூதுவன் கார்த்திக் இரு நாயகிகள் மீது உள்ள ஆசையினால் உளற ,அரசு தரப்பு அவனையும், அவனுடன் வந்தவர்களை யும் பலியிட போக ,அங்கே இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளும் ரீமா தான் தான் அந்த தூதுவள் என்றும் ,நீங்கள் உடனே தாழி நோக்கி செல்லவேண்டும் என்றும் ,அதற்கு முன் என்னுடன் இருக்க வேண்டும் என்பதை தூய தமிழ் இல் கூறுகிறார்.
                   திடிரென ரீமா மீது கதை செல்ல காரணம் என்ன வென்றால் -பாண்டிய குல வம்சாவளியான ரீமா சோழர்கள் கடத்தி சென்ற தன் பரம்பரை குல தெய்வ சிலையை மீட்க சிறு வயதில் இருந்தே சகல கலைகளையும் கற்றுகொல்கிறார் .பிறகு சோழர்களை  வருகிறார் .
                                                                                  அதன் பிறகு ரீமா தன மாயா வலைகளை விரிக்க்ரர். இதற்கிடையில் அங்கு நடக்கும் ஒரு வீர விளையாட்டில் கார்த்தி செய்து விடுகிறார்(புண்ணியம் டைரக்டர்) .அதனால் கார்த்தியை மதித்து ஏற்று கொள்ளுகிறார்கள் மக்கள். உண்மையை உணரும் ரீமா குடிக்கும் நீரில் விசத்தை கலந்து விட்டு சிலையை எடுத்துக்கொண்டு செல்கிறார். அதற்கு முன் தன அண்ணனுக்கு தகவல் சொல்லி ராணுவத்தை வர வைக்கிறார் .(வியட்நாம் தீவில் கூட மொபைல் போன் சிக்னல் நல்ல கிடைக்குது- வோடபோன் விளம்பரத்திற்கு உதவும்)
                                    
                                                     கர்ஹியை ஹீரோவாக புக் பண்ணியதால் கடைசியில் கதையை கார்த்தி மீது வைக்கிறார் டைரக்டர்.கார்த்திக்கும் ,பார்த்திபனும் தங்கள் படையோடு  ராணுவத்தை எதிர்க்கிறார்கள்.முடிவில் ராணுவம் வெற்றி பெற்றது.
இதனால் ராணுவத்திற்கு அடிமையாகும் மக்களிடம் வீரர்கள் கொடுமை காட்டுகிறார்கள் .இதனால் மன்னன் பார்த்திபன் சுயமரணம் அடைகிறார் .கார்த்தியும் தன பங்கிற்கு காட்டிற்குள் ஓடும் இளவரசனை தேடி சென்று காட்டிற்குள் மறைகிறார் .அப்பட ஒரு வழியா கதைய சொல்லி முடித்தாயிற்று .G.V.பிரகாச்குமாரின் பின்னணி இசை அருமை .ஒளிபதிவு சூப்பர் .ஆர்ட் அற்புதம். கலையில் உழைப்பு தெரிகிறது .
                           
                                    எல்லாத்தையும் விட செல்வாவின் உழைப்பு மேல் ஓங்குகிறது .
கார்த்திக்கு இந்த படத்தில் நடிக்க பெருசா வாய்ப்பு இல்ல .கதை முழுக்க முழுக்க ரீமா வை நம்பியே உள்ளது.படத்தில் இன்னொரு நடிகையாக வருபவர்க்கு முதல் பாதியில் இருந்தது கூட பிற்பாதியில் இல்லை .கார்த்தி பருத்தி வீரனை விட்டு வெளியே வரவில்லை . அங்கங்கே அதன் சாயல் தெரிகிறது. இப்படியே போனால் ஓரங்கட்டிவிடுவார்கள் .பார்த்து கார்த்தி.
                            பிரகாசின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.பாடல்கள் அடிகடி எப் எம் இல் கேட்க முடிகிறது .படத்தின் மற்றொரு பலம் ரீமா .அவர் இடத்தில வேர் ஒருவரை  வைக்க முடியவில்லை .அந்த அளவுக்கு பிரமாதம் .
                 படத்தில் பல இடங்களில் ஆங்கிலம் படத்தின் சாயல் தெரிகிறது .
செல்வாவை சுற்றிய சுழல்கள் இந்த ஹிட்டால் மறைந்து போய்விட்டன .படத்தின் கிளைமாக்ஸ்  காட்சி இலங்கை தமிழர்களை சுட்டிக்காட்டுகிறது .
பழங்கால மக்களை இவ்வளவு கருப்பா காட்டுவது.சரி படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துகள் 

hi friends

பிளாக்கர் நண்பர்கள் அனைவருக்கு என்னுடைய மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.
நான் இந்த உலகுக்கு புதியவன். என் பெயர் கார்த்திகேயன். நான் சென்னையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிரேன். இப்போதைக்கு இது போதும். நாளை முதல் நான் எழுதும் ப்லோக்குகளை படியுங்கள்.உங்கள் coments ஐ எனக்கு தெரிவிங்கள். அதில் உள்ள குறைகளை கூறுங்கள். என்னையும் என் திறமையும் விமர்சியுங்கள் , பாராட்டுங்கள்.
இப்படிக்கு.karthikeyan